ஆட்டோ எக்ஸ்போ 2018: ஹோண்டா சிபிஆர்1000ஆர்ஆர் ஃப்பையர்பிளேடு எஸ்பி மோட்டார் சைக்கிள் அறிமுகம்

Written By:

2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் மொத்தம் 11 புதிய இருசக்கர வாகனங்களை காட்சிப்படுத்தியுள்ளது.

ஹோண்டா சிபிஆர்1000ஆர்ஆர் ஃப்பையர்பிளேடு எஸ்பி பைக் அறிமுகம்

பயணிகள் ரக பைக்குகள் தொடங்கி ஸ்கூட்டர், ஸ்போர்ட்ஸ் பைக் உட்பட பல இருசக்கர வாகன ரகங்களை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தி வாகன துறையையே ஹோண்டா ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

ஹோண்டா சிபிஆர்1000ஆர்ஆர் ஃப்பையர்பிளேடு எஸ்பி பைக் அறிமுகம்

இந்த வரிசையில் ஹோண்டா வெளியிட்டுள்ள புதிய வாகனம் தான் சிபிஆர்1000ஆர்.ஆர் ஃபையர்பிளேடு எஸ்பி மோட்டார் சைக்கிள்.

செமி-ஆக்டிவ் சஸ்பென்ஷனை பெற்ற ஹோண்டாவின் முதல் தயாரிப்பாக சிபிஆர் 1000ஆர்.ஆர் ஃபையர்பிளேடு எஸ்பி பைக் உள்ளது.

ஹோண்டா சிபிஆர்1000ஆர்ஆர் ஃப்பையர்பிளேடு எஸ்பி பைக் அறிமுகம்

லித்தியம்-அயன் பேட்டரி, ஸிளிப்பர் கிளட்ச்சுடன் கூடிய குவிக்-ஷிஃப்டர் மற்றும் பிரம்போ வகை முன்பக்க கேலிபர்ஸ் இந்த பைக்கில் ஹோண்டா பொருத்தியுள்ளது.

ஹோண்டா சிபிஆர்1000ஆர்ஆர் ஃப்பையர்பிளேடு எஸ்பி பைக் அறிமுகம்

சிறிய ரக வாகனமாக உள்ள இந்த பைக்கில் இருக்கக்கூடிய தனித்துவமான கட்டமைப்புகள் சிபிஆர்1000ஆர்.ஆர் ஃபையர்பிளேடு எஸ்பி பைக்கை இலகுவாகவும், விரைவாகவும் செயல்படச்செய்யும்.

Recommended Video - Watch Now!
Under-Aged Rider Begs The Policewomen To Spare Him - DriveSpark
ஹோண்டா சிபிஆர்1000ஆர்ஆர் ஃப்பையர்பிளேடு எஸ்பி பைக் அறிமுகம்

999சிசி இன்லைன்-4, லிக்விடு கூல்டு எஞ்சின் பெற்றுள்ள இந்த பைக் அதிகப்பட்சமாக 189 பிஎச்பி பவர் மற்றும் 114 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

ஹோண்டா சிபிஆர்1000ஆர்ஆர் ஃப்பையர்பிளேடு எஸ்பி பைக் அறிமுகம்

ஃபையர்பிளேடு எஸ்பி பைக் தற்போது பயன்பாட்டில் உள்ள ஃபையர்பிளேடு மாடலை தழுவியே உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதை விட இந்த புதிய மாடலின் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

ஹோண்டா சிபிஆர்1000ஆர்ஆர் ஃப்பையர்பிளேடு எஸ்பி பைக் அறிமுகம்

பழைய மாடலை விட எஸ்பி என்ற பெயரோடு இணைத்து வெளிவந்துள்ள இந்த புதிய பைக், ஒரே எஞ்சினை தான் பெற்றுள்ளது. ஆனால் அதை விட இந்த மாடல் 11 பிஎச்பி கூடுதலாக வழங்கும்.

ஹோண்டா சிபிஆர்1000ஆர்ஆர் ஃப்பையர்பிளேடு எஸ்பி பைக் அறிமுகம்

ஒஹ்லின்ஸ் ஸ்டெப் மோட்டார்-டை மின்சார கட்டுப்பாடு பெற்ற சஸ்பென்ஷனை ஹோண்டா சிபிஆர்1000ஆர்.ஆர். ஃபையர்பிளேடு எஸ்பி பைக் பெற்றுள்ளது.

பில்ட்-இன் வீலி கண்ட்ரோல் மற்றும் ரியர் லிஃப்ட் கண்ட்ரோல் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுப்பாட்டின் மூலம் இந்த பைக்கின் டார்க் திறன் இயங்கும்.

ஹோண்டா சிபிஆர்1000ஆர்ஆர் ஃப்பையர்பிளேடு எஸ்பி பைக் அறிமுகம்

புதிய ஏபிஎஸ், தேர்ந்தெடுக்கப்பட்ட எஞ்சின் பிரேக், குவிக்‌ஷிஃப்டர், பைக் இயக்கத்தை தேர்வு செய்யும் அமைப்பு மற்றும் பவர் செல்க்டர் போன்ற அம்சங்கள் இதில் உள்ளன.

ஹோண்டா சிபிஆர்1000ஆர்ஆர் ஃப்பையர்பிளேடு எஸ்பி பைக் அறிமுகம்

குறிப்பாக ஹோண்டா நிறுவனம் இந்த பைக்கில் பொருத்தியுள்ள ஆர்.சி 213வி-எஸ் மோட்டோ ஜிபி என்ற தொழில்நுட்பம் இதற்கான சிறந்த ரைடிங் அனுபவத்தை வழங்கும்.

ஹோண்டா சிபிஆர்1000ஆர்ஆர் ஃப்பையர்பிளேடு எஸ்பி பைக் அறிமுகம்

ஹோண்டா சிபிஆர்1000ஆர்.ஆர். ஃபையர்பிளேடு எஸ்பி பைக் 5 வித ரைடிங் மோடுகளை பெற்றுள்ளது.

அதில் ஒன்று சமமான பயணத்தை வழங்கும்.

ஹோண்டா சிபிஆர்1000ஆர்ஆர் ஃப்பையர்பிளேடு எஸ்பி பைக் அறிமுகம்

இரண்டாவது மோடு என்பது பைக் வெளிப்படுத்தும் ஆற்றலை முதல் மூன்று கியர்களுக்கு வழங்கும். இது சஸ்பென்ஷன், எஞ்சின் பிரேக்கிங் மற்றும் சஸ்பென்ஷனுக்கான அட்ஜெஸ்ட்மென்டையும் சரிசெய்யும்.

ஹோண்டா சிபிஆர்1000ஆர்ஆர் ஃப்பையர்பிளேடு எஸ்பி பைக் அறிமுகம்

ஹோண்டா காட்சிப்படுத்தியுள்ள புதிய ஹோண்டா சிபிஆர்1000ஆர்.ஆர் ஃபையபிளேடு பைக் நிச்சயம் சிறந்த தோற்றம் மற்றும் செயல்திறனை பெற்ற பைக் தான்.

ஆனால் இந்தியாவில் இந்த பைக்கை ஹோண்டா விற்பனைக்கு கொண்டு வருமா என்பதில் எந்த தகவலும் இல்லை. அதில் அந்நிறுவனம் இழுபறி செய்து வருகிறது.

ஹோண்டா சிபிஆர்1000ஆர்ஆர் ஃப்பையர்பிளேடு எஸ்பி பைக் அறிமுகம்

ஆனால் ஃபையர்பிளேடு எஸ்பி பைக்கிற்கான ரசிகர்கள் இந்தியாவிலு இருக்கிறார்கள். அதை ஹோண்டா கருத்தில் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

English summary
Read in Tamil: Honda CBR1000RR Fireblade SP Showcased. Click for Specs, Features, Images & More
Story first published: Monday, February 12, 2018, 15:21 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark