பயன்படுத்தப்பட்ட பைக்குகள் சந்தையில் கால் பதித்தது டுகாட்டி!

இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட பைக்குகளை விற்பனை செய்யும் சந்தையில் டுகாட்டி நிறுவனம் கால் பதித்துள்ளது. விரிவான தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

பயன்படுத்தப்பட்ட பைக்குகளை விற்பனை சந்தையில் கால் பதித்தது டுகாட்டி!

டுகாட்டி அப்ரூவ்டு புரோகிராம் என்ற பெயரில் தனது பழைய பைக்குகளை டுகாட்டி நிறுவனம் ரீகண்டிஷன் செய்து விற்பனை செய்ய இருக்கிறது. பழைய பைக்குகளாக இருந்தாலும் புதிய பைக்குகளுக்கு இணையாக அவை சீர்படுத்தி தரப்படும்.

பயன்படுத்தப்பட்ட பைக்குகளை விற்பனை சந்தையில் கால் பதித்தது டுகாட்டி!

டுகாட்டி அப்ரூவ்டு புரோகிராம் மூலமாக 5 ஆண்டுகளுக்கு மிகாத 50,000 கிமீ தூரத்திற்கும் குறைவாக ஓடியிருக்கும் பயன்படுத்தப்பட்ட டுகாட்டி பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது.

பயன்படுத்தப்பட்ட பைக்குகளை விற்பனை சந்தையில் கால் பதித்தது டுகாட்டி!

மேலும், இந்த பைக்குகள் 35 விதமான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, பழுதுகள் நீக்கப்பட்ட பின்னரே விற்பனைக்கு செல்லும். இதனால், புதிய பைக்குகளுக்கு இணையான அனுபவத்தை இந்த பைக்குகளை வாங்கும் வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

பயன்படுத்தப்பட்ட பைக்குகளை விற்பனை சந்தையில் கால் பதித்தது டுகாட்டி!

இதுதவிர, கூடுதல் வாரண்டி, சாலை அவசர உதவி உள்ளிட்ட கூடுதல் திட்டங்களும் இந்த பயன்படுத்தப்பட்ட டுகாட்டி பைக்குகளுக்கு வழங்கப்படுகிறது. இதனால், நிச்சயம் வாடிக்கையாளர்கள் திருப்திகரமாக வாங்க முடியும்.

பயன்படுத்தப்பட்ட பைக்குகளை விற்பனை சந்தையில் கால் பதித்தது டுகாட்டி!

மேலும், டுகாட்டி நிறுவனத்தின் சிறப்பு தொழில்நுட்ப பிரிவு நிபுணர்களால் ஒவ்வொரு பயன்படுத்தப்பட்ட பைக்கும் பரிசோதித்து சான்றும் வழங்கப்படுகிறது. அதேபோன்று, விபத்து உள்ளிட்டவற்றில் சிக்கிய பைக் மாடலா என்பதை தீவிரமாக ஆராய்ந்த பின்னரே டெலிவிரி கொடுக்கப்படும்.

பயன்படுத்தப்பட்ட பைக்குகளை விற்பனை சந்தையில் கால் பதித்தது டுகாட்டி!

இந்த புதிய திட்டம் குறித்து பேசிய டுகாட்டி இந்தியா நிர்வாக இயக்குனர் செர்ஜி கேனோவாஸ்," டுகாட்டி பைக்குகள் மீது அதீத பிரியத்துடன் இருக்கும் இந்திய வாடிக்கையாளர்களுக்கு மிக சரியான விலையில் வாங்குவதற்கான வாய்ப்பை வழங்கும் விதத்தில் இந்த சந்தையில் கால் பதித்துள்ளோம். டுகாட்டி அப்ரூவ்டு புரோகிராம் நிச்சயம் வாடிக்கையாளர்களின் டுகாட்டி கனவை சரியான விலையில் நிறைவேற்றும் என்று நம்புகிறேன்," என்று கூறினார்.

பயன்படுத்தப்பட்ட பைக்குகளை விற்பனை சந்தையில் கால் பதித்தது டுகாட்டி!

டுகாட்டி நிறுவனம் இந்தியாவில் ஸ்க்ராம்ப்ளர், ஹைப்பர்மோட்டார்டு, மான்ஸ்டர், டயாவெல், எக்ஸ்- டயாவெல், மல்டிஸ்ட்ரேடா மற்றும் பனிகேல் என 8 மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இந்த 8 மாடல்களும் பல்வேறு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.

பயன்படுத்தப்பட்ட பைக்குகளை விற்பனை சந்தையில் கால் பதித்தது டுகாட்டி!

டுகாட்டி நிறுவனத்தின் குறைவான விலை மாடலாக ஸ்க்ராம்ப்ளர் பைக் ரூ.6.78 லட்சம் விலையில் கிடைக்கிறது. அதிக விலை கொண்ட மாடலாக பனிகேல் வி4ஆர் பைக் ரூ.51.87 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. டுகாட்டி அப்ரூவ்டு புரோகிராம் மூலமாக இந்த பைக்குகளை மிக சரியான, அதேசமயம் குறைவான விலையில் வாங்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Ducati debuts in the pre-owned motorcycle segment in India. Previously used Ducati Motorcycles available to be purchased in India now officially. Italian sportsbike manufacturer Ducati has forayed into the Indian pre-owned motorcycle market with the 'Ducati Approved' program.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X