ஹீரோ - டுகாட்டி இடையே புதிய கூட்டணி... 300சிசி பைக்கை களமிறக்க திட்டம்!

By Saravana Rajan

சூப்பர் பைக்கில் உலக புகழ்பெற்ற இத்தாலியை சேர்ந்த டுகாட்டி நிறுவனமும், உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகனமாக விளங்கும் இந்தியாவின் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் இணைந்து புதிய 300சிசி பைக்கை அறிமுகப்படுத்தவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

300சிசி பைக்கை களமிறக்க ஜோடி போடும் ஹீரோ- டுகாட்டி!!

ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனமும், டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனமும் இணைந்து புதிய 300சிசி ரக பைக்குகளை அறிமுகப்படுத்தின. இதே பாணியில், ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் டுகாட்டி நிறுவனங்கள் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

300சிசி பைக்கை களமிறக்க ஜோடி போடும் ஹீரோ- டுகாட்டி!!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் மிகப்பெரிய அளவில் டீலர் நெட்வொர்க்கையும், பைக் உற்பத்திக்கான கட்டமைப்பையும் பெற்றிருக்கிறது. அதேபோன்று, ஸ்போர்ட்ஸ் மற்றும் சூப்பர் பைக் தயாரிப்பு தொழில்நுட்பத்தில் டுகாட்டி சிறந்து விளங்குகிறது.

300சிசி பைக்கை களமிறக்க ஜோடி போடும் ஹீரோ- டுகாட்டி!!

இந்த நிறுவனங்களும் பரஸ்பரம் தங்களது சாதகமான விஷயங்களை பகிர்ந்து கொண்டு வர்த்தகத்தில் ஈடுபட இருக்கின்றன. டிவிஎஸ்- பிஎம்டபிள்யூ கூட்டணியிலிருந்து ஹீரோ - டுகாட்டி நிறுவனங்களின் ஒப்பந்தம் வேறுபடுவதாக இருக்கும்.

300சிசி பைக்கை களமிறக்க ஜோடி போடும் ஹீரோ- டுகாட்டி!!

டிவிஎஸ் - பிஎம்டபிள்யூ கூட்டணியில் பைக் உருவாக்கும் பணிகள் மட்டுமே இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து இருந்தன. உற்பத்தியை டிவிஎஸ் கவனித்து கொள்கிறது. ஆனால், பைக் விற்பனை தங்களது சொந்த ஷோரூம்கள் வழியாக விற்பனை செய்கின்றன.

300சிசி பைக்கை களமிறக்க ஜோடி போடும் ஹீரோ- டுகாட்டி!!

ஆனால், ஹீரோ - டுகாட்டி கூட்டணியில் உற்பத்தியாகும் பைக்குகள் ஹீரோ- டுகாட்டி கூட்டணியின் பிரத்யேக பிரிமியம் ஷோரூம்கள் வாயிலாக மேற்கொள்ளப்படும். தற்போதுள்ள ஹீரோ டீலர்ஷிப்புகளில் சிலவற்றை மேம்படுத்தி புரோபைக்கிங் ஷோரூம்களாக தரம் உயர்த்தவும் முடிவு செய்துள்ளன. இதன்மூலமாக, டுகாட்டி ஷோரூம்களை தனியாக அமைக்கும்போது ஏற்படும் அதிக செலவீனம் குறையும்.

300சிசி பைக்கை களமிறக்க ஜோடி போடும் ஹீரோ- டுகாட்டி!!

புதிய ஹீரோ- டுகாட்டி பைக் மாடலானது ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட சிங்கிள் சிலிண்டர் எஞ்சினை பெற்றிருக்கும். லிக்யூடு கூல்டு சிஸ்டம் கொண்டதாக இருக்கும். இந்த புதிய 300சிசி எஞ்சினானது டுகாட்டியின் சூப்பர் பைக் எஞ்சின் அடிப்படையிலான தொழில்நுட்பத்தை பெற்றிருக்கும்.

300சிசி பைக்கை களமிறக்க ஜோடி போடும் ஹீரோ- டுகாட்டி!!

300சிசி ரகத்தில் இரண்டு பைக் மாடல்களை அறிமுகம் செய்ய ஹீரோ - டுகாட்டி கூட்டணி திட்டமிட்டுள்ளது. அதன்படி, இரண்டில் குறைவான விலை மாடலானது டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்குகளின் டிசைன் அம்சங்களையும், மற்றொன்று டுகாட்டி மல்டிஸட்ரேடா பைக்கின் டிசைன் அம்சங்களையும் பெற்றிருக்கும்.

300சிசி பைக்கை களமிறக்க ஜோடி போடும் ஹீரோ- டுகாட்டி!!

புதிய 300சிசி பைக்குகளின் உற்பத்தி, வினியோக பணிகளை ஹீரோ கவனித்துக் கொள்ளும். டுகாட்டி நிறுவனத்தின் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த பைக்குகள் உருவாக்கப்பட இருப்பதால் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

300சிசி பைக்கை களமிறக்க ஜோடி போடும் ஹீரோ- டுகாட்டி!!

டிவிஎஸ் - பிஎம்டபிள்யூ மோட்டோராட் கூட்டணியில் உருவான டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்300, பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் மற்றும் ஜி 310எஸ் ஆகிய பைக் மாடல்களுக்கு போட்டியான ரகத்திலும், விலையிலும் இந்த புதிய பைக் மாடல் நிலைநிறுத்தப்படும்.

300சிசி பைக்கை களமிறக்க ஜோடி போடும் ஹீரோ- டுகாட்டி!!

ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் டுகாட்டி நிறுவனம் விற்பனை செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியான போது, அதனை கையகப்படுத்த ஹீரோ மோட்டோகார்ப், ராயல் என்ஃபீல்டு உள்ளிட்ட இந்திய பைக் நிறுவனங்கள் களமிறங்கியது நினைவிருக்கலாம்.

Source: Bikewale

Most Read Articles

English summary
Ducati, Hero MotoCorp tie up for sub-500cc premium bikes.
Story first published: Wednesday, August 15, 2018, 15:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X