புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கின் அறிமுகம் எப்போது?

அடுத்த ஆண்டு துவக்கத்தில் புதிய எக்ஸ்பல்ஸ் 200 சாகச ரக மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்வதற்கு ஹீரோ திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகி இருக்கிறது. புத்தாண்டில் புதிய பைக் வாங்க திட்டமிட்டிருப்பவர்களை மனதி

By Saravana Rajan

ஆவலை ஏற்படுத்தி இருக்கும் புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிளின் அறிமுக விபரம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கின் அறிமுகம் எப்போது?

கடந்த ஆண்டு இத்தாலியில் நடந்த மிலன் மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 என்ற சாகச வகை மோட்டார்சைக்கிளின் கான்செப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த பிப்ரவரியில் நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிற்கு சில நாட்களுக்கு முன்னதாக உற்பத்திக்கு செல்வதற்கான அனைத்து அம்சங்களும் பொருந்திய மாடல் காட்சிக்கு கொண்டு வரப்பட்டது.

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கின் அறிமுகம் எப்போது?

ஹீரோ இம்பல்ஸ் 150 பைக்கிற்கு மாற்றாக கூடுதல் சக்திவாய்ந்த 200 எஞ்சினுடன் வர இருப்பதால் பலர் இந்த மோட்டார்சைக்கிள் அறிமுகத்தை எதிர்நோக்கி இருக்கின்றனர். இந்த நிலையில், பண்டிகை காலத்தில் இந்த புதிய மோட்டார்சைக்கிளை ஹீரோ மோட்டோகார்ப் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கின் அறிமுகம் எப்போது?

ஆனால், அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த புதிய மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்வதற்கு ஹீரோ திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகி இருக்கிறது. புத்தாண்டில் புதிய பைக் வாங்க திட்டமிட்டிருப்பவர்களை மனதில் வைத்து இந்த புதிய பைக் மாடலை களமிறக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கின் அறிமுகம் எப்போது?

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கில் 200சிசி ஏர்கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சினை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு சொந்தமாக உருவாக்கி இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 18 பிஎச்பி பவரையும், 17 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பியூவல் இன்ஜெக்ஷன் நுட்பத்துடன் வருகிறது.. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கின் அறிமுகம் எப்போது?

ஆஃப்ரோடுகளில் பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு லாங் டிராவல் சஸ்பென்ஷன் அமைப்பை பெற்றிருக்கிறது. முன்புறத்தில் 170 மிமீ வரை இயங்கக்கூடிய ஃபோர்க்குகளும், பின்புறத்தில் 190 மிமீ வரை இயங்கும் மோனோஷாக் அப்சார்பரும் கொடுக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் 21 அங்குல சக்கரமும், பின்புறத்தில் 19 அங்குல சக்கரமும் இடம்பெற்றுள்ளது. சியட் நிறுவனத்தின் நாபி டயர்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கின் அறிமுகம் எப்போது?

இந்த பைக்கில் 825மிமீ உயரத்திலான இருக்கை அமைப்பும், 220மிமீ தரை இடைவெளியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளில் எல்இடி ஹெட்லைட்டுகள் கொடுக்கப்பட்டு இருக்கும். கைப்பிடிகளில் மண், சேறு படாதவாறு தவிர்க்கும் நக்குள் கார்டுகள், பேஷ் பிளேட் உள்ளிட்டவையும் இதன் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கின் அறிமுகம் எப்போது?

முழுவதுமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. புளூடூத் மூலமாக ஸ்மார்ட்போனை இந்த இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் இணைக்க முடியும். யுஎஸ்பி சார்ஜர் மற்றும் நேவிகேஷன் வசதியையும் பெற முடியும். இந்த பைக்கில் 14 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டு இருக்கிறது.

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கின் அறிமுகம் எப்போது?

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 மோட்டார்சைக்கிள் ரூ.1 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் மிக குறைவான விலை சாகச ரக மோட்டார்சைக்கிளாக இருக்கும். ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிளை விட ரூ.60,000 வரை விலை குறைவாக இருக்கும் என்பதால், வாடிக்கையாளர் மத்தியில் வரவேற்பை பெறும் என்று தெரிகிறது.

Most Read Articles
English summary
Hero MotoCorp is all set to launch their latest adventure motorcycle, the XPulse 200. The company will be launching the XPulse 200 sometime by the end of the current fiscal year.
Story first published: Thursday, August 23, 2018, 10:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X