புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் சாகச ரக மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்- முழு விபரம்..!!

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் சாகச ரக மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்- முழு விபரம்..!!

By Azhagar

2018 ஆட்டோ எக்ஸ்போவில் ஆஃப்-ரோடிங் தேவையை கருத்தில் கொண்டு ஹீரோ வெளியிட்ட ஹார்ட்கோர் பைக் மாடல் தான் எக்ஸ்பல்ஸ் 200. 200சிசி திறனில் இந்தியாவின் முதல் டூயல்-பர்பஸ் ஆஃப் ரோடு பைக்காக ஹீரோ இதை தயாரித்துள்ளது.

ஹீரோ அட்வென்ச்சர் எக்ஸ்பல்ஸ் பைக்கின் சிறப்பம்சங்கள்- விபரம்

இந்த பைக்கின் தயாரிப்பு நிலை மாடலைத்தான் எக்ஸ்போவில் ஹீரோ காட்சிப்படுத்தியது. அதன் காரணமாக விரைவிலேயே எக்ஸ்பல்ஸ் 200 விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹீரோ அட்வென்ச்சர் எக்ஸ்பல்ஸ் பைக்கின் சிறப்பம்சங்கள்- விபரம்

ஹீரோ இம்பிளஸிற்கு மாற்றாக இந்தியாவில் களமிறங்கும் இந்த பைக்கின் முக்கிய டாப் சிறப்பம்சங்களை பற்றிய விவரங்களை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

ஹீரோ அட்வென்ச்சர் எக்ஸ்பல்ஸ் பைக்கின் சிறப்பம்சங்கள்- விபரம்

எக்ஸ்ட்ரீம் 200 ஆர் மாடல் தயாரான அதே பிளாட்ஃப்பார்மின் கீழ் தான் எக்ஸ்பல்ஸ் 200 மோட்டார் சைக்கிளை ஹீரோ தயாரித்துள்ளது.

அதிக உயரம் பெற்ற இந்த பைக்கில் முழு-எல்.இ.டி முகப்பு விளக்குகள், வின்டுஸ்க்ரீன் மற்றும் நக்கில் கார்டு ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன.

ஹீரோ அட்வென்ச்சர் எக்ஸ்பல்ஸ் பைக்கின் சிறப்பம்சங்கள்- விபரம்

நவீனமான தோற்றத்திற்கு வேண்டும் இந்த பைக் முன்பக்க மட்கார்டு அட்வென்ச்சர் தரத்திற்கு உயரத்தப்பட்டுள்ளது. இருக்கைகளை கீழறக்கி, மோட்டார் சைக்கிளின் உயரத்திற்கு ஏற்றவாறு சமன் செய்யப்பட்டுள்ளது.

ஹீரோ அட்வென்ச்சர் எக்ஸ்பல்ஸ் பைக்கின் சிறப்பம்சங்கள்- விபரம்

சாலை அல்லது வழி பரப்பில் தட்டுப்படாமல் இருக்க, பைக்கின் எக்ஸாஸ்டு செட் இருக்கைக்கு கீழ் அருகிலேயே பொருத்தப்பட்டுள்ளது.

ஹீரோ அட்வென்ச்சர் எக்ஸ்பல்ஸ் பைக்கின் சிறப்பம்சங்கள்- விபரம்

பின்பகுதி உடமைகளை வைக்க உதவும் ரேக்கிற்கு கீழ் பைக்கின் எல்.இ.டி டெயில் விளக்கு உள்ளது. எக்ஸ்பல்ஸ் 200 மட்கார்ட் அமைப்பு அவ்வளவாக பைக்கின் தோற்றத்திற்கு பொருந்தவில்லை.

