புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் சாகச ரக மோட்டார்சைக்கிள் அறிமுகம்: விபரம்!

Written By:

டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் நடந்து வரும் சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய சாகச ரக பைக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹீரோ எக்ஸ்பல்ஸ் என்ற பெயரிலான இந்த பைக் குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் சாகச ரக மோட்டார்சைக்கிள் அறிமுகம்: விபரம்!

ஹீரோ நிறுவனம் இம்பல்ஸ் என்ற 150சிசி சாகச ரக பைக் மாடலை விற்பனை செய்து வருகிறது. இதற்கு மாற்றாக இந்த புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200சிசி பைக் விற்பனைக்கு களமிறக்கப்பட உள்ளது.

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் சாகச ரக மோட்டார்சைக்கிள் அறிமுகம்: விபரம்!

ஹீரோ இம்பல்ஸ் பைக்கை போன்றே இந்த பைக்கிலும் எளிமையான சில டிசைன் அம்சங்கள் இடம்பெற்று இருக்கின்றன. உயரமான இருக்கை அமைப்பு, முன்புறத்தில் லாங்- டிராவல் ஃபோர்க்குகள் ஆகியவை சாகச ரக பைக் மாடலுக்கான சிறப்பம்சங்களாக இருக்கின்றன.

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் சாகச ரக மோட்டார்சைக்கிள் அறிமுகம்: விபரம்!

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக்கில் முழுமையான எல்இடி ஹெட்லைட் இடம்பெற்றுள்ளது. விண்ட்ஸ்க்ரீன், லக்கேஜ் ரேக் மற்றும் கைகளை பாதுகாக்கும் நக்கிள் கார்டு ஆகியவையும் கரடுமுரடான சாலைகளில் பயணம் மேற்கொள்வதற்கான கூடுதல் வசதிகளை அளிக்கும்.

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் சாகச ரக மோட்டார்சைக்கிள் அறிமுகம்: விபரம்!

முதல்முறையாக 200சிசி பைக் மார்க்கெட்டில் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. நீண்ட தூர பயணங்களின்போது இது மிகவும் உதவிகரமாக இருக்கும்.

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் சாகச ரக மோட்டார்சைக்கிள் அறிமுகம்: விபரம்!

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக்கில் 200சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட இந்த எஞ்சின் அதிகபட்சமாக 18.1 பிஎச்பி பவரையும், 17.2 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் சாகச ரக மோட்டார்சைக்கிள் அறிமுகம்: விபரம்!

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக்கில் அதிக உறுதிமிக்க டைமண்ட் ஃப்ரேம் பொருத்தப்பட்டு இருக்கிறது. அலுமினியம் ஸ்கிட் பிளேட்டும் ஆஃப்ரோடு பயணங்களின்போது எஞ்சின் பாகங்களை பாதுகாக்கும். மேல்நோக்கிய புகைப்போக்கி அமைப்பு நீர் நிலைகளை கடக்கும்போது உதவிகரமாக இருக்கும்.

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் சாகச ரக மோட்டார்சைக்கிள் அறிமுகம்: விபரம்!

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக்கில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் கொண்ட லாங்- டிராவல் சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரும் இருக்கிறது. முன்புறத்தில் 21 அங்குல சக்கரமும், பின்புறத்தில் 18 அங்குல சக்கரமும் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக் 220மிமீ க்ரவுண்ட் க்ளியரன்ஸ் கொண்டது.

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் சாகச ரக மோட்டார்சைக்கிள் அறிமுகம்: விபரம்!

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு முதல் பாதியில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.1.20 லட்சம் விலையில் விற்பனைக்கு களமிறக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.

English summary
Auto Expo 2018: Hero XPulse adventure motorcycle unveiled. Hero MotoCorp has unveiled the new XPulse, India's first 200cc adventure motorcycle.
Story first published: Wednesday, February 7, 2018, 15:34 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark