இந்தியாவில் மின்சார திறன் பெற்ற இரண்டு மிதிவண்டிகள் & ஸ்கூட்டரை வெளியிட்ட ஹீரோ

Written By:

ஹீரோ மோட்டார்கார்ப் நிறுவனத்தின் மின்சார வாகன தயாரிப்பு பிரிவான ஹீரோ எலக்ட்ரிக் மின்சாரத்தால் இயங்கும் இரண்டு மிதிவண்டிகள் உள்ளிட்ட ஒரு ஸ்கூட்டரை வெளியிட்டுள்ளது.

மின்சார ஸ்கூட்டர் & மிதிவண்டிகளை வெளியிட்ட ஹீரோ..!!

இரண்டு மிதிவண்டிகளை ஏ2பி ஸ்பீடு மற்றும் க்வோ பூஸ்ட் என்ற பெயரிலும், ஏஎக்ஸ்எல் ஹெ.இ-20 என்ற குறியீட்டில் ஒரு முன்மாதிரி ஸ்கூட்டரையும் ஹீரோ எலெக்ட்ரிக் வெளியிட்டுள்ளது.

மின்சார ஸ்கூட்டர் & மிதிவண்டிகளை வெளியிட்ட ஹீரோ..!!

மின்சார திறன் பெற்ற இருசக்கர வாகன தயாரிப்பில் பத்து ஆண்டுகளை கடந்துள்ள ஹீரோ எலெக்ட்ரிக், ‘10 Years Ahead' என்ற பெயரில் அதற்கான விளம்பர பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மின்சார ஸ்கூட்டர் & மிதிவண்டிகளை வெளியிட்ட ஹீரோ..!!

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் அந்நிறுவனம், 15 மின்சார இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பல முன்னணி நிறுவனங்களை விட ஹீரோ எலெக்ட்ரிக் இந்திய மின்சார வாகன சந்தையில் 65 சதவீத பங்குகளை வகிக்கிறது.

Recommended Video - Watch Now!
Auto Rickshaw Explodes In Broad Daylight
மின்சார ஸ்கூட்டர் & மிதிவண்டிகளை வெளியிட்ட ஹீரோ..!!

இந்த மூன்று மாடல்களை தவிர 2018ம் ஆண்டில் இன்னும் பல வாகனங்களை படிப்படியாக வெளியிட திட்டமிட்டுள்ளதாக ஹீரோ எலெக்ட்ரிக் தெரிவித்துள்ளது.

ஏஎக்ஸ்எல் ஹெச்இ- 20 ஸ்கூட்டரில் லித்தியம் அயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது முழுமையாக 4 மணி நேரத்தில் சார்ஜாகி விடும். 4000 வாட் திறன் கொண்ட இதனுடைய மின்சார மோட்டார் 6000 வாட் திறன் வரை உருவாக்க வல்லது.

மின்சார ஸ்கூட்டர் & மிதிவண்டிகளை வெளியிட்ட ஹீரோ..!!

மணிக்கு 85 கி.மீ வேகத்தில் செல்லும் ஆற்றல் பெற்ற ஏஎக்ஸ்எல் ஹெச்இ- 20 ஸ்கூட்டர், ஒருமுறை சார்ஜ் செய்தால் சராசரியாக 110 கி.மீ வரை செல்லும் என்று தெரிவிக்கிறது ஹீரோ எலெக்ட்ரிக்.

இந்த ஸ்கூட்டரின் உள்ள மின்சார மோட்டார் மற்றும் அதனுடைய செயல்திறனுக்கு ஏற்றவாறு பிரேக்கிங் கட்டமைப்புகள் ஏஎக்ஸ்எல் ஹெச்இ- 20 மாடலில் வழங்கப்பட்டுள்ளன.

மின்சார ஸ்கூட்டர் & மிதிவண்டிகளை வெளியிட்ட ஹீரோ..!!

