ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டர் விற்பனை புதிய மைல்கல்லை எட்டியது!

Written By:
Recommended Video - Watch Now!
Tata Nexon Faces Its First Recorded Crash

இரு மாதங்களுக்கு முன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. விற்பனையில் இந்த புதிய ஸ்கூட்டர் அசத்தி வருகிறது. கூடுதல் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டர் விற்பனை புதிய மைல்கல்லை எட்டியது!

ஹோண்டா ஆக்டிவா மூலமாக மிக வலுவான மார்க்கெட்டை பிடித்துவிட்ட ஹோண்டா நிறுவனம் அண்மையில்ல 125 சிசி மார்க்கெட்டில் க்ரேஸியா என்ற புதிய ஸ்கூட்டர் மாடலை களமிறக்கியது. இளம் வாடிக்கையாளர்களை கவரும் டிசைன் அம்சங்களுடன் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது.

ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டர் விற்பனை புதிய மைல்கல்லை எட்டியது!

இந்த நிலையில், விற்பனைக்கு வந்தது முதல் மிகச் சிறப்பான வரவேற்பை இந்த புதிய க்ரேஸியா ஸ்கூட்டர் பெற்றிருக்கிறது. அறிமுகமான முதல் மாதத்திலேயே டாப்- 10 ஸ்கூட்டர் பட்டியலில் இடம்பிடித்தது.

ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டர் விற்பனை புதிய மைல்கல்லை எட்டியது!

இதைத்தொடர்ந்து, அறிமுகம் செய்யப்பட்டு இரண்டரை மாதங்கள் ஆகும் நிலையில், புதிய ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டரின் விற்பனை 50,000 என்ற புதிய மைல்கல்லை கடந்துள்ளது. இது ஹோண்டா நிறுவனத்துக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.

ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டர் விற்பனை புதிய மைல்கல்லை எட்டியது!

புதிய ஹோண்டா க்ரேஸியா மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றிருப்பது இந்த ஸ்கூட்டரின் டிசைன் மிக முக்கிய காரணம். இளம் தலைமுறை வாடிக்கையாளர்களை கவரும் வகையில் மிக சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டர் விற்பனை புதிய மைல்கல்லை எட்டியது!

மேலும், ஸ்கூட்டர் மார்க்கெட்டில் முதல்முறையாக எல்இடி ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள் போன்றவை வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. இந்த ஸ்கூட்டரில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், கூடுதலாக எல்சிடி திரை மூலமாக கூடுதல் தகவல்களை பெற முடியும்.

ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டர் விற்பனை புதிய மைல்கல்லை எட்டியது!

புதிய ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டரில் 124.9சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆக்டிவா 125 சிசி ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டு இருக்கும் அதே எஞ்சின்தான். இந்த எஞ்சின் 8 பிஎச்பி பவரையும், 10.54 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டர் விற்பனை புதிய மைல்கல்லை எட்டியது!

டியோ ஸ்கூட்டரைவிட சக்திவாய்ந்த எஞ்சினுடன் வந்திருப்பது வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. இந்த ஸ்கூட்டர் லிட்டருக்கு 47 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டர் விற்பனை புதிய மைல்கல்லை எட்டியது!

புதிய க்ரேஸியா ஸ்கூட்டரில் முன்சக்கரத்தில் 190மிமீ விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் டிரம் பிரேக்கும் இருக்கின்றன. ஹோண்டா நிறுவனத்தின் விசேஷமான காம்பி பிரேக்கிங் சிஸ்டமும் இருப்பது கூடுதல் சிறப்பு.

ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டர் விற்பனை புதிய மைல்கல்லை எட்டியது!

புதிய ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டர் மூன்று விதமான மாடல்களில் கிடைக்கிறது. க்ரேஸியா ஸ்டான்டர்டு மாடல் ரூ.60,228 விலையிலும், அலாய் வீல் மாடல் ரூ.62,125 விலையிலும், டிஎல்எக்ஸ் என்ற உயர்வகை மாடல் ரூ.64,435 என்ற சென்னை எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கிறது.

English summary
Honda Grazia Sales Crosses 50,000 Mark.
Story first published: Friday, January 26, 2018, 10:29 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark