125சிசி திறன் பெற்ற புதிய டூயட் மற்றும் மாஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டர்களுடன் கால்பதிக்கும் ஹீரோ..!!

Written By:

டெல்லியில் நடைபெற்றும் வரும் 2018 ஆட்டோ எக்ஸ்போவில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 125சிசி திறனில் புதிய மாஸ்ட்ரோ எட்ஜ், டூயட் ஸ்கூட்டர்களை காட்சிப்படுத்தியுள்ளது.

125சிசி-க்கு மாறும் ஹீரோவின் எட்ஜ் & மாஸ்ட்ரோ ஸ்கூட்டர்கள்

தற்போது 110சிசி திறனில் விற்பனையாகி வரும் இந்த ஸ்கூட்டர்களின் எஞ்சின் திறன் மட்டுமில்லாமல், அவற்றின் தோற்றப்பொலிவுகளும் புதுமையாக உள்ளன

125சிசி-க்கு மாறும் ஹீரோவின் எட்ஜ் & மாஸ்ட்ரோ ஸ்கூட்டர்கள்

நகர பயன்பாட்டில் இன்று ஸ்கூட்டர்களின் தேவை அதிகரித்திருப்பதன் காரணமாகவே ஹீரோ நிறுவனம் மாஸ்ட்ரோ எட்ஜ், டூயட் ஸ்கூட்டர்களை 110சிசி திறனிலிருந்து 125சிசி-க்கு மாற்றுவதாக தெரிவித்துள்ளது.

125சிசி-க்கு மாறும் ஹீரோவின் எட்ஜ் & மாஸ்ட்ரோ ஸ்கூட்டர்கள்

தற்போது ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடப்பட்டுள்ள இந்த இரு ஸ்கூட்டர்களும் 2018-19ம் ஆண்டின் நிதியாண்டில் தான் இந்தியாவில் விற்பனைக்கு வருகின்றன.

அழகியல் தோற்றத்தில் பல்வேறு மாற்றங்களை பெற்றிருந்தாலும் ஹீரோ 125சிசி டூயட் மற்றும் மாஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டரின் டிசைன் மொழி ஒன்று தான்.

125சிசி-க்கு மாறும் ஹீரோவின் எட்ஜ் & மாஸ்ட்ரோ ஸ்கூட்டர்கள்

தவிர, இந்த இரு ஸ்கூட்டர்களிலும் டிஜிட்டல் டிஸ்பிளே உடன் கூடிய அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் உள்ளது. கூடுதலாக ஹீரோவின் I3S System எனப்படும் நிலை-தொடக்கம்-நிறுத்தம் தொழில்நுட்பமும் 125சிசி டூயட், மாஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டர்களில் இடம்பெற்றிருக்கும்.

Recommended Video - Watch Now!
New Maruti Swift Launch: Price; Mileage; Specifications; Features; Changes
125சிசி-க்கு மாறும் ஹீரோவின் எட்ஜ் & மாஸ்ட்ரோ ஸ்கூட்டர்கள்

125சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பெற்ற இந்த இரண்டு ஸ்கூட்டர்களும் அதிகப்பட்சமாக 8.7 பிஎச்பி பவர் மற்றும் 10.2 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.

முன்பக்க டிஸ்க் பிரேக் சிஸ்டத்துடன் தேவைப்பட்டால் ஐபிஎஸ் என்கிற ஒருங்கிணைந்த நிறுத்த அமைப்பும் கூடுதலாக வழங்கப்படும்.

125சிசி-க்கு மாறும் ஹீரோவின் எட்ஜ் & மாஸ்ட்ரோ ஸ்கூட்டர்கள்

இவை தவிர பக்கவாட்டு ஸ்டான்டு பற்றிய நினைவூட்டல், சர்வீஸ் செய்வதற்கான காலத்தை உணர்த்துவது, பாஸ் ஸ்விட்ச், எரிவாயுவை கூடுதலாக கொள்ளவு செய்யும் வழிமுறை போன்ற அம்சங்களும் இந்த இரண்டு ஸ்கூட்டர்களில் இடம்பெறுகின்றன.

125சிசி-க்கு மாறும் ஹீரோவின் எட்ஜ் & மாஸ்ட்ரோ ஸ்கூட்டர்கள்

ராஜஸ்தான் ஜெய்பூரில் ஹீரோவின் புதிய தயாரிப்புகளுக்கான தொழில்நுட்ப மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு தான் 125சிசி திறன் பெற்ற டூயட், மாஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

125சிசி-க்கு மாறும் ஹீரோவின் எட்ஜ் & மாஸ்ட்ரோ ஸ்கூட்டர்கள்

கடந்தாண்டில் இந்தியாவில் 125சிசி ஸ்கூட்டர் செக்மென்ட் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது. பல்வேறு வாடிக்கையாளர்களும் இந்த திறன் கொண்ட ஸ்கூட்டர்களை வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

125சிசி-க்கு மாறும் ஹீரோவின் எட்ஜ் & மாஸ்ட்ரோ ஸ்கூட்டர்கள்

இந்தியாவில் ஹீரோ டூயட் 125, மாஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டர்கள் ஹோண்டா ஆக்டிவா, சுஸுகி ஏக்சஸ், புதியதாக வெளிவந்துள்ள டிவிஎஸ் என்டார்க் மற்றும் அப்ரிலியா எஸ்.ஆர். 125 போன்ற மாடல்களுக்கு சரிநிகர் போட்டியாக இருக்கும்.

125சிசி-க்கு மாறும் ஹீரோவின் எட்ஜ் & மாஸ்ட்ரோ ஸ்கூட்டர்கள்

தற்போது அறிவிப்பின் வாயிலாகவே பெரிய எதிர்பார்ப்பை பெற்றுள்ள ஹீரோவின் புதிய 125 டூயட் மற்றும் 125 மாஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டர்கள் ரூ.58,000 முதல் ரூ. 60,000 வரை விலை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Read In Tamil: Hero Duet 125 And Maestro 125 Unveiled. Click for Expected Launch Date, Specifications & More...
Story first published: Thursday, February 8, 2018, 10:59 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark