”மின்சார வாகனங்கள் குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்க வேண்டாம்” ஹீரோ நிறுவனம்..!!

பெட்ரோல் வாகனங்களை விட மின்சார வாகனங்கள் மூன்று மடங்கு விலை பெறும்: ஹீரோ நிறுவன தலைவர்..!!

By Azhagar

பெட்ரோல் மாடல் பைக்குகளை விட மின்சார திறன் பெற்ற பைக்குகள் மூன்று மடங்கு விலை பெறும் என ஹீரோ மோட்டார்கார்ப் நிறுவனத்தின் தலைவர் பவன் முன்ஜால் தெரிவித்துள்ளார்.

பெட்ரோலை விட 3 மடங்கு விலை அதிகம் பெறும் மின்சார வாகனங்கள்..!!

இந்தியாவில் விற்பனையாகும் 100சிசி பெட்ரோல் மாடல் பைக்குகள் ரூ. 40,000 முதல் ரூ. 50,000 வரையிலான விலையில் விற்பனையாகி வருகிறது.

பெட்ரோலை விட 3 மடங்கு விலை அதிகம் பெறும் மின்சார வாகனங்கள்..!!

மின்சார வகானங்களுக்கான கட்டுமானம், எஞ்சின் ரக வாகனங்களை விட குறைவு என்றாலும், அவற்றிற்கான பேட்டரி மதிப்பு அதிகமாகத்தான் உள்ளது.

பெட்ரோலை விட 3 மடங்கு விலை அதிகம் பெறும் மின்சார வாகனங்கள்..!!

இதை கருத்தில் கொண்டு டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தித்தளத்திற்கு பவன் முன்ஜால் அளித்துள்ள நேர்காணலில்,எதிர்காலத்தில் 100சிசி எஞ்சின் பைக்குகளுக்கு மாற்றாக மின்சார வாகனங்கள் இருக்காது என தெரிவித்துள்ளார்.

பெட்ரோலை விட 3 மடங்கு விலை அதிகம் பெறும் மின்சார வாகனங்கள்..!!

மேலும் அவர், எஞ்சின் திறன் பெற்ற வாகனங்களை போலவே, மின்சார பைக்குகளுக்கான பேட்டரியின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்துக்கொண்டே தான் இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

Recommended Video

Under-Aged Rider Begs The Policewomen To Spare Him - DriveSpark
பெட்ரோலை விட 3 மடங்கு விலை அதிகம் பெறும் மின்சார வாகனங்கள்..!!

தொடர்ந்து அவர், 2030ம் ஆண்டிற்குள் இந்தியாவில் வாகன பயன்பாடு மின்சார ஆற்றலுக்கு மாற்ற அரசு காலக்கெடு விதித்தாலும், அந்த இலக்கை மெதுவாக்கத்தான் அடைய முடியும்.

பெட்ரோலை விட 3 மடங்கு விலை அதிகம் பெறும் மின்சார வாகனங்கள்..!!

இந்தியாவில் ஹீரோ நிறுவனம் மின்சார வாகன உற்பத்திக்கு என்று தனி பிராண்டு தொடங்கி அதன் கீழ் உற்பத்தியை ஆரம்பித்துள்ளது.

ஹீரோ பிராண்டை தாங்கி தயாராகும் மின்சார வாகனங்கள் இரண்டு ஆண்டுகள் காத்திருப்பிற்கு பிறகு விற்பனைக்கு வருகிறது.

பெட்ரோலை விட 3 மடங்கு விலை அதிகம் பெறும் மின்சார வாகனங்கள்..!!

ஹீரோ மோட்டார்கார்ப் நிறுவனம் மின்சார பைக்குகளின் மேம்பாட்டு பணிக்காக ஏத்தர் எனர்ஜி என்ற புதிய நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது. விரைவில் இந்த ஆரம்ப நிலை நிறுவனம் தயாரித்துள்ள மின்சார வாகனங்களும் விற்பனைக்கு வரவுள்ளன.

பெட்ரோலை விட 3 மடங்கு விலை அதிகம் பெறும் மின்சார வாகனங்கள்..!!

டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் நேர்காணலில் பேசிய பவன் முன்ஜால், இந்தியாவில் மின்சார வாகன கட்டமைப்பிற்கான பணிகளை அரசு விரைவாக தொடங்கிட கோரிக்கை விடுத்துள்ளார்.

பெட்ரோலை விட 3 மடங்கு விலை அதிகம் பெறும் மின்சார வாகனங்கள்..!!

இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் கட்டமைப்பு சீராக கொண்டுவரப்பட்டால், மின்சார வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்களும் அடுத்தடுத்த பணிகளை தொடங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

பெட்ரோலை விட 3 மடங்கு விலை அதிகம் பெறும் மின்சார வாகனங்கள்..!!

தொடர்ந்து அவர் தற்போதைய நிதிநிலையில் மின்சார வாகனங்களுக்கான தயாரிப்பு பணிகளில் எந்த சமரசமும் செய்ய முடியாது. மக்களிடம் மின்சார வாகன பயன்பாடு அதிகரிக்கும் போது மானியம் தருவது குறித்து நிறுவனங்கள் யோசிக்கும் என்று பவன் முன்ஜால் கூறியுள்ளார்.

பெட்ரோலை விட 3 மடங்கு விலை அதிகம் பெறும் மின்சார வாகனங்கள்..!!

ஹீரோ மோட்டார்கார்ப் நிறுவனம் ப்ரீமியம் மோட்டார் சைக்கிள்கள் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிரது. எக்ஸ்ட்ரீம் 200 ஆர் மற்றும் ஆரம்ப-நிலை அட்வென்ச்சர் மோட்டார் சைக்கிள் என ஹீரோவின் புதிய தயாரிப்புகள் அடுத்தடுத்து களமிறங்கவுள்ளன.

Most Read Articles
English summary
Read in Tamil: Electric Bike Prices To Be Three Times The Cost Of Petrol Powered Motorcycle. Click for Details...
Story first published: Friday, February 16, 2018, 11:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X