ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரில் உள்ள நிறைகளும் குறைகளும்

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனையாகி வரும் ஆக்டிவா 5ஜி பைக்கில் உள்ள நிறைகள் மற்றும் குறைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா? இந்த செய்தியில் அது குறித்து தெளிவாக பார்க்கலாம் வாருங்கள்.

By Balasubramanian

ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா மாடல் ஸ்கூட்டரை கடந்த 2000வது ஆண்டு முதன் முதலாக அறிமுகப்படுத்தியது. அடுத்தது அந்த ஸ்கூட்டர் பரிமான வளர்ச்சி பெற்றதையடுத்து அதிகமான விற்பனையை எட்டியது. தற்போது இந்த ஸ்கூட்டர் தான் இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் ஸ்கூட்டராக இருக்கிறது.

ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரில் உள்ள நிறைகளும் குறைகளும்

இந்நிலையில் கடந்த பிப் மாதம் நடந்த ஆட்டோ எகஸ்போவில் ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது விறுவிறுப்பாக விற்பனையாகி வருகிறது. இந்த ஸ்கூட்டரில் சில நிறைகளும் குறைகளும் கலந்து தான் இருக்கிறது. அதை பற்றி இக்செய்தியில் காணலாம்.

ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரில் உள்ள நிறைகளும் குறைகளும்

குறைகள்

ஆக்டிவா 5ஜியை பொருத்தவரை இதற்கு முந்தய மாடலான 4ஜியை ஒத்து தான் எல்லா பாகங்களும் அமைந்திருக்கிறது. சில புதிய கலர்கள், முழு எல்.இ.டி முகப்பு விளக்கு, என சில மாற்றங்களை தவிர பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.

ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரில் உள்ள நிறைகளும் குறைகளும்

சில மாற்றங்களுடன் வந்துள்ள ஆக்டிவா 5ஜியில் உள்ள வசதிகள் அதே ரகத்தில் உள்ள மற்ற ஸ்கூட்டர்களை விட குறைவாகதான் உள்ளது. முக்கியமாக இந்த ஸ்கூட்டரில் சீட்டிற்கு உள்ளே தான் பெட்ரோல் நிரப்பும் பகுதி இருக்கிறது. இது பெரும் குறையாக பார்க்கப்படுகிறது.

ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரில் உள்ள நிறைகளும் குறைகளும்

ஆக்டிவா 5 ஜியில் அலாய் வீல், மற்றும் முன்பக்க டெலஸ்கோபிக் ஃபோக்ஸ் ஆகிய இல்லை. இந்த பைக்கிற்கு போட்டியாக வெளியாகும் பைக்குகளில் இந்த பாங்கங்களுடன் விற்பனையாகியுள்ளது.

ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரில் உள்ள நிறைகளும் குறைகளும்

பொதுவாக ஹோண்டா பைக்குகளில் சிபிஎஸ் (கோம்பி- பிரேக்கிங் சிஸ்டம்) என்ற கருவி இருக்கும் அதாவது. பைக்கில் செல்லும் போது ஒரு பிரேக்கை பிடித்தால் கூட இரண்டு பிரேக்கும் படிக்கும் தொழிற்நுட்பம் அது. ஆனால் அது ஆக்டிவா 5ஜியில் இல்லை. மேலும் டிஸ்க் பிரேக் ஒரு ஆப்ஷனாக கூட வழங்கப்படவில்லை.

ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரில் உள்ள நிறைகளும் குறைகளும்

ஆக்டிவா 5ஜியில் முன்பக்கம் கால் வைக்கும் பகுதியில் போதிய இடவசதியில்லை இது ஒரு குறையாக வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர். ஆனால் இந்த ஸ்கூட்டரில் சீட்டிற்கு அடியில் 18 லிட்டர் அளவிற்கு இடவசதியுள்ளது.

ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரில் உள்ள நிறைகளும் குறைகளும்

நிறைகள்

இந்த பைக்கின் மிக முக்கியமான சிறப்பம்சம் முன் பக்கத்தில் டி.ஆர்.எல். உடன் உள்ள எல்.இ.டி ஹெட்லைட் தான். இது ஸ்கூட்டரின் லுக்கை மாற்றும் இல்லாமல் இரவில் இதை ஓட்டி செல்லும் போது அதிகமான வெளிச்சத்தையும் தருகிறது.

ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரில் உள்ள நிறைகளும் குறைகளும்

ஆக்டிவா 5ஜியில் உள்ள இக்னிஷியன் பகுதியில் ஆன்-ஆப், சீட் அன்லாக், இக்னிஷியன் பகுதியில் மழை நீர் புகுந்து செல்லாமல் இருக்கும் லாக் என 4 இன் 1 வசதியுடன் இக்னிஷியன் பகுதி அமைந்துள்ளது.

ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரில் உள்ள நிறைகளும் குறைகளும்

இந்த பைக்கின் டி.எல்.எக்ஸ் வேரியண்டில் புதிய செமி டிஜிட்டல் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. அதில் ஸ்கூட்டரை சர்வீஸ் செய்யும் காலத்தை கணக்கிட்டு ஓட்டுநருக்கு அறிவுத்தும் தொழிற்நுட்பமும் பொருத்தப்பட்டுள்ளது.

ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரில் உள்ள நிறைகளும் குறைகளும்

இந்த பைக் இந்தியாவில் அதிகளவு விற்பனையாக முக்கிய காரணம் இந்த பைக்கில் உள்ள அகலமான சீட் வசதி பெண்கள் இந்த மாதிரியான வசதியை அதிகம் விரும்புகின்றனர். முன்பக்கம் பின் பக்கம் என இரண்டு பேருக்குமே நல்ல இட வசதி வழங்கி இந்த பைக் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரில் உள்ள நிறைகளும் குறைகளும்

மேலும் ஆக்டிவா ஸ்கூட்டர் வாங்கி பெரும்பாலானோர் பல நாட்களாக பெரிய பிரச்னைகள் இன்றி பயன்படுத்தி வருகின்றனர். இதுவே மக்கள் மத்தியில் இந்த பைக் மீது பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனாலும் பைக் விற்பனை பெரிய அளவிற்கு அதிகரித்துள்ளது.

ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரில் உள்ள நிறைகளும் குறைகளும்

ஸ்கூட்டர் என்றாலே ஸ்கூட்டி என டி.வி.எஸ் நிறுவனத்தின் ஸ்கூட்டி மாடல் ஸ்கூட்டர் நல்ல விற்பனையாகி வந்த நிலையில் ஆக்டிவாவின் விற்பனை அதை பின்னுக்கு தள்ளி இன்னு ஆக்டிவா ரக பைக் என மக்கள் மத்தியில் பெயர் எடுத்துள்ளது.

டிரைவ் ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆக்டிவா #activa
English summary
Honda Activa 5G Disadvantages (Cons) and Advantages (Pros): Some Things To Know About The Activa 5G. Read in Tamil
Story first published: Saturday, May 12, 2018, 13:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X