ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரின் ஐ3எஸ் சிஸ்டம், பிரேக் அமைப்பு உள்ளிட்ட டாப் சிறப்பம்சங்கள்

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரின் ஐ3எஸ் சிஸ்டம், பிரேக் அமைப்பு உள்ளிட்ட டாப் சிறப்பம்சங்கள்: முழு விபரம்

By Azhagar

மேம்படுத்தப்பட்ட எஞ்சின் அம்சத்துடன் தயாராகியுள்ள ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டர், 2018 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடப்பட்டது.

மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இந்த ஸ்கூட்டர் தோற்றத்தில், தற்போது பயன்பாட்டில் இருக்கும் மேஸ்ட்ரோ 110சிசி மாடலை பின்பற்றி தயாராகியுள்ளது.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரின் டாப் சிறப்பம்சங்கள்: முழு விபரம்..!!

இதே நிகழ்வில் டூயட் 125 ஸ்கூட்டர் மாடலையும் ஹீரோ வெளியிட்டது. இருந்தாலும் மேஸ்ட்ரோ எட்ஜ் 125 தான் பலரையும் கவர்ந்துள்ளது.

இந்த ஸ்கூட்டருக்கான மேம்பாட்டு பணிகள் அனைத்தையும் நகர்புற ரைடிங்கை மனதில் வைத்து தான் ஹீரோ உருவாக்கியுள்ளது.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரின் டாப் சிறப்பம்சங்கள்: முழு விபரம்..!!

புதிய டூயட் மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டர்களுக்கு ஒரே எஞ்சின் என்றாலும் செயல்திறன், வடிவமைப்பு, தோற்றம் மற்றும் சிறப்பம்சங்களில் மாற்றம் உள்ளன. அதனுடைய தகவல்களை விரிவாக பார்க்கலாம்.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 வடிவமைப்பு

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 வடிவமைப்பு

புதிய மேஸ்ட்ரோ எட்ஜ் 125சிசி ஸ்கூட்டர் கூர்மையான வடிவமைப்பில் உள்ளது. 5 ஸ்போக் அலாய் சக்கரங்கள் இந்த ஸ்கூட்டருக்கு புத்துணர்ச்சியான தோற்றத்தை வழங்குகின்றன.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரின் டாப் சிறப்பம்சங்கள்: முழு விபரம்..!!

டூயட் ஸ்கூட்டர் மாடலோடு இதை ஒப்பிட்டு பார்க்கும் போது, மேஸ்ட்ரோ எட்ஜ் 125 முற்றிலுமாக இளைய தலைமுறையினருக்கான ஸ்கூட்டராக தயாராகியுள்ளது.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரின் டாப் சிறப்பம்சங்கள்: முழு விபரம்..!!

மேட் பெயின்ட் ஸ்கீம், கூர்மையான வரிசை, கையாள்வதற்கு ஏற்ற பிடிமானங்கள் என ஒரு 'எட்ஜி' போல உள்ளது மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டர்.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரின் டாப் சிறப்பம்சங்கள்: முழு விபரம்..!!

இந்த ஸ்கூட்டரின் ஸ்பிளிட்-டெயில் லேம்ப் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர நல்ல அகலமான, கைதேர்ந்த கிராப் ரெயில் 125 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ளது.

ஹீரோ மேஸ்ட்ரோ எஞ்சின் தேர்வுகள்

ஹீரோ மேஸ்ட்ரோ எஞ்சின் தேர்வுகள்

125சிசி திறன் பெற்ற எஞ்சினை கொண்ட இந்த ஸ்கூட்டரில், idle-Start-Stop-System என்கிற i3S

தொழில்நுட்பம் உள்ளது. இது எரிவாயு சிக்கனத்தை பின்பற்றி இயங்கும்.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரின் டாப் சிறப்பம்சங்கள்: முழு விபரம்..!!

சொகுசான மற்றும் வசதியான ரைடிங்கை வழங்கும் நோக்கில் இந்த ஸ்கூட்டரின் மேம்பாட்டு அம்சங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனுடைய பரந்த இருக்கை மற்றும் வசதியான ஹேண்டலிங் ஆகியவை சிறந்த சவாரி அனுபவத்தை வழங்கும்.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரின் டாப் சிறப்பம்சங்கள்: முழு விபரம்..!!

இந்த ஸ்கூட்டரில் கூடுதலாக கைபேசியை சார்ஜ் செய்யும் வசதி இருக்கைக்கு கீழ் உள்ளது. தவிர கூடுதலாக எரிவாயுவை சேமித்து கொள்ளும் வசதியும் மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டரில் இருப்பது கவனிக்கத்தக்கது.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் பாதுகாப்பு அம்சங்கள்

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் பாதுகாப்பு அம்சங்கள்

தேவைப்பட்டால் பயன்படும் முன்பக்க டிஸ்க் பிரேக் அமைப்பு இதில் உள்ளது. தவிர, ஒருங்கிணைந்த பிரேக் சிஸ்டத்தையும் ஹீரோ இந்த ஸ்கூட்டருக்கு வழங்கியுள்ளது.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரின் டாப் சிறப்பம்சங்கள்: முழு விபரம்..!!

ஹோண்டாவின் காம்பி-பிரேக் சிஸ்டம் போல இயங்கும் இந்த அமைப்பு ஸ்கூட்டரின் ஒரு லிவரை அழுத்தினாலும், அது இரண்டு சக்கரங்களையும் பாதுகாப்போடு இயக்க உதவும்.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 நிற தேர்வுகள்

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 நிற தேர்வுகள்

சிவப்பு மற்றும் நீலம் என இரண்டு மேட் ஷேட்ஸில் கிடைக்கும் இந்த ஸ்கூட்டரின் நிறங்கள், அதற்காக வழங்கப்பட்டுள்ள கருப்பு நிற பாகங்களோடு ஒன்றிப்போகிறது.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரின் டாப் சிறப்பம்சங்கள்: முழு விபரம்..!!

இதிலுள்ள செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் ஸ்கூட்டரின் அனைத்து அடிப்படை தகவல்களையும் காட்டும்.

மேலும் சர்வீஸ் குறித்த விவரங்களை தெரிவிப்பது, சைடு-ஸ்டேண்டு குறியீடு போன்ற தகவல்களும் இதில் தோன்றும்.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரின் டாப் சிறப்பம்சங்கள்: முழு விபரம்..!!

125சிசி ஸ்கூட்டர் செக்மென்ட் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகிறது. இதை குறிவைத்து சுஸுகி ஏக்சஸ் 125, டிவிஎஸ் என்டார்க் மற்றும் அப்ரிலியா எஸ்.ஆர் 125 என பல ஸ்கூட்டர் மாடல்கள் தொடர்ந்து சந்தையில் களமிறக்கப்பட்டு வருகின்றன.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரின் டாப் சிறப்பம்சங்கள்: முழு விபரம்..!!

பல்வேறு செயல்திறன் மற்றும் ப்ரீமியம் அம்சங்களோடு விற்பனைக்கு வந்துள்ள இந்த ஸ்கூட்டர்களை தொடர்ந்து ஹீரோவும் 125சிசி செக்மென்டில் மேஸ்ட்ரோ எட்ஜ் மற்றும் டூயட் மாடல்களை வெளியிட்டுள்ளது.

Most Read Articles
English summary
Read in Tamil: Hero Maestro Edge 125 Top Features To Know: i3S System, Disc Brake, Service Reminder & More...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X