டுகாட்டி மான்ஸ்டர் 797 - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

டுகாட்டி நிறுவனத்தின் குறைந்த விலை மான்ஸ்டர் ரக பைக் இது தான். 400 சிசி பைக் வைத்திருப்பவர்கள் அதற்கு அதிகமான திறன் உடைய பைக் வாங்க வேண்டும் என நினைத்தால் உங்களுக்கானது பைக் தான் டுகாட்டிமான்ஸ்டர் 797

By Balasubramanian

டுகாட்டி நிறுவனத்தின் மான்ஸ்டர் சீரீஸ் பைக் இந்தியாவில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருக்கிறது. அந்நிறுவனம் கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு மான்ஸ்டர் வெர்சன் பைக்குகளை தயாரித்து வருகிறது.

டுகாட்டி மான்ஸ்டர் 797 - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

இந்தியாவில் மான்ஸ்டர் ரக பைக்குகள் குறைந்த விலையில் கிடைக்கவில்லை தற்போது முதல் முதலாக டுகாட்டி மான்ஸ்டர் 797 பைக் அறிமுகமாகியுள்ளது.

டுகாட்டி மான்ஸ்டர் 797 - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

டுகாட்டி நிறுவனத்தின் குறைந்த விலை மான்ஸ்டர் ரக பைக் இது தான். 400 சிசி பைக் வைத்திருப்பவர்கள் அதற்கு அதிகமான திறன் உடைய பைக் வாங்க வேண்டும் என நினைத்தால் உங்களுக்கானது பைக் தான் டுகாட்டி மான்ஸ்டர் 797! அப்படி என்ன தான் அந்த பைக்கில் இருக்கிறது. டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டாக கீழே பார்ப்போம் வாருங்கள்.

டுகாட்டி மான்ஸ்டர் 797 - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

இந்த பைக்கை பொருத்தவரை மான்ஸ்டர் ரக பைக்கிற்கு உண்டான அத்தனை ஸ்டைலும் அம்சங்களும் பெற்றுள்ளது. பெரிய பெட்ரோல் டேங்க், அகலமான ஹேண்டில் பார், டிரிலிஸ் பிரேம், இரண்டு பக்கம் ஸ்விங்ஆர்ம் ஆகிய பொருத்தப்பட்டிருக்கிறது.

டுகாட்டி மான்ஸ்டர் 797 - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

முக் பக்க ஹெட்லைட்டில் எல்இடி டிஆர்எல் லைட்டுகள். இதன் உயர் ரக வெரியண்ட்டில் இரண்டு ஹலஜன் லைட்டுகள். உள்ளது. ஹெட்லைட் இரண்டு ஃபோக்ஸிற்கும் நடுவே 43 மி.மீ இடைவெளியில் கச்சிதமாக பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் மோனோ ஷாக் அப்ஷர்பர் உள்ளது.

டுகாட்டி மான்ஸ்டர் 797 - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

முன்பக்க எல்.இ.டி. டிஸ்பிளே ஹெட்லைட்டிற்கு மேல்புறமாக பொருத்தப்பட்டுள்ளது. இது பகல் நேரத்தில் தெளிவாக தெரியும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் நேரம், டிரிப் மீட்டர், ஆர்.பி.எம். ஸ்பீடு, உள்ளிட்ட சில அடிப்படை தகவல்களையும், முக்கியமாக எந்த கியரில் பைக் செல்கிறது என்ற தகவலையும் பெட்ரோல் அளவு குறித்த தகவல்களையும் காட்டுகிறது.

டுகாட்டி மான்ஸ்டர் 797 - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

மான்ஸ்டர் 821 பைக்கில் உள்ளது படியே 805 மிமீ உயரம் உடைய சீட் இதில் பொருத்ப்பட்டுள்ளது. டிராபிக்கில் புகுந்து செல்ல வசதியாக குறைந்த உயரத்தில் கால் வைக்கும் பகுதி பெரிய ஹேண்டில் பார். குறைவான எடை என் சில கவனிக்க தக்க விஷயங்களும் இதில் அமைந்திருக்கிறது.

டுகாட்டி மான்ஸ்டர் 797 - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

வாடிக்கையாளர்கள் விருப்படி பின்பக்க க்வுள் அமைத்துக்கொள்ளும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சிட்டிற்கு அடியில் யூஎஸ்பி சார்ஜிங் சாக்கெட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

டுகாட்டி மான்ஸ்டர் 797 - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

இந்த பைக்கை நீங்கள் ரோட்டில் ஓட்டி சென்றால் அனைவரும் உங்களை திரும்பி பார்ப்பார்கள் என்பதை எந்த வித சந்தேகமும் இன்றி கூறமுடியும்.

டுகாட்டி மான்ஸ்டர் 797 - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

டுகாட்டி மான்ஸ்டர் 797 பைக்கின் இன்ஜினை பொருத்தவரை ஏர்கூல்டு 803 சிசி டெஸ்மோடு டுவின் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 8250 ஆர்.பி.எம்.மில் 76 பிஎச்பி பவரையும் 5750 ஆர்பிஎம்மில் 67என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது.

டுகாட்டி மான்ஸ்டர் 797 - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

இந்த பைக் வழக்கான டுகாட்டி பைக் கொடுக்கும் பெர்பாமென்ஸிற்கு மாறில்லாத பெர்பாமென்ஸை வழங்கும். இது 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் பொறுத்தப்பட்டுள்ளது. இதன் கியரை மாற்றுவது வெகு சுலபமாக அமைக்கப்பட்டுள்ளது.

