2018 டக்கார் ராலியில் இந்திய பைக் பந்தய அணிகள் அசத்தல் - விபரம்!

Written By:

தென் அமெரிக்காவில் நடந்த 2018 டக்கார் ராலி பந்தயத்தில் இந்திய பைக் பந்தய வீரர் சி.எஸ்.சந்தோஷ் சிறப்பான இடத்தை பிடித்து அசத்தி இருக்கிறார். அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

2018 டக்கார் ராலி பந்தயத்தின் முடிவுகள் விபரம்!

மோட்டார்ஸ்போர்ட்ஸ் துறையின் மிக சவாலான பந்தயங்களில் ஒன்றாக டக்கார் ராலி கருதப்படுகிறது. இந்த ஆண்டுக்கான போட்டி கடந்த 6ந் தேதி துவங்கி 20ந் தேதி வரை 14 கட்டங்களாக நடந்தது.

2018 டக்கார் ராலி பந்தயத்தின் முடிவுகள் விபரம்!

2018 டக்கார் ராலியில் இந்திய நிறுவனங்களான டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஷெர்கோ டிவிஎஸ் அணியும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஹீரோ மோட்டோஸ்போர்ட்ஸ் அணியும் பங்குபெற்றன.

2018 டக்கார் ராலி பந்தயத்தின் முடிவுகள் விபரம்!

இதில், ஹீரோ மோட்டோஸ்போர்ட்ஸ் அணி சார்பில் இந்தியாவின் பிரபல பைக் பந்தய வீரர் சி.எஸ்.சந்தோஷ் பங்கு பெற்றார். டக்கார் ராலியில் அவர் 4வது முறையாகவும், இந்தியாவின் ஹீரோ நிறுவனத்தின் அணி சார்பிலும் களம் கண்டதால், அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

2018 டக்கார் ராலி பந்தயத்தின் முடிவுகள் விபரம்!

அதன்படியே, டக்கார் ராலியில் சி.எஸ்.சந்தோஷ் 34வது இடத்தை பிடித்து அசத்தி இருக்கிறார். இதுவரை அவர் பங்குகொண்ட டக்கார் ராலி பந்தயங்களில் இந்த ஆண்டு பந்தயத்தில் மிகச் சிறப்பான இடத்தை பதிவு செய்து அசத்தி இருக்கிறார்.

Recommended Video - Watch Now!
Angry Bull Almost Rammed Into A Car - DriveSpark
2018 டக்கார் ராலி பந்தயத்தின் முடிவுகள் விபரம்!

ஹீரோ நிறுவனத்தின் மற்றொரு வீரரான ஜோக்கியம் ரோட்ரிங்கஸ் விபத்து காரணமாக பந்தயத்தை முழுமையாக முடிக்க இயலவில்லை.

2018 டக்கார் ராலி பந்தயத்தின் முடிவுகள் விபரம்!

இதுபோலவே, டிவிஎஸ் சார்பில் கலந்து கொண்ட ஜோன் பெட்ரியோ 11வது இடத்தை பிடித்து அசத்தி இருக்கிறார். ஷெர்கோ டிவிஎஸ் அணியின் அர்விந்த் கேபி மற்றும் அட்ரியன் மேட்ஜ் ஆகியோர் இல்லாத நிலையில், பெட்ரியோ சிறப்பான இடத்தை பதிவு செய்துள்ளார்.

2018 டக்கார் ராலி பந்தயத்தின் முடிவுகள் விபரம்!

2018 டக்கார் ராலியில் பீஜோ அணியின் சார்பில் பங்கேற்ற ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கார்லோஸ் செயின்ஸ்[55] சாம்பியன் பட்டம் வென்றார். இவர் இரண்டு முறை உலக ராலி பந்தய சாம்பியன் பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் அணி விபரம்!

வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் அணி விபரம்!

மோட்டார்சைக்கிள் பிரிவு

 1. மேத்தியாஸ் வால்கனர்- கேடிஎம்
 2. கெவின் பெனவிட்ஸ்- ஹோண்டா
 3. டோபி பிரைஸ் - கேடிஎம்
2018 டக்கார் ராலி பந்தயத்தின் முடிவுகள் விபரம்!

க்வாட் ரக வாகனப் பிரிவு:

 1. இக்னாசியோ கசாலே - யமஹா
 2. நிகோலஸ் கவிக்லியாசோ - யமஹா
 3. ஜெரிமியாஸ் கோன்ஸாலேஸ் ஃபெரியோலி - யமஹா
2018 டக்கார் ராலி பந்தயத்தின் முடிவுகள் விபரம்!

கார் பிரிவு:

 1. கார்லோஸ் செயின்ஸ் - பீஜோ
 2. நாசர் அல் அட்டியா - டொயோட்டா
 3. கினியல் டி விலியர்ஸ் - டொயோட்டா
2018 டக்கார் ராலி பந்தயத்தின் முடிவுகள் விபரம்!

டிரக் பிரிவு

 1. எஜவார்டு நிகோலேவ் - கமாஸ்
 2. சியார்ஹெய் வியாஸோவிச் - மேஸ்
 3. ஐரத் மார்தீவ் - கமாஸ்
2018 டக்கார் ராலி பந்தயத்தின் முடிவுகள் விபரம்!

கடந்த சில ஆண்டுகளாக டக்கார் ராலியில் இந்திய அணிகள் மற்றும் வீரர்கள் அசத்தி வருகின்றனர். வரும் ஆண்டுகளில் இன்னும் சிறப்பான இடத்தை இந்திய வீரர்கள் மற்றும் அணிகள் பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

English summary
Hero MotoSports Team Rally rider CS Santosh finished the final stage of the rally in 32nd position. With this stage result, the Indian rider recorded his best-ever result in the Dakar Rally by finishing in 34th place.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark