2018 டுகாட்டி மான்ஸ்ட்டர் 821 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

By Saravana Rajan

புதிய டுகாட்டி மான்ஸ்ட்டர் 821 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படடு இருக்கிறது. இந்த பைக்கின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

2018 டுகாட்டி மான்ஸ்ட்டர் 821 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

டுகாட்டி மான்ஸ்ட்டர் 821 பைக் 2016ம் ஆண்டு விற்பனையில் இருந்து விலக்கப்பட்டது. இந்த நிலையில், பழைய மாடலைவிட புதிய மாடல் பல்வேறு விதத்திலும் மேம்படுத்தப்பட்ட புதிய மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

2018 டுகாட்டி மான்ஸ்ட்டர் 821 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

முக்கிய மாற்றமாக, பிஎஸ்-4 மாசு உமிழ்வு தர அம்சத்துடன் மேம்படுத்தப்பட்ட எஞ்சினுடன் புதிய டுகாட்டி மான்ஸ்ட்டர் 821 பைக் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த பைக்கில் 821சிசி எல்- ட்வின் சிலிண்டர் அமைப்புடைய எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

2018 டுகாட்டி மான்ஸ்ட்டர் 821 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 108 பிஎச்பி பவரையும், 86 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

2018 டுகாட்டி மான்ஸ்ட்டர் 821 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

புதிய டுகாட்டி மான்ஸ்ட்டர் 821 பைக்கில் அர்பன், ஸ்போர்ட் மற்றும் டூரிங் ஆகிய 3 விதமான டிரைவிங் மோடுகள் கொாடுக்கப்பட்டு இருக்கின்றன. டுகாட்டி நிறுவனத்தின் புதிய குயிக் ஷிஃப்ட் தொழில்நுட்ப வசதியும் இந்த பைக்கிற்கு கூடுதல் வலு சேர்க்கிறது.

2018 டுகாட்டி மான்ஸ்ட்டர் 821 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

புதிய மான்ஸ்ட்டர் 1200 சூப்பர் பைக்கில் இருக்கும் ஹெட்லைட் அமைப்பு இந்த புதிய மான்ஸ்ட்டர் 821 பைக்கில் டுகாட்டி பயன்படுத்தி இருக்கிறது. பெட்ரோல் டேங்க் வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. பின்புற வால்பகுதி டிசைனில் மாற்றங்கள் எதுவுமில்லை. புதிய மாடலில் டபுள் பேரல் புகைப்போக்கி குழல் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

2018 டுகாட்டி மான்ஸ்ட்டர் 821 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

புதிய டுகாட்டி மான்ஸ்ட்டர் 821 பைக்கில் டிஎஃப்டி திரை கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஓட்டுபவர் எளிதாக தகவல்களை பெறவும், இயக்குவதற்கான வசதியுடன் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

2018 டுகாட்டி மான்ஸ்ட்டர் 821 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த பைக் சிவப்பு, மஞ்சள் மற்றும் கருப்பு வண்ண தேர்வுகளில் வந்துள்ளது.

2018 டுகாட்டி மான்ஸ்ட்டர் 821 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

புதிய டுகாட்டி மான்ஸ்ட்டர் 821 பைக் ரூ.9.51 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும். சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750, ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் எஸ் மற்றும் யமஹா எம்டி-09 ஆகிய பைக் மாடல்களுடன் புதிய டுகாட்டி மான்ஸ்ட்டர் 821 பைக் போட்டி போடும்.

Most Read Articles

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Ducati Monster 821 2018 launched in India: Ducati has launched the new 2018 Monster 821 in India at Rs 9.51 lakh ex-showroom. The new Monster 821 replaces the discontinued 2016 model which wasn't BS-IV compliant.
Story first published: Wednesday, May 2, 2018, 16:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X