டுகாட்டி மான்ஸ்டர் 797 - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

டுகாட்டி மான்ஸ்டரில் அட்லர் பவர் டார்க் பிளேட் கிளட்ச் பொருத்தப்பட்டுள்ளது. பொதுவாக இது ஸிலிப்பரி கிளாட்ச் என கூறப்பட்டாலும், இது வேகமாக கியரை குறைக்கும் போது பின் பக்க வில் லாக் ஆகாமல் தடுக்கிறது.

டுகாட்டி மான்ஸ்டர் 797 - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

ஆனால் இந்த பைக்கில் மற்ற பிரிமியம் பைக்கில் உள்ளது போல ரைடு பை ஒயர், ரைடிங் மோடுகள், டிராக்ஸன் கண்ட்ரோல், உள்ளிட்ட வசதிகள் இல்லை. இதில் ஏ.பி.எஸ் வசதி பொருத்தப்பட்டுள்ளது. இதை தேவைப்பாட்டால் மட்டும் பயன்படுத்திகொள்ளுமாறு அமைக்கப்பட்டுள்ளது.

டுகாட்டி மான்ஸ்டர் 797 - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

பைக்கை ஸ்டார்ட் செய்தவுடன் வரும் எல்டுவின் இன்ஜின் சத்தம் சிறப்பாக இருக்கிறது. இந்த பைக் வேகமாக ஓட்டும் போது வரும் குறைந்த நேரத்திலே கிடைக்கும் டார்க் பிக்கப் சிறப்பாக இருக்கிறது.

டுகாட்டி மான்ஸ்டர் 797 - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

இந்த பைக்கில் வேகமாக செல்வது என்பது இன்ஜினின் சுபாவம் என்பதால் ரைடர் அதிக அளவு சிரமப்பட தேவையில்லை. சராசரியான வேகத்தில் செல்லும் போது இதன் பவர் சிறப்பாக இருப்பதால் ஓவர் டேக் செய்யும் போது கியரை குறைத்து பிக்கப்பை அதிகப்படுத்த தேவையில்லை.

டுகாட்டி மான்ஸ்டர் 797 - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

5000 ஆர்.பி.எம்மை தாண்டியதும் பவரும் அதிகமாக வெளிப்படுகிறது. இதனால் இந்த பைக்கில் அதிகபட்சி வேகமான 210கி.மீ. வேகத்தை எட்டுவது அவ்வளவு சிரமமும் அல்ல.

டுகாட்டி மான்ஸ்டர் 797 - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

இந்த பைக்கின் இரண்டு வீல்களிலும் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்க வீலில் 320 மிமீ டிஸ்க்கில் 4 பிஸ்டன்களுடன் கூடிய எம்4.32 கேலிபர் பொருத்தப்பட்டுள்ளுது. பின் பக்கம் 245 எம்எம் டிஸ்க் பிரேக் உள்ளது.

டுகாட்டி மான்ஸ்டர் 797 - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

டுகாட்டி மான்ஸ்டர் 797 பைக்கின் டயரை பொருத்தவரை டயபோலோ ரோஸ்கோ 2 டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இது முன்பக்கம் 120/70/ZR17 என்ற அளவிலும், பின் பக்கம் 180/55/ZR17 என்ற அளவிலும் உள்ளது. இது வளைவுகளில் வேகமாக செல்லும் போது அதிக கிரப் தருகிறது.

டுகாட்டி மான்ஸ்டர் 797 - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

மற்ற சூப்பர் பைக்குகளை காட்டிலும் இது வசதியான சீட்களை கொண்டுள்ளது. டிராபிக்கில் நின்று செல்லும் போது மட்டும் சிறிதளவு சூட்டை உணர முடிகிறது. மற்ற நேரங்களில் இது சாதாரணமாகவே இருக்கிறது.

டுகாட்டி மான்ஸ்டர் 797 - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

இந்த பைக் சிட்டிக்குள் லிட்டருக்கு 16 கி.மீ., மைலேஜூம், ஹைவேயில் 18 கி.மீ., மைலேஜூம் தருகிறது. டுகாட்டியில் குறைந்த விலை பைக் இல்லாத குறையை 797 தீர்த்து வைக்கிறது. 300-400 சி.சி பைக்கில் இருந்து பெரிய பைக்கிற்கு மாற நினைப்பவர்களுக்க டுகாட்டி மான்ஸ்டர் 797 நல்ல சாய்ஸ் தான்.

டுகாட்டி மான்ஸ்டர் 797 - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

டுகாட்டி மான்ஸ்டர் 797 பைக்கின் விலை டில்லி எக்ஸ் ஷோரூம் விலைப்படி ரூ 8.5 லட்சம் என நிர்ணயக்கப்பட்டுள்ளது. இந்த விலை அந்த பைக்கி விட சற்று பவர் அதிகம் உள்ள டிரம்ப் ஸ்டிரீட் டிரிபிள் எஸ் மற்றும் கவாஸகி இசட்900 ஆகிய பைக்குகளை விட சற்று அதிகமாக உள்ளது. எனினும் டுகாட்டி பைக்குகளில் இது தான் குறைந்த விலை பைக்.

Most Read Articles
மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Ducati Monster 797 Road Test Review - The Affordable Little Italian Behemoth. Read in Tamil
Story first published: Thursday, April 26, 2018, 16:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X