இந்தியாவில் ரூ. 3.73 லட்சம் வரை பைக்குகளின் விலையை குறைத்து அறிவிப்பு வெளியிட்ட ஹார்லி டேவிட்சன்..!!

இந்தியாவில் ரூ. 3.73 லட்சம் வரை பைக்குகளின் விலையை குறைத்து அறிவிப்பு வெளியிட்ட ஹார்லி டேவிட்சன்..!!

By Azhagar

இந்தியாவில் சிபியூ பிளாட்ஃப்பார்மின் கீழ் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் பைக்குகளின் விலை குறைந்துள்ளது. இதன் காரணமாக ஹார்லி டேவிட்சனின் டூரிங் மற்றும் கஸ்டமைஸ் வசதிகள் பெற்ற பைக்குகளுக்கான விலை குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் பைக்குகள் விலை குறைந்தன..!!

அந்நிறுவனத்தின் சாஃப்டெயில் லோ ரைடர் மற்றும் டீலக்ஸ் பைக்குகளின் வெளியீட்டின் போது இந்த விலை குறைப்பு சார்ந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

ஒரு நாட்டில் முழுவதுமாக ஒருங்கிணைக்கப்பட்டு, மற்றொரு நாட்டில் விற்பனைக்காக இறக்குமதி செய்யப்படும் பைக்குகள் 'சிபியூ அசெம்பிளிடு யூனிட்' என்று பெயரில் குறிப்பிடப்படுகின்றன.

இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் பைக்குகள் விலை குறைந்தன..!!

இந்தியாவில் இவ்வாறு விற்பனைக்கு வரும் பைக்குகளுக்கான சுங்க வரியை மத்தியரசு 50 சதவீதம் வரை குறைத்துள்ளது. இதை தொடர்ந்து இந்தியாவில் பைக்குகளை விற்பனை செய்து வரும் பல சர்வதேச நிறுவனங்கள் விலை குறைப்பு பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் பைக்குகள் விலை குறைந்தன..!!

முன்னதாக இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பைக்குகளில் 800சிசி அல்லது அதற்கு குறைவான திறன் பெற்ற பைக்குகளுக்கு 60 சதவீத வரை சுங்க வரி வசூலிக்கப்பட்டது. அதேபோல 600சிசி மற்றும் அதற்கு மேலாக இழுவை திறன் பெற்ற பைக்குகள் 75 சதவீத சுங்க வரியின் கீழ் வந்தன.

இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் பைக்குகள் விலை குறைந்தன..!!

இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் கஸ்டமைஸ் வசதிகள் பெற்ற பைக்குகள் அதிகப்பட்சமாக ரூ. 3.73 லட்சம் வரை விலை குறைப்பை பெறுகின்றன.

அதன்படி முன்னதாக ரூ. 53.72 லட்சம் விலையில் விற்பனையில் இருந்த கஸ்டமைஸ் பைக்குகள் தற்போது ரூ. 49.99 லட்சம் வரை விலை குறைந்துள்ளன.

இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் பைக்குகள் விலை குறைந்தன..!!

இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் பைக்குகளின் விலை பட்டியல்

மாடல் பழைய விலை புதிய விலை வேறுபாடு
ரோடு கிங் ரூ. 28.37 லட்சம் ரூ. 24.99 லட்சம் ரூ. 3.38 லட்சம்
ஸ்ட்ரீட் கிளைட் ஸ்பெஷல் ரூ. 33.50 லட்சம் ரூ. 29.99 லட்சம் ரூ. 3.51 லட்சம்
ரோடு கிளைடு ஸ்பெஷல் ரூ. 35.61 லட்சம் ரூ. 32.99 லட்சம் ரூ. 2.62 லட்சம்
சிவிஓ (கஸ்டமைஸ்) லிமிட்டட் ரூ. 51.72 லட்சம் ரூ. 49.99 லட்சம் ரூ. 3.73 லட்சம்
இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் பைக்குகள் விலை குறைந்தன..!!

இதுமட்டுமின்றி தனது டூரிங் ரேஞ்ச் கொண்ட பைக்குகளுக்கான விலையையும் ஹார்லி டேவிட்சன் குறைத்துள்ளது. அதன்படி ரூ. 28.37 லட்சம் மதிப்பில் விற்பனையிலிருந்த ரோடு கிங் ரூ. 3.38 லட்சம் விலை குறைந்து ரூ. 24.99 லட்சம் விலையில் தற்போது விற்பனையாகிறது.

இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் பைக்குகள் விலை குறைந்தன..!!

அதேபோல ரூ. 33.50 லட்சம் மதிப்பில் விற்பனை செய்யப்பட்ட ஸ்ட்ரீட் கிளைடு ஸ்பெஷல் மாடல் பைக் ரூ. 3.51 லட்சம் விலை குறைந்து ரூ. 29.99 லட்சம் மதிப்பில் விற்பனையில் உள்ளது.

இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் பைக்குகள் விலை குறைந்தன..!!

ஹார்லி டேவிட்சனின் டாப் ரேஞ்ச் டூரிங் மோட்டார் சைக்கிளான ரோடு கிளைடு ஸ்பெஷல் ரூ. 2.62 லட்சம் விலை குறைந்து தற்போது ரூ. 32.99 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இது ரூ. 35.61 லட்சம் விலையில் விற்பனையில் இருந்தது.

இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் பைக்குகள் விலை குறைந்தன..!!

விலை குறைப்பு நடவடிக்கையை தொடர்ந்து மேலும் புதிய பைக் ரகங்களை ஹார்ட்லி டேவிட்சன் வெளியிட்டுள்ளது. அதன்படி சாஃப்டெயில் ரேஞ்சில் லோ ரைடர் ரூ. 12.99 லட்சம் மற்றும் டீலக்ஸ் ரூ. 17.99 லட்சம் விலையிலும் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளன.

இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் பைக்குகள் விலை குறைந்தன..!!

அமெரிக்காவை சேர்ந்த ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தொடர்ந்து ஃப்பேட் பாய் ரேஞ்சின் புதிய அனிவெர்ஸரி எடிசன் பைக்கை ரூ. 19.79 லட்சம் விலையில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து வரும் நிறுவனங்களை விலை குறைப்பை அறிவித்த இரண்டாவது நிறுவனமாக உள்ளது ஹார்லி டேவிட்சன்.

இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் பைக்குகள் விலை குறைந்தன..!!

முன்னதாக பிஎம்டபுள்யூ மோட்டோராட் நிறுவனம் நாட்டில் விற்பனை செய்து வரும் அனைத்து பைக் மாடல்களின் விலையையும் குறைத்து அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

தற்போது இந்த விலை குறைப்பு நடவடிக்கையால் ஹார்லி டேவிட்சனின் டூரிங் ரக மற்றும் சிவிஓ ரேஞ்ச் கொண்ட பைக்குகளுக்கான வாடிக்கையாளர் வட்டம் மேலும் வரிவடைந்துள்ளது.

இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் பைக்குகள் விலை குறைந்தன..!!

இதை பயன்படுத்தி பலரும் ஹார்லி டேவிட்சன் வாங்குவார்கள், இதன் தயாரிப்புகளுக்கான விற்பனை திறன் உயரும். அதற்குரிய வாடிக்கையாளர்களும் டீலர்களும் அதிகரிப்பார்கள் என நம்பப்படுகிறது.

Most Read Articles
English summary
Read in Tamil: Harley-Davidson India Reduces Prices Of CVO And Touring Lineup. Click for Details...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X