TRENDING ON ONEINDIA
-
ஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது?
-
கை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...
-
Nayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்
-
கொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான்? அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா?
-
வாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.!
-
Ind vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்
-
வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா
-
250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க
இந்தியாவில் ஆறிமுகமான ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 ஆர் மோட்டார் சைக்கிள்..!!
ஹீரோ நிறுவனத்தின் புதிய எக்ஸ்ட்ரீம் 200 ஆர் பைக் இந்தியாவில் வெளியிடப்பட்டது. ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டு வந்த மாடல் தான் இது என்றாலும், அதனுடைய பெயரில் தான் ட்விஸ்டே உள்ளது.
2016 ஆட்டோ எக்ஸ்போவில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் என்ற பெயரில் கான்செப்ட் மாடலாக வெளியிட்ட இந்த பைக் தான் தற்போது தயாரிப்பு நிலை வேரியண்டாக எக்ஸ்ட்ரீம் 200ஆர் என்ற பெயரில் வெளிவந்துள்ளது.
முற்றிலும் புதிய 200சிசி திறன், ஏர் கூல்டு திறன் பெற்ற எஞ்சினை கொண்டுள்ள இந்த பைக் 18.1 பிஎச்பி பவர் மற்றும் 17.2 என்.எம் டார்க் திறனை வழங்கும்.
பைக் ஓடும்போது எழக்கூடிய அதிர்வுகளை சமநிலை படுத்த பேலன்ஸர் ஷாஃப்ட் என்ற தண்டுவடம் இந்த எக்ஸ்ட்ரீம் 200 ஆர் பைக்கில் வழங்கப்பட்டுள்ளது.
5 ஸ்பீடு கியர்பாக்ஸ் பெற்றுள்ள இந்த பைக் லிட்டருக்கு 39.9 கி.மீ மைலேஜ் தருவதாக ’உலக மோட்டார் சைக்கிள் டெஸ்ட் சைக்கிள்’ என்ற அமைப்பு முடிவுகளை வழங்கியுள்ளது.
டைமன்டு வடிவ ஃபிரேம் சேஸிஸ்சில் முன்பக்க சக்கரத்தில் 37மிமீ டெலஸ்கோபிக் ஃபோர்க்ஸ் மற்றும் பின்பகுதியில் மோனோ ஷாக் அப்ஸபரும் உள்ளன.
இதுதவிர எக்ஸ்ட்ரீம் 200 ஆர் பைக்கின் முன்பக்கத்தில் 276மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் 220 மிமீ டிஸ்க் பிரேக் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.
பைக்கின் முன்புறத்தில் உள்ள பிரேக்கில் மத்திய அரசு வாகன கொள்கைக்கு ஏற்றவாறு ஏபிஎஸ் பாதுகாப்பு அம்சம் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
17 இஞ்ச் அலாய் சக்கரங்களை பெற்றுள்ள ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக், 2016 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடப்பட்ட எக்ஸ்ட்ரீம் 200 எஸ் கான்செப்ட் பைக்கின் புதிய பரிணாமம் பெற்ற மாடலாகவே பார்க்கப்படுகிறது.
பைக்கின் முன்பக்கத்தில் பெரிய முகப்பு விளக்குகள் இடம்பெற்றுள்ளன. அதற்கு மேல் புறத்தில் எல்.இ.டி திறன் பெற்ற விளக்குகள் இரு பக்கங்களில் சிறியதாக வழங்கப்பட்டுள்ளன.
அனலாக்கில் இயங்கும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் இருக்கும் அதே சமயத்தில், வெகம் மற்றும் ரைடருக்கான அடிப்படை தகவல்களை தரும் டிஜிட்டல் ஸ்கிரீன் தேவையையும் இந்த பைக் பெற்றுள்ளது.
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 ஆர் பைக்கில் ஏர் வென்டுகளுடன் கூடிய முன்பக்க கவுல், எரிவாயு டேங்க் மற்றும் சூடான எஞ்சின் குளிர்வடைய பெல்லி பிளான் போன்ற தேவைகள் வழங்கப்பட்டுள்ளன.
795மிமீ உயரத்தில் இருக்கையை பெற்றிருக்கும் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 ஆர் பைக் கவர்ந்திழுக்கும் கிராபிக்ஸ் வடிவமைப்பு மற்றும் கவனத்தை பற்றும் வண்ணங்களில் தயாரிக்கப்பட்டுள்ளன.
பைக்கின் பின்பகுதி மிகவும் கூர்மையாகவும், அதே சமயத்தில் உயரம் குறைவாகவும், ஸ்டைலாகவும் காட்சியளிக்கிறது. பின்னால் இருக்கும் எல்.இ.டி விளக்குகள் சரியான பொருத்தமுடன் உள்ளது.
உலகளவில் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பாளராக உள்ள ஹீரோ 200சிசி செக்மென்டிற்கு திரும்பியிருப்பது பெரிய முயற்சியாக உள்ளது.
இதன்மூலம் ஹீரோ நிறுவனம் தனது ஸ்போர்ட்டி திறன் பெற்ற பைக்குகளுக்கு இளம் தலைமுறையினரை குறிவைப்பது நன்றாக தெரிகிறது.