புதிய டுகாட்டி பனிகேல் வி4 சூப்பர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

Written By:

புதிய டுகாட்டி பனிகேல் வி4 சூப்பர் பைக் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த அட்டகாசமான சூப்பர் பைக் குறித்த விரிவான விபரங்களை தொடர்ந்து காணலாம்.

புதிய டுகாட்டி பனிகேல் வி4 சூப்பர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

மோட்டோஜீபி பைக் பந்தயத்திற்கான உருவாக்கப்பட்ட டுகாட்டி டெஸ்மோசெடிசி சூப்பர் பைக்கின் எஞ்சினுடன் சாதாரண சாலைகளுக்கு ஏற்ற மாடலாக டுகாட்டி பனிகேல் வி4 மாடல் வடிவமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இத்தாலியில் உள்ள மிலன் நகரில் நடந்த சர்வதேச மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் இந்த புதிய சூப்பர் பைக்கை டுகாட்டி பார்வைக்கு கொண்டு வந்தது.

புதிய டுகாட்டி பனிகேல் வி4 சூப்பர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த நிலையில், அடுத்த இரு மாதங்களில் இந்த புதிய சூப்பர் பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. டுகாட்டி பனிகேல் வி4 மற்றும் வி4 எஸ் என்ற இரு மாடல்களும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. மொத்தம் 20 வி4 மற்றும் வி4 எஸ் பைக்குகள் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்படும்.

Recommended Video - Watch Now!
Ducati 959 Panigale Crashes Into Buffalo - DriveSpark
புதிய டுகாட்டி பனிகேல் வி4 சூப்பர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

டுகாட்டி டெஸ்மோசெடிசி பைக்கில் இருக்கும் எஞ்சினை அடிப்படையாகக் கொண்ட எஞ்சின்தான் புதிய பனிகேல் வி4 பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. டுகாட்டி நிறுவனத்தின் முதல் 4 சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட சாதாரண சாலைகளுக்கான மாடல் என்ற பெருமையும் பெற்றிருக்கிறது.

புதிய டுகாட்டி பனிகேல் வி4 சூப்பர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த சூப்பர் பைக்கில் இருக்கும் 1,103சிசி எஞ்சின் அதிகபட்சமாக 211 பிஎச்பி பவரையும், 124 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த புதிய சூப்பர் பைக்கில் ஸ்ட்ரீட், ஸ்போர்ட் மற்றும் ரேஸ் ஆகிய மூன்று டிரைவிங் மோடுகள் உள்ளன.

புதிய டுகாட்டி பனிகேல் வி4 சூப்பர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

டுகாட்டி பனிகேல் வி4 பைக் 198 கிலோ எடை கொண்டது. மற்றொரு மாடலான பனிகேல் வி4 எஸ் மாடல் 195 கிலோ எடை கொண்டது. இரு மாடல்களுமே எடைக்கும், எஞ்சினின் சக்தியை வெளிப்படுத்தும் திறனுக்குமான விகிதத்தில் மிகச் சிறப்பான மாடலாக இருக்கின்றன. கிலோவுக்கு 1.082 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறனை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.

புதிய டுகாட்டி பனிகேல் வி4 சூப்பர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய டுகாட்டி வி4 சூப்பர் பைக்கில் அலுமினிய அலாய் முன்பக்க ஃப்ரேம் கட்டமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் முன்புறத்தில் 43 மிமீ ஷோவா பிபி4 அட்ஜெஸ்ட்டபிள் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் சாக்ஸ் மோனோஷாக் அப்சார்பர் சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ஒற்றை பகுதியில் தாங்கிப் பிடிக்கும் அலுமினிய ஸ்விங் ஆர்ம் இடம்பெற்றிருக்கிறது.

புதிய டுகாட்டி பனிகேல் வி4 சூப்பர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

அதேநேரத்தில், டுகாட்டி பனிகேல் வி4 எஸ் சூப்பர் பைக்கில் முன்புறத்தில் எலக்ட்ரானிக் கம்ப்ரஷன் வசதியுடன் கூடிய 43மிமீ ஓலின்ஸ் என்ஐஎக்ஸ்30 அட்ஜெஸ்ட்டபிள் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் ஓலின்ஸ் டிடிஎக்ஸ்36 மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. பின்புற சஸ்பென்ஷன் எலக்ட்ரானிக் டேம்பர் கன்ட்ரோல் வசதியை பெற்றிருக்கிறது.

புதிய டுகாட்டி பனிகேல் வி4 சூப்பர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

டுகாட்டி பனிகேல் வி4 சூப்பர் பைக்கில் முன்சக்கரத்தில் 4 பிஸ்டன் காலிபர்கள் கொண்ட பிரெம்போ மோனோபிளாக் கொண்ட 330மிமீ விட்டமுடைய இரண்டு செமி ப்ளோட்டிங் டிஸ்க்குகளுடன் கூடிய பிரேக் சிஸ்டம் உள்ளது. பின்புறத்தில் 2 பிஸ்டன் காலிபர்கள் கொண்ட 245மிமீ விட்டமுடைய டிஸ்க் பிரேக் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு பாஷ் கார்னரிங் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் வலு சேர்க்கிறது.

புதிய டுகாட்டி பனிகேல் வி4 சூப்பர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

டுகாட்டி பனிகேல் வி4 சூப்பர் பைக்கில் 17 அங்குல விட்டமுடயை 5 ஸ்போக் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. பைரெல்லி டயாப்லோ சூப்பர்கார்ஸா எஸ்பி 200/60 டயர்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

புதிய டுகாட்டி பனிகேல் வி4 சூப்பர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய டுகாட்டி பனிகேல் வி4 சூப்பர் பைக்கில் இரண்டு எல்இடி ஹெட்லைட்டுடகள் மற்றும் எல்இடி பகல்நேர விளக்குகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இரண்டு அடுக்குகள் கொண்ட ஃபேரிங் பேனல்கள் கொடுக்கப்பட்டு இருப்பதுடன், அதன் மூலமாக எஞ்சினை குளிர்விப்பதற்கான காற்று உள்செலுத்தப்படும் அமைப்புடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய டுகாட்டி பனிகேல் வி4 சூப்பர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

டுகாட்டி நிறுவனத்தின் பிரபலமான டைமண்ட் பெட்ரோல் டேங்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பின்புறத்தில் எல்இடி டெயில் லைட்டுகள் வசீகரத்தை கூட்டுகின்றன.

புதிய டுகாட்டி பனிகேல் வி4 சூப்பர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

டுகாட்டி வி4 பனிகேல் பைக்கில் டிஎஃப்டி திரை கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. பைக்கின் இயக்கம் குறித்த அனைத்து தகவல்களையும் பெற முடியும்.

புதிய டுகாட்டி பனிகேல் வி4 சூப்பர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பைக்கில் டுகாட்டியின் டிராக்ஷன் கன்ட்ரோல் எவோ, டுகாட்டி ஸ்லைடு கன்ட்ரோல் எவோ, டுகாட்டி வீலி கன்ட்ரோல் எவோ, டுகாட்டி பவர் லான்ச், டுகாட்டி ஸ்லிப்பர் க்ளஸ்ட்ச் மற்றும் எஞ்சின் பிரேக்கிங் உள்ளிட்ட பல முக்கிய பாதுகாப்பு வசதிகள் இயக்கம் குறித்த விபரங்களையும் இதில் பெற முடியும்.

புதிய டுகாட்டி பனிகேல் வி4 சூப்பர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய டுகாட்டி பனிகேல் வி4 பைக் ரூ.20.53 லட்சம் விலையிலும், வி4 எஸ் பைக் ரூ.25.29 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. வரும் ஜூலை மாதம் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கும்.

புதிய டுகாட்டி பனிகேல் வி4 சூப்பர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

முதலில் முன்பதிவு செய்யும் இரண்டு இந்திய உரிமையாளர்களுக்கு மலேசியாவின் செபாங் ரேஸ் டிராக்கில் நடைபெற இருக்கும் டுகாட்டி ரைடு எக்ஸ்பீரியன்ஸ் என்ற ரேஸ் டிராக்கில் சூப்பர் பைக் ஓட்டி பார்க்கும் வாய்ப்பை பெறுவர் எனறும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Ducati Panigale V4 launched in India. Prices for the Ducati Panigale in India start at Rs 20.53 lakh (ex-showroom) with deliveries starting in July.
Story first published: Monday, January 29, 2018, 17:56 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark