புதிய ஹோண்டா சிபிஆர் 1000ஆர்ஆர் சூப்பர் பைக்கின் விலை அதிரடியாக குறைப்பு!!

Written By:

ஹோண்டா சிபிஆர்1000ஆர்ஆர் பைக்கின் விலை இந்தியாவில் அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஹோண்டா சிபிஆர்1000ஆர்ஆர் பைக் விலை அதிரடி குறைப்பு!!

இறக்குமதி செய்யப்படும் பைக்குகள் மீதான வரி பட்ஜெட்டில் 25 சதவீதம் வரை குறைத்து அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இந்த வரி குறைப்பால் கிடைக்கும் சலுகையை வாடிக்கையாளர்களுக்கு பைக் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

புதிய ஹோண்டா சிபிஆர்1000ஆர்ஆர் பைக் விலை அதிரடி குறைப்பு!!

அதன்படி, ஹோண்டா நிறுவனம் தனது சிபிஆர்1000ஆர்ஆர் சூப்பர் பைக்கின் விலையை ரூ.2.54 லட்சம் வரை குறைத்துள்ளது. ஸ்டான்டர்டு மாடல் ரூ.16.79 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த பைக்கின் விலை ரூ.2.01 லட்சம் குறைக்கப்பட்டு, ரூ.14.78 லட்சம் விலையில் இனி விற்பனைக்கு கிடைக்கும்.

புதிய ஹோண்டா சிபிஆர்1000ஆர்ஆர் பைக் விலை அதிரடி குறைப்பு!!

அதேபோன்று, ஹோண்டா சிபிஆர்1000ஆர் எஸ்பி என்ற உயர்வகை மாடல் ரூ.21.22 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த மாடலின் விலை ரூ.2.54 லட்சம் குறைக்கப்பட்டு இனி ரூ.18.68 லட்சம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும்.

புதிய ஹோண்டா சிபிஆர்1000ஆர்ஆர் பைக் விலை அதிரடி குறைப்பு!!

புதிய ஹோண்டா சிபிஆர்1000ஆர்ஆர் பைக்கில் 4 சிலிண்டர்கள் கொண்ட 999சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 189 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா சிபிஆர்1000ஆர்ஆர் பைக் விலை அதிரடி குறைப்பு!!

புதிய ஹோண்டா சிபிஆர் 1000ஆர்ஆர் பைக்கின் எடை பழைய மாடலைவிட 16 கிலோ குறைவானது. 195 கிலோ எடை கொண்ட இந்த புதிய மாடல் செயல்திறனிலும், கையாளுமையிலும் சிறப்பானதாக மேம்பட்டு இருக்கிறது. எடை குறைக்கப்பட்டதன் காரணமாக, எடைக்கும், செயல்திறனுக்குமான விகிதம் 14 சதவீதம் மேம்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா சிபிஆர்1000ஆர்ஆர் பைக் விலை அதிரடி குறைப்பு!!

இந்த பைக்கில் கைரோஸ்கோப்பிக் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், 9 லெவல் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், எஞ்சின் பிரேக்கிங் சிஸ்டம், எலக்ட்ரானிக் ஸ்டீயரிங் டேம்பர் மற்றும் பவர் செலக்டர் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு தொழில்நுட்பங்களை பெற்றிருக்கிறது.

புதிய ஹோண்டா சிபிஆர்1000ஆர்ஆர் பைக் விலை அதிரடி குறைப்பு!!

புதிய ஹோண்டா சிபிஆர்1000ஆர்ஆர் எஸ்பி பைக்கின் முன்புறத்தில் 43மிமீ தலைகீழ் அமைப்பிலான ஃபோர்க்குகள் கொண்ட செமி ஆக்டிவ் ஓலின்ஸ் எலக்ட்ரானிக் கன்ட்ரோல் சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் பொருத்தப்பட்டு இருக்கிறது. குயிக் ஷிஃப்ட் மற்றும் டவுன்ஷிஃப்ட் அசிஸ்ட் வசதி, டிஎஃப்டி வண்ணத்திரை கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை முக்கிய அம்சங்கள்.

புதிய ஹோண்டா சிபிஆர்1000ஆர்ஆர் பைக் விலை அதிரடி குறைப்பு!!

புதிய ஹோண்டா சிபிஆர் 1000ஆர்ஆர் பைக்கின் விலை வெகுவாக குறைக்கப்பட்டு இருப்பது வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த தேர்வு வாய்ப்பை வழங்கும். டுகாட்டி, யமஹா, சுஸுகி, ஹார்லி டேவிட்சன், பிஎம்டபிள்யூ மோட்டோராட் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் ஏற்கனவே இறக்குமதி செய்து விற்கப்படும் மாடல்களின் விலையை குறைத்து அறிவித்தது நினைவிருக்கலாம்.

English summary
Honda has reduced the price of its superbike, the CBR1000RR India. The price of the standard Honda CBR1000RR stands at Rs 14.78 lakh as opposed to Rs 16.79lakh and gets price cut of Rs 2.01 lakh.
Story first published: Wednesday, April 11, 2018, 10:20 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark