இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக் லான்ச் ஆவது எப்போது தெரியுமா?

By Arun

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக் வரும் 27ம் தேதி இந்தியாவில் லான்ச் செய்யப்படவுள்ள நிலையில், அதற்கான புக்கிங் தொடங்கியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக்கிற்கான புக்கிங் தொடங்கியது.. லான்ச் ஆவது எப்போது தெரியுமா?

இத்தாலி நாட்டின் மிலன் நகரில், ஒவ்வொரு ஆண்டும் மோட்டார் சைக்கிள் ஷோ நடைபெற்று வருகிறது. இது EICMA ஷோ அல்லது மிலன் மோட்டார் சைக்கிள் ஷோ என அழைக்கப்படுகிறது. இதன்படி கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம், மிலன் மோட்டார் சைக்கிள் ஷோ நடைபெற்றது.

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக்கிற்கான புக்கிங் தொடங்கியது.. லான்ச் ஆவது எப்போது தெரியுமா?

அப்போது டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக் (Ducati Scrambler 1100) காட்சிக்கு வைக்கப்பட்டது. டுகாட்டி நிறுவனம், ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக்குகளை காட்சிப்படுத்தியது அதுவே முதல் முறை. அதன்பின் உலகின் பல்வேறு நாடுகளில், ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக்குகளை டுகாட்டி நிறுவனம் லான்ச் செய்தது.

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக்கிற்கான புக்கிங் தொடங்கியது.. லான்ச் ஆவது எப்போது தெரியுமா?

எனினும் டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக், இந்தியாவில் லான்ச் செய்யப்படவில்லை. இந்த சூழலில் வரும் 27ம் தேதி, டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக லான்ச் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக்கிற்கான புக்கிங் தொடங்கியது.. லான்ச் ஆவது எப்போது தெரியுமா?

ஸ்டாண்டர்டு, ஸ்பெஷல் மற்றும் ஸ்போர்ட் என மூன்று வேரியண்ட்களில், டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக் லான்ச் செய்யப்படவுள்ளது. இதன் விலை 12-13 லட்ச ரூபாய்க்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக்குகளுக்கான புக்கிங் தற்போது தொடங்கியுள்ளது.

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக்கிற்கான புக்கிங் தொடங்கியது.. லான்ச் ஆவது எப்போது தெரியுமா?

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக்கின் 3 வேரியண்ட்களிலும், 1,079 சிசி, ஏர் கூல்டு, எல் டிவின் இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின், 7,500 ஆர்பிஎம்மில் 85 பிஎச்பி பவர் மற்றும் 4,750 ஆர்பிஎம்மில் 88 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தி, சீறிப்பாயும் வல்லமை வாய்ந்தது.

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக்கிற்கான புக்கிங் தொடங்கியது.. லான்ச் ஆவது எப்போது தெரியுமா?

இந்த இன்ஜின், 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. டுகாட்டி மான்ஸ்டர் 1100 பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் அதே இன்ஜின்தான், டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக்கிலும் பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம்.

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக்கிற்கான புக்கிங் தொடங்கியது.. லான்ச் ஆவது எப்போது தெரியுமா?

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக்கின் ஸ்டாண்டர்டு வேரியண்ட் '62 யெல்லோ' மற்றும் 'ஷைனிங் பிளாக்' கலர் ஆப்ஷனையும், ஸ்பெஷல் வேரியண்ட் 'கஸ்டம் க்ரே' கலர் ஆப்ஷனையும், ஸ்போர்ட் வேரியண்ட் 'வைப்பர் பிளாக்' கலர் ஆப்ஷனையும் பெற்றுள்ளன.

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக்கிற்கான புக்கிங் தொடங்கியது.. லான்ச் ஆவது எப்போது தெரியுமா?

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக், ஆக்டிவ், டூரிங் மற்றும் சிட்டி என மூன்று ரைடிங் மோட்களையும் பெற்றுள்ளது. மார்க்கெட்டில் ட்ரையம்ப் த்ரக்ஸ்டன் ஆர் பைக்கிற்கு, டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக் கடும் சவாலை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  1. மலைவாழ், கிராமப்புற மக்களுக்கு வரப்பிரசாதம்.. முதல் முறையாக இந்தியாவில் போர்ட்டபிள் பெட்ரோல் பங்க்
  2. கேரளா வெள்ளத்தில் சிக்கிய கார்களை செகண்ட் ஹேண்டாக வாங்கலாமா?
  3. ரூ.48,400 விலையில் புதிய டிவிஎஸ் ரேடியான் 110 பைக் விற்பனைக்கு அறிமுகம்!!
Most Read Articles

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Ducati Scrambler 1100 Booking Commenced. Read in Tamil
Story first published: Thursday, August 23, 2018, 17:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X