டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்ததால், ஹீரோ பைக்குகள் விலை அதிகரிப்பு

ஹீரோ மோட்டோர் கார்ப் நிறுவனம் இந்தியாவில் அதிகளவு பைக் விற்பனை செய்யும் நிறுவனமாக திகழ்கிறது. இந்நிறுவனத்தின் ஸ்பெளன்டர் பைக்குகள் பெற்ற பெறும் வெற்றியை இன்று வரை எந்த நிறுவனத்தாலும் முறியடிக்க முட

By Balasubramanian

மூலப்பொருட்கள் விலையேற்றம், உதிரி பாகங்கள் விலையேற்றம், டாலருக்க நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களாக ஹீரோ பைக்கின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தங்கள் விற்பனையை தக்க வைக்க முயற்சி செய்யப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்ததால், ஹீரோ பைக்குகள் விலை அதிகரிப்பு

ஹீரோ மோட்டோர் கார்ப் நிறுவனம் இந்தியாவில் அதிகளவு பைக் விற்பனை செய்யும் நிறுவனமாக திகழ்கிறது. இந்நிறுவனத்தின் ஸ்பெளன்டர் பைக்குகள் பெற்ற பெறும் வெற்றியை இன்று வரை எந்த நிறுவனத்தாலும் முறியடிக்க முடியவில்லை. இந்தியாவில் பெறும் வெற்றி பெற்ற பைக்காக இந்த பைக் கருதப்படுகிறது.

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்ததால், ஹீரோ பைக்குகள் விலை அதிகரிப்பு

இந்நிலையில் இந்த ஹீரோ மோட்டாகார்ப் நிறுவனம் தற்போது தாங்கள் தயாரிக்கும் பைக்குகளுக்கான விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. தற்போது எந்தெந்த பைக்கிற்கு எவ்வளவு விலை உயர்வு என்பது குறித்த தகவல்களை அந்நிறுவனம் வெளியிடவில்லை. எனினும் எக்ஸ் ஷோரூம் விலையில் ரூ 500 வரை மாற்றம் இருக்கும் என அறிவித்துள்ளது.

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்ததால், ஹீரோ பைக்குகள் விலை அதிகரிப்பு

இந்த விலைஉயர்வுக்கு முக்கிய காரணம் மூலப்பொருட்களின் விலை உயர்வும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறைந்ததற்கான தாக்கம் என அந்நிறுவனம் விளக்கள் அளித்துள்ளது.

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்ததால், ஹீரோ பைக்குகள் விலை அதிகரிப்பு

ஹீரோ மோட்டோ கார்ப்பை பொருத்தவரை கடந்த மாதம் மட்டும் 7 லட்சத்திற்கும் அதிகமான கார்களை விற்பனை செய்தது. அது மட்டும் அல்லாமல் இந்த நதியாண்டின் முதல் காலாண்டிலேயே 21 லட்சம் வாகனங்களை விற்பனைக்கு கொண்டு வந்தது.

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்ததால், ஹீரோ பைக்குகள் விலை அதிகரிப்பு

இது அந்நிறுவனத்தை எண்ணிக்கையின் அடிப்படையில் உலகிலேயே அதிக டூவீலர்கள் விற்கும் நிறுவனமாக இந்நிறுவனம் திகழ்கிறது. நிதியாண்டின் இரணடாம் மற்றும் மூன்றாம் பாதியில் தான் விற்பனைகள் அதிகமாக இருக்கும். இதை கருத்தில் கொண்டு வரும்மாதங்களில் நல்ல விற்பனையாகும் என அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்ததால், ஹீரோ பைக்குகள் விலை அதிகரிப்பு

ஹீரோவின் முக்கிய இலக்கே இந்தியாவில் உள்ள ஒரு சில எண்ணிக்கையில் உள்ள பெரு நகரங்களை விட அதிக எண்ணிக்கையில் உள்ள கிராமப்புறங்களை தான் அதிகம் கவர்கிறது. அந்த பகுதியில் தங்கள் வாகனங்களை கொண்டு செல்ல கடுமையாக முயற்சி செய்து வருகிறது.

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்ததால், ஹீரோ பைக்குகள் விலை அதிகரிப்பு

இந்நிறுவனத்திற்கு மிகவும் போட்டியாக திகழ்வது ஹோண்டா நிறுவனம் தான். அந்நிறுவனம் தாங்கள் தயாரிக்கும் ஆக்டிவா ஸ்கூட்டரை மக்கள் மத்தியில் அதிகமாக கொண்டு சேர்த்துவருகின்றனர். அந்த ஸ்கூட்டரை வாங்கும் ஆண்கள் பெரும்பாலும் ஸ்பெளன்டரை வாங்க கூடிய திறன் படைத்த வாடிக்கையாளர்கள் தான்.

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்ததால், ஹீரோ பைக்குகள் விலை அதிகரிப்பு

ஆனால் ஸ்பெளன்டர் பழைய மாடல் வாகனஙமாக இருப்பதாலும் பெர்பாமென்ஸை ஒப்பிடும் போது ஸ்பெளன்டரை விட ஆக்டிவா அதிக சிசி இன்ஜின் கொண்டுள்ளதால் சிறந்த பெர்பாமென்ஸை தருகிறது. மேலும் இந்த வாகனத்தை ஒரு குடும்பத்தில் வாங்கினால் கணவர் மனைவி என இருவரும் பயன்படுத்தி கொள்ளும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது.

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்ததால், ஹீரோ பைக்குகள் விலை அதிகரிப்பு

ஹீரோ நிறுவனத்தை பொருத்தவரை இன்னும் சில மாதங்களில் பல புது பைக்குகளை ரிலீஸ் செய்யவுள்ளனர். அதன்படி ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 ஆர் என்ற பைக் இந்த மாதமே விற்பனைக்கு வருகிறது. ஹீரோ டூயட் 125, ஹீரோ மீஸ்ட்ரோ எட்ஜ் 125 ஆகிய ஸ்கூட்டர்கள் சில மாறுதல்களுடன் வருகின்றனர். மிக முக்கியமாக என்ட்ரி லெவல் அட்வெஞ்சர் பைக்காக ஹீரோ எக்ஸ்பல்ஸ் என்ற பைக் எக்ஸ்ட்ரீம் பைக்கை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கும் விரைவில் விற்பனைக்க வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
English summary
Hero MotoCorp Hikes Prices Of Two-Wheelers. Read in Tamil
Story first published: Thursday, July 5, 2018, 13:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X