ஹீரோ அட்வென்ச்சர் எக்ஸ்பல்ஸ் பைக்கின் சிறப்பம்சங்கள்- விபரம்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் எக்ஸ்பல்ஸ் மோட்டார் சைக்கிளுக்கு ஏற்றவாறான பல்வேறு துணைப்பொருட்களை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹீரோ அட்வென்ச்சர் எக்ஸ்பல்ஸ் பைக்கின் சிறப்பம்சங்கள்- விபரம்

இந்த பைக்கின் முன்பகுதி சக்கரம் 21 இஞ்ச், இதனுடைய பின்பகுதி 18 -இஞ்ச் என்ற அளவில் உள்ளது. இதனால் இந்த பைக்கில் செல்லும் அந்த ஆஃப் ரோடிங் அனுபவம் புதுவிதமாக இருக்கும்.

ஹீரோ அட்வென்ச்சர் எக்ஸ்பல்ஸ் பைக்கின் சிறப்பம்சங்கள்- விபரம்

தவிர இந்த பைக்கின் சஸ்பென்ஷன் முன்பகுதியில் 190 மிமீ அளவில் உள்ளது, இதனுடைய பின்பகுதிக்கான சஸ்பென்ஷன் 170 மிமீ.

ராயல் என்ஃபீல்டு பைக்கின் 220மிமீ கிரவுண்டு கிளயரன்ஸ் கொண்டுள்ள இந்த பைக், எந்தவித பாதையிலும் செல்லும் திறன் பெற்றதாக உள்ளது.

ஹீரோ அட்வென்ச்சர் எக்ஸ்பல்ஸ் பைக்கின் சிறப்பம்சங்கள்- விபரம்

எக்ஸ்பல்ஸ் 200 பைக்கின் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் அமைப்பு உள்ளது. ஏபிஸ் சிங்கிள் - சேனல் யூனிட் பாதுகாப்பு அம்சம் வழங்கப்பட்டுள்ளது.

ஹீரோ அட்வென்ச்சர் எக்ஸ்பல்ஸ் பைக்கின் சிறப்பம்சங்கள்- விபரம்

ஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக்கில் முற்றிலும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது. இது பைக்கின் அனைத்து செயல்பாடுகளையும் திரையில் காட்டும்.

ஹீரோ அட்வென்ச்சர் எக்ஸ்பல்ஸ் பைக்கின் சிறப்பம்சங்கள்- விபரம்

அட்வென்ச்சர் பைக்கிற்கு பெரியளவில் உதவும், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் இதில் ஹீரோ வழங்கியுள்ளது. இதற்கு பல வாகன ஆர்வலர்கள் அதிக வரவேற்பை தெரிவித்துள்ளனர்.

ஹீரோ அட்வென்ச்சர் எக்ஸ்பல்ஸ் பைக்கின் சிறப்பம்சங்கள்- விபரம்

ஆஃப்-ரோடு பட்டன் டயர்கள் மற்றும் 10 ஸ்பீடு அட்ஜெஸ்டபிள் காஸ்-சார்ஜிடு ரியர் மோனோ ஷாக் போன்ற அம்சங்கள் ஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக்கிற்கு சிறப்பான தேர்வாக உள்ளது.

ஹீரோ அட்வென்ச்சர் எக்ஸ்பல்ஸ் பைக்கின் சிறப்பம்சங்கள்- விபரம்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 150சிசி இம்பிளஸ் மாடலுக்கு பிறகு தயாரித்துள்ள இரண்டாவது அட்வென்ச்சர் மோட்டார் சைக்கிள் தான் எக்ஸ்பல்ஸ் 200 பைக்.

200சிசி எக்ஸ்பல்ஸ் புதிய பிளாட்ஃப்பார்மின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றவாறான துணை பொருட்கள் விரைவில் ஹீரோ வெளியிடும் என்று தெரிகிறது.

Most Read Articles
English summary
Read in Tamil: Hero XPulse Top Features To Know: Full-LED Lights, Digital Speedo, Turn-By-Turn Navigation & More. Click for Details...
Story first published: Monday, February 19, 2018, 17:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X