ஹீரோ இனி சூப்பர் “ஹீரோ” ஆகிறது; 37 நாடுகளில் வாகன விற்பனை

ஹீரோ நிறுவனம் தங்கள் தற்போது ஈரான், துருக்கி தங்கள் விற்பனையை துவங்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அந்நிறுவனம் மெத்தம் 37 நாடுகளில் தங்கள் வாகனங்களை விற்பனை செய்யும்.

By Balasubramanian

ஹீரோ நிறுவனம் தங்கள் தற்போது ஈரான், துருக்கி தங்கள் விற்பனையை துவங்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அந்நிறுவனம் மெத்தம் 37 நாடுகளில் தங்கள் வாகனங்களை விற்பனை செய்யும். இதனால் ஹீரோ நிறுவனத்தின் மதிப்பு மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை, வங்கதேசம், நேபால் ஆகிய நாடுகளிலும் அந்நிறுவனங்களின் வாகன விற்பனை அதிகரித்துள்ளது.

ஹீரோ இனி சூப்பர் “ஹீரோ” ஆகிறது; 37 நாடுகளில் வாகன விற்பனை

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய டூவீலர் விற்பனையை செய்து வருகிறது. இந்நிறுவனம் தங்களின் புதிய ஸ்கூட்டரை மற்றும் பைக்கை ஈரான் மற்றும் துருக்கி நாடுகளில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தங்கள் நிறுவனங்களை உலக அளவில் பெரிதாக்கவும் முடிவு செய்துள்ளது.

ஹீரோ இனி சூப்பர் “ஹீரோ” ஆகிறது; 37 நாடுகளில் வாகன விற்பனை

இது குறித்து அந்நிறுவனம் கூறுகையில் "மேற்கத்திய நாடுகளில் எங்களது தயாரிப்புகளான ஸ்கூட்டர்கள் மற்றும் ப்ரீமியம் பைக்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். துருக்கி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளும் இதில் உள்ளடக்கம். " என தெரிவித்துள்ளது.

ஹீரோ இனி சூப்பர் “ஹீரோ” ஆகிறது; 37 நாடுகளில் வாகன விற்பனை

மேலும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தற்போது 100 மற்றும் 125 சிசி பைக்குகளில் அதிக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. அதற்காக வங்கதேசத்தில் உள்ள தொழிற்சாலையை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் இலங்கை மற்றும் நேபாள நாடுகளில் அந்நிறுவனத்தின் வாகன விற்பனை அதிகரித்துள்ளது.

ஹீரோ இனி சூப்பர் “ஹீரோ” ஆகிறது; 37 நாடுகளில் வாகன விற்பனை

ஹீரோ நிறுவனம் தற்போது 37 நாடுகளில் தங்கள் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்தாண்டு இந்நிறுவனம் மொத்தம் 2,04,484 வானங்களை சர்வதேச சந்தையில் விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு இந்நிறுவனம் மொத்தம் 1,82,117 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்தது.

ஹீரோ இனி சூப்பர் “ஹீரோ” ஆகிறது; 37 நாடுகளில் வாகன விற்பனை

இதே போல அந்நிறுவம் 125-150 சிசி வாகனங்களின் விற்பனையை கொலம்பியாவில் அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இந்நிறுவனத்திற்கு ஆப்ரிக்க நாடுகளில் தங்களின் வாகனங்களை விற்பனை செய்வதில் பெரும் சவால் உள்ளதாகவும்

ஹீரோ இனி சூப்பர் “ஹீரோ” ஆகிறது; 37 நாடுகளில் வாகன விற்பனை

அந்நாடுகளில் இந்தியாவில் உள்ள பிஎஸ்4 தரத்திற்கு நேரடியாக உள்ள தர கணக்கீடு இல்லை எனவும், சில நாடுகள் யூரோ -3 எமிஷன் கட்டுப்பாடுகளை கடைபிடிப்பதாகவும் அந்நாடுகளில் வாகனங்களை விற்பனை செய்வதில் சிரமம் இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

Most Read Articles
English summary
Hero MotoCorp Plans To Launch New Scooters, Bikes In Iran And Turkey. Read in Tamil
Story first published: Monday, July 30, 2018, 17:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X