புதிய ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டர் விலை விபரம் வெளியானது!

Written By:

ஹோண்டா இருசக்கர வாகன நிறுவனத்தின் இணையதளத்தில் புதிய ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டர் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், விலை உள்ளிட்ட முக்கிய விபரங்களும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

விற்பனைக்கு வந்தது புதிய ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டர்: முழு விபரம்!

கடந்த மாதம் நடந்த சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் கூடுதல் சிறப்பம்சங்களுடன் ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியர்கள் அதிகம் விரும்பும் ஸ்கூட்டர் மாடல் என்பதால், வாடிக்கையாளர்களிடத்தில் அதிக எதிர்பார்ப்பு நிலவியது.

விற்பனைக்கு வந்தது புதிய ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டர்: முழு விபரம்!

இந்த சூழலில், புதிய ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டர் இணையதளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், இந்த ஸ்கூட்டர் வர்த்தக ரீதியில் விற்பனைக்கு வந்துள்ளது.

விற்பனைக்கு வந்தது புதிய ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டர்: முழு விபரம்!

புதிய ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரில் புதிய ஃப்ரேம் அமைப்பையும், சஸ்பென்ஷனையும் பெற்றிருக்கிறது. புதிய ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டர் 109 கிலோ எடை கொண்டது. இதன் இருக்கை உயரம் 765மிமீ ஆக உள்ளது.

விற்பனைக்கு வந்தது புதிய ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டர்: முழு விபரம்!

புதிய ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரில் 5.3 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டு இருக்கிறது. 18 லிட்டர் கொள்திறன் கொண்ட பொருட்கள் வைப்பதற்கான இடவசதி இருக்கிறது.

விற்பனைக்கு வந்தது புதிய ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டர்: முழு விபரம்!

புதிய ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரில் 109.19சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8 பிஎச்பி பவரையும், 9 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மணிக்கு 83 கிமீ வேகம் வரை செல்லும். வி- மேட்டிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

விற்பனைக்கு வந்தது புதிய ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டர்: முழு விபரம்!

புதிய ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரில் முன்சக்கரத்திலும், பின்சக்கரத்ிதலும் 130மிமீ டிரம் பிரேக்குகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இதனுடன், ஹோண்டாவின் காம்பி பிரேக்கிங் சிஸ்டமும் இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் 10 அங்குல சக்கரங்களும், 90/100 அளவுடைய ட்யூப்லெஸ் டயர்களும் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

புதிய ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரில் முழுவதுமான மெட்டல் பாடி முக்கிய விஷயம். அத்துடன் எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் மற்றும் அனலாக் மீட்டருடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை இடம்பெற்று இருக்கிறது. இருக்கையை திறப்பதற்கு விசேஷ ஸ்மார்ட் சீட் ஓபனிங் வசதியும், மொபைல் சார்ஜர் சாக்கெட்டும் உள்ளன.

விற்பனைக்கு வந்தது புதிய ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டர்: முழு விபரம்!

புதிய ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டர் ஸ்டான்டர்டு மற்றும் டீலக்ஸ் என இரு மாடல்களில் கிடைக்கும். ஸ்டான்டர்டு மாடல் ரூ.52,460 எக்ஸ்ஷோரூம் விலையிலும், டீலக்ஸ் மாடல் ரூ.54,325 எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.

English summary
The new Honda Activa 5G has been listed on Honda's official website. The new Activa 5G was first showcased at the Auto Expo 2018. The scooter is available in two variants: STD and DLX. The two models are priced at Rs 52,460 and Rs 54,325 ex-showroom (Delhi), respectively.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark