புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் விபரம் வெளியானது!!

By Saravana Rajan

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் பற்றிய விபரங்கள் வெளியாகி உள்ளன. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் விபரம் வெளியானது!!

மேம்படுத்தப்பட்ட ஹீரோ டூயட் 125 ஸ்கூட்டர் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் ஹீரோ டெஸ்ட்டினி 125 என்ற புதிய பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரிய வந்துள்ளது.

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் விபரம் வெளியானது!!

அண்மையில் நடந்த நிகழ்ச்சியில் புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டரும், மேஸ்ட்ரோ 125 ஸ்கூட்டரும் டீலர்களுக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. எனவே, 125 ஸ்கூட்டர் செக்மென்ட்டில் வலுவான வர்த்தக பங்களிப்பை பெறுவதற்காக இந்த இரண்டு மாடல்களையும் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்.

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் விபரம் வெளியானது!!

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டரில் ஏராளமான சில்வர் பாகங்கள் மூலமாக பிரிமியம் மாடலாக தோற்றமளிக்கிறது. இரட்டை வண்ணத்தில் இருக்கை கொடுக்கப்பட்டு இருக்கிறது. சில்வர் வண்ண கிராப் ரெயில் பொருத்தப்பட்டு இருக்கிறது. புகைப்போக்கியில் வெப்பத்தை தடுக்கும் ஷீல்டு பொருத்தப்பட்டு இருக்கிறது.

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் விபரம் வெளியானது!!

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டரில் 124.6சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8.7 பிஎச்பி பவரையும், 10.2 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மேலும், ஐ3எஸ் ஸ்டார்ட்- ஸ்டாப் தொழில்நுட்பமும் இடம்பெற்றுள்ளது. சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் விபரம் வெளியானது!!

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டரில் அனலாக்- டிஜிட்டல் திரை கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், எல்இடி டெயில் லைட்டுகள், வெளிப்புறத்தில் கொடுக்கப்பட்ட பெட்ரோல் டேங்க் மூடி, பாடி கலர் ரியர் வியூ மிரர்கள், மொபைல் சார்ஜர், பூட் லைட் உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் விபரம் வெளியானது!!

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டரில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ட்யூப்லெஸ் டயர்கள் மற்றும் முன்சக்கரத்திற்கு ஆப்ஷனலாக டிஸ்க் பிரேக் சிஸ்டமும் கொடுக்கப்பட இருக்கிறது.

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் விபரம் வெளியானது!!

புதிய ஹீரோ டெஸ்ட்டினி ஸ்கூட்டர் ரூ.62,000 எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வர இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹோண்டா க்ரேஸியா, டிவிஎஸ் என்டார்க் 125, சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் மற்றும் அப்ரிலியா எஸ்ஆர்ர 125 ஆகிய ஸ்கூட்டர் மாடல்களுடன் போட்டி போடும்.

Source: Gaadiwaadi

Most Read Articles

Tamil
English summary
World's largest two-wheeler manufacturer Hero Motocorp showcased the Duet 125 and the Maestro 125 at the Auto Expo 2018. Now, GaadiWaadi reports the Hero Duet 125 has been renamed as Destini 125. This indicates that the launch of the new Destini 125 is around the corner.
Story first published: Friday, August 17, 2018, 11:56 [IST]
 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more