TRENDING ON ONEINDIA
-
ஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது?
-
கை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...
-
Nayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்
-
கொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான்? அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா?
-
வாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.!
-
Ind vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்
-
வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா
-
250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க
ஆர்ப்பரிக்கும் அம்சங்களுடன் புதிய ஹோண்டா எக்ஸ்- பிளேடு 160சிசி பைக் அறிமுகம்!
ஆர்ப்பரிக்கும் அம்சங்களுடன் ஹோண்டாவின் புதிய 160சிசி பைக் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
ஹோண்டா எக்ஸ்- பிளேடு 160 என்ற பெயரில் இந்த புதிய பைக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
தோற்றத்தில் ஹோண்டாவின் மற்றொரு 160சிசி மாடலான ஹார்னெட் 160ஆர் பைக்கை ஒத்திருந்தாலும், கூடுதல் கவர்ச்சிகர அம்சங்களுடன் இதன் தோற்றம் சுண்டி இழுக்கிறது.
புதிய ஹோண்டா எக்ஸ்- பிளேடு பைக்கில் எந்திர மனிதன் முகத்தை பிரதிபலிக்கும் விதத்திலான முழுமையான எல்இடி ஹெட்லைட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பைலட் லைட்டுகளும் உள்ளன.
பின்புறத்தில் எல்இடி டெயில் லைட்டுகள் இருக்கின்றன. முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சர்வீஸ் ரிமைன்டர் மற்றும் கியர் ஷிஃப்ட் இண்டிகேட்டர் வசதிகள் உள்ளன.
புதிய ஹோண்டா எக்ஸ்- பிளேடு பைக் இரட்டை வண்ணத்தில் காட்சியளிப்பதே கவர்ச்சிக்கு காரணம். குறிப்பாக, ஹெட்லைட், பெட்ரோல் டேங்க் ஆகியவை மிரட்டும் வகையிலான வடிவமைப்பை பெற்றிக்கின்றன. பெட்ரோல் டேங்க்கில் எக்ஸ்- பிளேடு பெயர் வசீகரத்தை கூட்டுகிறது.
பின்புறத்தில் கூர்மையான தோற்றத்தை தரும் விதத்திலான ஃபென்டர் அமைப்பும், டெயில் லைட் அமைப்பும் பைக்கின் வசீகரித்தை அதிகரிக்கிறது. இதன் சைலென்சரின் இரண்டு மஃப்ளர் அமைப்பும் குறிப்பிடத்தக்கது.
புதிய ஹோண்டா எக்ஸ்- பிளேடு பைக் 5 விதமான வண்ணங்களில் கிடைக்கும். மேட் மார்வெல் புளூ மெட்டாலிக், பியர்ல் இக்னியஸ் பிளாக், மேட் ஃப்ராஸன் சில்வர், பியர்ல் ஸ்பார்ட்டன் ரெட் மற்றும் மேட் மார்ஷல் க்ரீன் மெட்டாலிக் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.
புதிய ஹோண்டா எக்ஸ்- பிளேடு பைக் வரும் மார்ச் மாத முதல் வாரத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. தேதி விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய எக்ஸ்- பிளேடு தவிர்த்து, ஆக்டிவா 5ஜி, லிவோ, சிபி ஷைன், சிபி ஷைன் எஸ்பி, சிபி ஹார்னெட் 160ஆர் மற்றும் சிபிஆர்250ஆர் ஆகிய மாடல்களும் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டன. தவிரவும், சிபிஆர் 650எஃப், ஆப்ரிக்கா ட்வின், சிபிஆர் 1000ஆர்ஆர் மற்றும் கோல்டுவிங் போன்ற உயர்வகை மாடல்களும் பார்வைக்கு வந்துள்ளன.
டிரென்டிங் ஆட்டோ எக்ஸ்போ செய்திகள்:
அட்டகாசமாக மாறிய புதிய ஹோண்டா அமேஸ் கார் அறிமுகம்!