புதிய ஹோண்டா எக்ஸ்-பிளேடு 160 பைக் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

Written By:

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புதிய ஹோண்டா எக்ஸ்- பிளேடு 160 பைக் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. விலை உள்ளிட்ட முக்கிய விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய ஹோண்டா எக்ஸ்-பிளேடு 160 பைக் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

கடந்த மாதம் கிரேட்டர் நொய்டாவில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் ஹோண்டா எக்ஸ்- பிளேடு பைக் முதல்முறையாக பொது பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது இந்த பைக்கின் விலை விபரம் வெளியிடப்பட்டு இருப்பதுடன், முன்பதிவும் துவங்கப்பட்டு இருப்பதாக ஹோண்டா நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா எக்ஸ்-பிளேடு 160 பைக் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

புதிய ஹோண்டா எக்ஸ்- பிளேடு 160 பைக்கின் முகப்பு ரோபோ போன்ற முகவெட்டுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த செக்மென்ட்டில் முதலாவது மாடலாக எல்இடி ஹெட்லைட்டுடன் வந்துள்ளது. எல்இடி டெயில் லைட்டும் இந்த பைக்கின் சிறப்பு.

புதிய ஹோண்டா எக்ஸ்-பிளேடு 160 பைக் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

ஸ்பிளிட் இருக்கை இல்லாமல் ஒரே இருக்கை அமைப்பை பெற்றிருக்கிறது. இது ஓட்டுபவருக்கும், பயணிப்பவருக்கும் சற்றே கூடுதல் வசதியை அளிக்கலாம்.

புதிய ஹோண்டா எக்ஸ்-பிளேடு 160 பைக் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. சர்வீஸ் ரிமைன்டர், கியர் பொசிஷன் இண்டிகேட்டர் வசதிகளையும் பெற முடியும்.

புதிய ஹோண்டா எக்ஸ்-பிளேடு 160 பைக் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

இந்த பைக்கின் ஹெட்லைட், பெட்ரோல் டேங்க், பின்புற வடிவமைப்பு ஆகியவை மிக கூர்மையாகவும் வசீகரமாகவும் இருக்கிறது. இரண்டு புகைப்போக்கி அமைப்புடைய மஃப்ளர் கொடுக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது

புதிய ஹோண்டா எக்ஸ்-பிளேடு 160 பைக் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் பைக்கில் பொருத்தப்பட்டு இருக்கும் அதே 162.7சிசி ஏர்கூல்டு எஞ்சின்தான் இந்த பைக்கிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அதேநேரத்தில், இந்த பைக்கின் எஞ்சின் 13.9 பிஎச்பி பவரையும், 13.9 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக மாறுதல் செய்யப்பட்டு இருக்கிறது. ஹார்னெட்டை விட சற்றே குறைவு. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.

புதிய ஹோண்டா எக்ஸ்-பிளேடு 160 பைக் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

இந்த பைக்கில் முன்சக்கரத்தில் 80/110 R17 டயரும், பின் சக்கரத்தில் 130/70 R17 டயரும் பொருத்தப்பட்டு இருக்கிறது. பின்புற டயர் அகலமாக இருப்பதன் காரணமாக, மிகச் சிறந்த தரைப்பிடிப்பை வழங்கும்.

புதிய ஹோண்டா எக்ஸ்-பிளேடு 160 பைக் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

முன்சக்கரத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் டிரம் பிரேக்கும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஹோண்டா நிறுவனத்தின் சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் அல்லது ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்றவை ஆப்ஷனலாக கூட இல்லை.

புதிய ஹோண்டா எக்ஸ்-பிளேடு 160 பைக் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

புதிய ஹோண்டா எக்ஸ்- பிளேடு பைக் மேட் மார்வெல் புளூ மெட்டாலிக்[நீலம்], பியர்ல் இக்னியஸ் பிளாக்[கருப்பு], மேட் ஃப்ராஸன் சில்வர்[சில்வர்], பியர்ல் ஸ்பார்ட்டன் ரெட்[சிவப்பு] மற்றும் மேட் மார்ஷல் க்ரீன் மெட்டாலிக்[பச்சை] ஆகிய 5 வண்ணங்களில் கிடைக்கும்.

புதிய ஹோண்டா எக்ஸ்-பிளேடு 160 பைக் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

புதிய ஹோண்டா எக்ஸ்- பிளேடு பைக் ரூ.78,500 எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ரூ.5,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். ஹோண்டா ஹார்னெட் 160ஆர் பைக்கைவிட ரூ.3,850 வரை குறைவான விலையில் வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
Honda X-Blade 160 Bike Launched In India.
Story first published: Tuesday, March 13, 2018, 13:41 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark