எம்ஃப்ளக்ஸ் ஒன்... இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் சூப்பர் பைக் விற்பனைக்கு வந்தது!

Written By:

எம்ஃப்ளக்ஸ் ஒன் எலக்ட்ரிக் சூப்பர் பைக் கிரேட்டர் நொய்டாவில் நடந்து வரும் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் சூப்பர் பைக் மாடலாக வந்திருக்கும் எம்ஃப்ளக்ஸ் எலக்ட்ரிக் சூப்பர் பைக் குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

எம்ஃப்ளக்ஸ் ஒன்... இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் சூப்பர் பைக் விற்பனைக்கு வந்தது!

எம்ஃப்ளக்ஸ் ஒன் எலக்ட்ரிக் சூப்பர் பைக் இரண்டு மாடல்களில் விற்பனைக்கு வந்துள்ளது. லிமிடேட் எடிசன் மாடலாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.

இந்தியாவில் 199 பைக்குளும், வெளிநாடுகளில் 300 பைக்குளும் விற்பனை செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

எம்ஃப்ளக்ஸ் ஒன்... இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் சூப்பர் பைக் விற்பனைக்கு வந்தது!

எம்ஃப்ளக்ஸ் ஒன் சூப்பர் பைக்கில் 3 ஃபேஸ் ஏசி இன்டக்ஷன் மின் மோட்டார் பொருத்தப்ப்டடு இருக்கிறது. இந்த மோட்டாருக்கு 9.7 kWh திறன் வாய்ந்த சாம்சங் செல்கள் கொண்ட பேட்டரி மூலமாக மின்சாரம் வழங்கப்படுகிறது.

எம்ஃப்ளக்ஸ் ஒன்... இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் சூப்பர் பைக் விற்பனைக்கு வந்தது!

இந்த சூப்பர் பைக்கின் மின் மோட்டார் அதிகபட்சமாக 80.4 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. ஆனால், அதிகபட்சமாக 71 பிஎச்பி பவரை அளிக்கும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.

எம்ஃப்ளக்ஸ் ஒன்... இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் சூப்பர் பைக் விற்பனைக்கு வந்தது!

புதிய எம்ஃப்ளக்ஸ் ஒன் மின்சார சூப்பர் பைக்கின் எஞ்சின் 84 என்எம் டார்க் திறனை வழங்கும் திறன் வாய்ந்தது. அதிகபட்சமாக 75 என்எம் டார்க் திறனை வழங்கும் விதத்தில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. சிங்கிள் ஸ்பீடு கியர்பாக்ஸ் மூலமாக மின் மோட்டார் சக்தியானது பின் சக்கரத்திற்கு கடத்தப்படுகிறது.

Recommended Video - Watch Now!
New Maruti Swift Launch: Price; Mileage; Specifications; Features; Changes
எம்ஃப்ளக்ஸ் ஒன்... இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் சூப்பர் பைக் விற்பனைக்கு வந்தது!

புதிய எம்ஃப்ளக்ஸ் ஒன் மின்சார சூப்பர் பைக் 0 - 100 கிமீ வேகத்தை 3.0 வினாடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக மணிக்கு 200 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது.

எம்ஃப்ளக்ஸ் ஒன்... இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் சூப்பர் பைக் விற்பனைக்கு வந்தது!

புதிய எம்ஃப்ளக்ஸ் ஒன் மின்சார பைக்கின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும்போது நகர்ப்புறத்தில் 200 கிமீ தூரம் வரையிலும், நெடுஞ்சாலையில் செல்லும்போது 150 கிமீ தூரம் வரையிலும் செல்லும். இதன் பேட்டரி 30 நிமிடங்களில் 85 சதவீதம் வரை சார்ஜ் ஆகும் திறன் வாய்ந்தது.

எம்ஃப்ளக்ஸ் ஒன்... இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் சூப்பர் பைக் விற்பனைக்கு வந்தது!

சாதாரண மாடலில் முன்புறத்தில் 43மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் 46மிமீ கேஸ் சார்ஜ்டு ஷாக் அப்சார்பரும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. விலை உயர்ந்த மாடலில் ஓலின்ஸ் ரேஸ் அண்ட் டிராக் அப்சைடு டவுன் ஃபோர்க்ககுளும், பின்புறத்தில் 46மிமீ ஓலின்ஸ் மோனோட்யூப் கேஸ் சார்ஜ்டு ஷாக் அப்சார்பரும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

எம்ஃப்ளக்ஸ் ஒன்... இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் சூப்பர் பைக் விற்பனைக்கு வந்தது!

இந்த மின்சார சூப்பர் பைக்கில் முன்சக்கரத்தில் 4 பிஸ்டன் காலிபர்கள் கொண்ட 300மிமீ விட்டமுடைய இரண்டு டிஸ்க்குகளுடன் கூடிய பிரேக் சிஸ்டமும், பின்புறத்தில் 220மிமீ விட்டமுடைய பிரேம்போ டிஸ்க் பிரேக் சிஸ்டமும் உள்ளது.

எம்ஃப்ளக்ஸ் ஒன்... இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் சூப்பர் பைக் விற்பனைக்கு வந்தது!

சாதாரண மாடலில் க்ளாஸ் ஃபைபர் பாடி பேனல்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. விலை உயர்ந்த மாடலில் கார்பன் ஃபைபர் பேனல்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த பைக்169 கிலோ எடை கொண்டது. இருக்கை உயரம் தரையிலிருந்து 810மிமீ என்பதும் குறிப்பிடத்தக்கது.

எம்ஃப்ளக்ஸ் ஒன்... இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் சூப்பர் பைக் விற்பனைக்கு வந்தது!

புதிய எம்ஃப்ளக்ஸ் ஒன் மின்சார சூப்பர் பைக்கில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. டேப்லெட் கம்ப்யூட்டர் போன்ற இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

எம்ஃப்ளக்ஸ் ஒன்... இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் சூப்பர் பைக் விற்பனைக்கு வந்தது!

புதிய எம்ஃப்ளக்ஸ் ஒன் மின்சார பைக்கின் சாதாரண மாடல் ரூ.6 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், விலை உயர்ந்த மாடல் ரூ.11 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது. சிறப்பம்சங்களில் மிக அசத்தலாக இருக்கும் இந்த மின்சார சூப்பர் பைக் விலையில் சற்று நிதானித்திருந்தால் நிச்சயம் பெரும் வரவேற்பை பெறும் என்று கூறலாம்.

English summary
Auto Expo 2018: Emflux One launched in India. The Emflux One is India's first ever electric superbike. Prices for the Emflux One electric Superbike in India start At Rs 6 lakh for the regular model.
Story first published: Thursday, February 8, 2018, 12:35 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark