புதிய ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டர் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

Posted By:

கிரேட்டர் நொய்டாவில் நடந்து வரும் ஆட்டோ எக்ஸ்போவில் கூடுதல் சிறப்பம்சங்களுடன் ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. படங்களுடன் தகவல்களை காணலாம்.

புதிய ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டர் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

புதிய ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டர் பரிமாணத்தில் எந்த மாற்றமும் மாற்றமில்லை. 1,761மிமீ நீளமும், 710மிமீ அகலமும்,, 1,149மிமீ உயரமும் கொண்டது.

இந்த ஸ்கூட்டரின் வீல் பேஸ் 1,238மிமீ ஆகவும், க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 153மிமீ ஆகவும் இருக்கிறது.

புதிய ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டர் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

புதிய ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரின் வடிவமைப்பில் பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லை. முற்றிலும் புதிய எல்இடி ஹெட்லைட்டுகள் கொாடுக்கப்பட்டு இருப்பது முக்கிய அம்சம்.

110சிசி ஸ்கூட்டர் செக்மென்ட்டில் எல்இடி ஹெட்லைட்டுடன் வந்திருக்கும் முதல் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. எல்இடி ஹெட்லைட் மூலமாக மின்சார சேமிப்பு வசதியை பெற்றிருக்கிறது.

புதிய ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டர் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

புதிய ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரில் மெட்டல் மஃப்ளர் புரொடெக்டர், க்ரோம் அலங்காரங்களும் கூடுதலாக இடம்பெற்று இருக்கின்றன. விலை உயர்ந்த டீலக்ஸ் வேரியண்ட்டில் டிஜிட்டல் மற்றும் அனலாக் மீட்டர் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்று இருக்கிறது.

புதிய ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டர் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

சர்வீஸ் ரிமைன்டர் மற்றும் ஈக்கோ ஸ்பீடு இண்டிகேட்டர் உள்ளிட்ட வசதிகளும் புதிது. புதிய ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரில் இருக்ககையை திறக்கும் வசதியுடன் கூடிய 4-1 லாக் வசதியும் கூடுதலாக இடம்பெற்று இருக்கிறது.

புதிய ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டர் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

புதிய ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரில் 10 அங்குல வீல்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. 90/100 டயர்களும், டிரம் பிரேக் சிஸ்டமும் கொண்டுள்ளது. ஹோண்டாவின் காம்பி பிரேக்கிங் சிஸ்டமும் இருப்பது கூடுதல் பாதுகாப்பு அம்சமாக கூறலாம்.

புதிய ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டர் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

புதிய ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரில் 109.19சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக இந்த எஞ்சின் 8 பிஎச்பி பவரையும், 9 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சினுடன் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் 5.3 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் 108 கிலோ எடை கொண்டது.

புதிய ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டர் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

சில மாதங்களில் இந்த புதிய ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டர் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிவிஎஸ் ஜுபிடர், யமஹா ரே உள்ளிட்ட மாடல்களுக்கு நெருக்கடி அதிகமாகும்.

English summary
Auto Expo 2018: Honda Activa 5G Unveiled. The new Honda Activa 5G gets new colour options, a full LED headlight, and even more features. The new Activa 5G is expected to launch later this year in India and will rival the TVS Jupiter and Wego, the Yamaha Ray Z and Fascino.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark