சென்னையில் டுகாட்டி நிறுவனத்தின் புதிய சூப்பர் பைக் ஷோரூம் திறப்பு!!

By Saravana Rajan

சென்னையில் புதிய டுகாட்டி பைக் ஷோரூம் திறக்கப்பட்டு இருக்கிறது. இந்த புதிய சூப்பர் பைக் ஷோரூம் குறித்த விரிவானத் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

சென்னையில் டுகாட்டி நிறுவனத்தின் புதிய சூப்பர் பைக் ஷோரூம் திறப்பு!!

சென்னை தி.நகரில் இந்த புதிய ஷோரூம் அமைந்துள்ளது. டுகாட்டி நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலராக நியமிக்கப்பட்டு இருக்கும், விஎஸ்டி மோட்டார்ஸ் நிறுவனம்தான் இந்த ஷோரூமை திறந்துள்ளது.

சென்னையில் டுகாட்டி நிறுவனத்தின் புதிய சூப்பர் பைக் ஷோரூம் திறப்பு!!

இந்த புதிய பைக் ஷோரூம் 2,500 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. டுகாட்டி நிறுவனத்தின் மான்ஸ்ட்டர் வரிசை, எக்ஸ்-டயாவெல், மல்டிஸ்ட்ரேடா, ஹைப்பர்மோட்டார்டு வரிசை பைக்குகள், பனிகேல், சூப்பர்ஸ்போர்ட் மற்றும் ஸ்க்ராம்ப்ளர் என அனைத்து டுகாட்டி பைக் மாடல்களும் இந்த ஷோரூமில் காட்சிக்கு நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் டுகாட்டி நிறுவனத்தின் புதிய சூப்பர் பைக் ஷோரூம் திறப்பு!!

கிண்டி தொழிற்பேட்டையில் டுகாட்டி சூப்பர் பைக்குகளுக்கான சர்வீஸ் மையம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த சர்வீஸ் மையம் 6,000 சதுர அடி பரப்பளவில் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது.

சென்னையில் டுகாட்டி நிறுவனத்தின் புதிய சூப்பர் பைக் ஷோரூம் திறப்பு!!

"சென்னை மற்றும் அதன் அருகாமையிலுள்ள நகரங்களில் சூப்பர் பைக்குகளுக்கான சந்தை வலுவாகவும், மிக வேகமாக வளரும் சந்தையாகவும் விளங்குகின்றது. நாட்டின் தென்பகுதியிலுள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் விதத்தில் இந்த புதிய ஷோரூமை திறந்துள்ளோம்," என்று டுகாட்டி இந்தியா நிர்வாக இயக்குனர் செர்ஜி கனோவாஸ் கூறி இருக்கிறார்.

சென்னையில் டுகாட்டி நிறுவனத்தின் புதிய சூப்பர் பைக் ஷோரூம் திறப்பு!!

டெல்லி, மும்பை, புனே, ஆமதாபாத், பெங்களூர் கொச்சி மற்றும் கொல்கத்தாவை தொடர்ந்து சென்னையில் புதிய ஷோரூமை திறந்துள்ளது டுகாட்டி நிறுவனம். இது சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களை சேர்ந்த வாடிக்கையாளர்கள் டுகாட்டி பைக்குகளை எளிதாக வாங்குவதற்கும், சிறப்பான சர்வீஸ் வசதியை பெறுவதற்குமான வாய்ப்பாக அமைந்துள்ளது.

சென்னையில் டுகாட்டி நிறுவனத்தின் புதிய சூப்பர் பைக் ஷோரூம் திறப்பு!!

இந்தியாவில் டுகாட்டி நிறுவனத்தின் ஆரம்ப பட்ஜெட் கொண்ட மாடலாக ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் வரிசையில் குறைவான விலை மாடலானது ரூ.7.23 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Ducati India Opens New Superbike Showroom In Chennai.
Story first published: Wednesday, May 16, 2018, 10:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X