இதுதவிர கீ-லெஸ் என்ட்ரி, ஜிபிஎஸ் டிராக்கிங் போன்ற பல அம்சங்கள் இந்த ஸ்கூட்டரில் உள்ளன. கிளவுட் மூலம் இதனுடைய இயக்கத்திறன் சார்ந்த செயல்பாடுகள் இயங்குவதால் வாடிக்கையாளர்களுக்கு சரிவீஸ் குறித்த விவரங்கள் உடனுக்குடனே தெரியவரும்.

மின்சார ஸ்கூட்டர் & மிதிவண்டிகளை வெளியிட்ட ஹீரோ..!!

மின்சார திறன் பெற்ற ஏஎக்ஸ்எல் ஹெச்இ- 20 ஸ்கூட்டர் மட்டுமின்றி, 2 புதிய மின்சாரத்தால் இயங்கும் மிதிவண்டிகளையும் ஹீரோ எலெக்ட்ரிக் வெளியிட்டுள்ளது.

ஏ2பி ஸ்பீடு மின்சார சைக்கிளில் 500 வாட் மின்சார மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இது 36 வால்ட் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

மின்சார ஸ்கூட்டர் & மிதிவண்டிகளை வெளியிட்ட ஹீரோ..!!

700 முறை முழுமையாக சார்ஜ் செய்யப்படும் இந்த பேட்டரி மணிக்கு 70 கி.மீ வரை செல்லும். ஏ2பி ஸ்பீடு மின்சார சைக்கிள் மணிக்கு 45 கி.மீ வேகத்தில் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு ஏ2பி க்வோ பூஸ்ட் மிதிவண்டியில் 350 வாட் மின்சார மோட்டார் உள்ளது. மணிக்கு 32 கி.மீ வேகத்தில் செல்லும் இந்த சைக்கிளில் லித்தியம் அயன் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

மின்சார ஸ்கூட்டர் & மிதிவண்டிகளை வெளியிட்ட ஹீரோ..!!

ஒருமுறை சார்ஜ் செய்தால் 60 கி.மீ வரை செல்லும் இந்த மின்சார சைக்கிள் 20 கிலோ எடைக்கொண்டது மற்றும் அலுமினியம் ஃபிரேம் இதற்கு வழங்கப்பட்டுள்ளது.

மடித்து வைக்கும் திறன் கொண்ட ஏ2பி க்வோ பூஸ்ட் மிதிவண்டி, பல வாடிக்கையாளர்களின் முதன்மை தேர்வாக இருக்கும் என ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் எதிர்பார்க்கிறது.

மின்சார ஸ்கூட்டர் & மிதிவண்டிகளை வெளியிட்ட ஹீரோ..!!

மின்சார வாகன விற்பனையை பொறுத்தவரை இந்தியாவில் ஹீரோ எலெக்ட்ரிக் முன்னோடியாக உள்ளது. இந்தியாவில் பல ஆண்டுகளாக இங்கு மின்சார திறன் பெற்ற வாகனங்களை அந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

மின்சார ஸ்கூட்டர் & மிதிவண்டிகளை வெளியிட்ட ஹீரோ..!!

ஆட்டோ எக்ஸ்போ 2018ல் அறிமுகம் செய்யவுள்ள புதிய ரக மின்சார இருசக்கர வாகனங்களை தற்போது வெளியிட்டுள்ளதன் மூலம் மின்சார வாகன சந்தையில் தன்னை ஒரு முன்னோடியாக ஹீரோ எலெக்ட்ரிக் தன்னை மீண்டும் நிலைநிறுத்திக்கொண்டுள்ளது.

மின்சார ஸ்கூட்டர் & மிதிவண்டிகளை வெளியிட்ட ஹீரோ..!!

ஹீரோ எலெக்ட்ரிக்கின் புதிய வாகனங்களான ஏஎக்ஸ்எல் ஹெச்.இ-20, ஏ2பி ஸ்பீடு மற்றும் க்வோ பூஸ்ட் ஆகியவை 2018ம் ஆண்டில் அடுத்தடுத்து விற்பனைக்கு வெளிவரவுள்ளன.

English summary
Read in Tamil: Hero Electric Unveils Two New Bicycles And Scooter In India. Click for Details...
Story first published: Monday, February 5, 2018, 15:37 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark