கோவை கம்பெனியின் கியருடன் கூடிய முதல் எலக்ட்ரிக் பைக்..ஏனுங்க ஒரு சார்ஜில் 200 கிமீ பயணிக்கலாமுங்க!

கோயமுத்தூரை மையமாக கொண்டு செயல்படும், இ மோஷன் மோட்டார்ஸ் நிறுவனம், தங்களின் புதிய எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

By Arun

கோயமுத்தூரை மையமாக கொண்டு செயல்படும், இ மோஷன் மோட்டார்ஸ் நிறுவனம், தங்களின் புதிய எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் என்றாலும், மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகம், சிங்கிள் சார்ஜில் 200 கிலோ மீட்டர் என அதில் இடம்பெற்றிருக்கும் வசதிகள், உலகின் முன்னணி நிறுவனங்களுடன் போட்டியிடும் வகையில் மிரட்டலாக உள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

கார்ப்ரேட்களை திணறடிக்கும் கோவை கம்பெனியின் எலக்ட்ரிக் பைக்... ஒரு சார்ஜில் 200 கிமீ பயணிக்கலாம்...

தமிழகத்தின் கோயமுத்தூரை மையமாக கொண்டு, இ மோஷன் மோட்டார்ஸ் நிறுவனம் செயல்படுகிறது. எலக்ட்ரிக் டூவீலர் தயாரிப்பில், இ மோஷன் மோட்டார்ஸ் ஈடுபட்டு வருகிறது. தங்களின் புதிய எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளை உருவாக்கும் முயற்சியில், கடந்த 7 ஆண்டுகளாக, இந்நிறுவனம் ஈடுபட்டிருந்தது.

கார்ப்ரேட்களை திணறடிக்கும் கோவை கம்பெனியின் எலக்ட்ரிக் பைக்... ஒரு சார்ஜில் 200 கிமீ பயணிக்கலாம்...

இ மோஷன் சர்ஜ் என பெயரிடப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளை, அந்நிறுவனம் இதுவரை சுமார் 30 ஆயிரம் கிலோ மீட்டர்கள் வரை டெஸ்ட் செய்து பார்த்துள்ளது. இதன்முடிவில், அந்த மோட்டார் சைக்கிளின் மிரட்டலான வசதிகளை இ மோஷன் மோட்டார்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது.

கார்ப்ரேட்களை திணறடிக்கும் கோவை கம்பெனியின் எலக்ட்ரிக் பைக்... ஒரு சார்ஜில் 200 கிமீ பயணிக்கலாம்...

இ மோஷன் சர்ஜ் மோட்டார் சைக்கிளில், 40 Ah லித்தியம் இயான் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும். இதன்மூலம் ஒரு முறை சார்ஜ் செய்தால், 100 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்கலாம். அதுமட்டுமல்லாமல் 2வது பேட்டரி ஆப்ஷன் ஒன்றையும் இ மோஷன் மோட்டார்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

கார்ப்ரேட்களை திணறடிக்கும் கோவை கம்பெனியின் எலக்ட்ரிக் பைக்... ஒரு சார்ஜில் 200 கிமீ பயணிக்கலாம்...

இதன்மூலம் ஒட்டுமொத்தமாக 200 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்கலாம். இந்த பேட்டரியில், மின்னல் வேகத்தில் சார்ஜ் ஏறும். வெறும் 30 நிமிடத்தில் சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாம். ஆனால் 30 நிமிடத்தில், முழு சார்ஜையும் ஏற்றி விட முடியுமா? அல்லது 80 சதவீதம் வரை சார்ஜ் ஏறுமா? என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

கார்ப்ரேட்களை திணறடிக்கும் கோவை கம்பெனியின் எலக்ட்ரிக் பைக்... ஒரு சார்ஜில் 200 கிமீ பயணிக்கலாம்...

அத்துடன் சூரிய ஒளி மூலமாக சார்ஜ் ஏற்றிக்கொள்ளும் ஆப்ஷனும், இ மோஷன் சர்ஜ் மோட்டார் சைக்கிளில் இடம்பெற்றிருக்கும். ஆனால் அதுகுறித்த முழு விபரங்களையும் இ மோஷன் மோட்டார்ஸ் நிறுவனம் தற்போதைக்கு வெளியிடவில்லை.

கார்ப்ரேட்களை திணறடிக்கும் கோவை கம்பெனியின் எலக்ட்ரிக் பைக்... ஒரு சார்ஜில் 200 கிமீ பயணிக்கலாம்...

இ மோஷன் சர்ஜ் மோட்டார் சைக்கிளில், 4 ஸ்பீடு மேனுவர் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். இதில், ரிவர்ஸ் கியர் ஆப்ஷனும் அடங்கும். ஆனால் ரிவர்ஸ் கியரில் பயணிக்கும்போது, சற்று மெதுவாகதான் செல்லும். நெருக்கமான இடங்களில் பார்க்கிங் செய்பவர்களுக்கு, ரிவர்ஸ் கியர் ஆப்ஷன் வரப்பிரசாதமாக இருக்கும். கியர் ஆப்ஷனுடன் வரும் முதல் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் இதுதான் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

கார்ப்ரேட்களை திணறடிக்கும் கோவை கம்பெனியின் எலக்ட்ரிக் பைக்... ஒரு சார்ஜில் 200 கிமீ பயணிக்கலாம்...

இ மோஷன் சர்ஜ் மோட்டார் சைக்கிளின் டாப் ஸ்பீடு மணிக்கு 120 கிலோ மீட்டர். பூஜ்ஜியத்தில் இருந்து 60 கிலோ மீட்டர் என்ற வேகத்தை வெறும் 4 வினாடிகளுக்காக எட்டிவிடும். இதுமட்டுமல்லாமல் 7 இன்ச் எல்இடி டச் ஸ்கீரின் இன்ஸ்ட்ரூமெண்ட் பேனல், க்ளவுட் கனெக்டிவிட்டி, ஜிபிஎஸ், திருட்டில் இருந்து காப்பாற்றி கொள்வதற்கான வசதிகளும் கூட இ மோஷன் சர்ஜ் மோட்டார் சைக்கிளில் இடம்பெற்றிருக்கும்.

கார்ப்ரேட்களை திணறடிக்கும் கோவை கம்பெனியின் எலக்ட்ரிக் பைக்... ஒரு சார்ஜில் 200 கிமீ பயணிக்கலாம்...

பெங்களூரு நகரை மையமாக கொண்டு செயல்படும் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் 340 மற்றும் 450 ஆகிய 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சமீபத்தில் லான்ச் செய்யப்பட்டன. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உலகில், இவை இரண்டும் ஓர் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவை அனைத்தையும், இ மோஷன் சர்ஜ் தூக்கி சாப்பிட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார்ப்ரேட்களை திணறடிக்கும் கோவை கம்பெனியின் எலக்ட்ரிக் பைக்... ஒரு சார்ஜில் 200 கிமீ பயணிக்கலாம்...

பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக, இந்தியா முழுவதும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து வருகின்றன. இதில், இரு சக்கர வாகனங்கள் என எடுத்து கொண்டால், இந்தியாவில் தற்போதைக்கு லாஞ்ச் ஆகியுள்ள பெரும்பாலான வாகனங்கள் ஸ்கூட்டர்களும், மொபட்களும்தான். ஆனால் இ மோஷன் சர்ஜ், கியர் பாக்ஸ் உடன் கூடிய மோட்டார் சைக்கிள் என்பதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

கார்ப்ரேட்களை திணறடிக்கும் கோவை கம்பெனியின் எலக்ட்ரிக் பைக்... ஒரு சார்ஜில் 200 கிமீ பயணிக்கலாம்...

ஆனால் இ மோஷன் சர்ஜ் பைக் விலை குறித்த விபரங்களும் இன்னும் வெளியிடப்படவில்லை. இதனிடையே கோவையை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் ஆம்பியர் என்ற நிறுவனமும் எலக்ட்ரிக் வாகனங்களின் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. ஏத்தர், இ மோஷன், ஆம்பியர் என இந்திய நிறுவனங்கள் அனைத்தும், எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் முன்னணியில் சென்று கொண்டிருப்பது நாம் பெருமைப்பட கூடிய விஷயம்தான்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
English summary
eMotion Surge Electric Motorcycle: All You Need To Know. read in tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X