ஹயோசங் ஜிடி250ஆர் பைக்கின் ஏபிஎஸ் மாடல் அறிமுகம்: விபரம்!

Written By:

ஹயோசங் நிறுவனத்தின் பிரபலமான மாடல் ஹயோசங் ஜிடி250ஆர் ஸ்போர்ட்ஸ் பைக். ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் பிரிமியம் மாடல்களில் ஒன்றாக போட்டி போடுகிறது.

 ஹயோசங் ஜிடி250ஆர் பைக்கின் ஏபிஎஸ் மாடல் அறிமுகம்!

இந்த நிலையில், விரைவில் பைக்குகளுக்கான பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்துவதற்கான சட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கு ஏற்றவாறும், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அம்சத்தை வழங்கும் விதத்திலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

 ஹயோசங் ஜிடி250ஆர் பைக்கின் ஏபிஎஸ் மாடல் அறிமுகம்!

சமூக வலைதள பக்கங்கள் வழியாக ஹயோசங் ஜிடி250ஆர் பைக்கின் ஏபிஎஸ் மாடல் விற்பனைக்கு வந்துள்ளது குறித்த தகவலை டிஎஸ்கே ஹயோசங் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

Recommended Video - Watch Now!
Ducati 959 Panigale Crashes Into Buffalo - DriveSpark
 ஹயோசங் ஜிடி250ஆர் பைக்கின் ஏபிஎஸ் மாடல் அறிமுகம்!

ஹயோசங் ஜிடி250ஆர் பைக்கில் வி- ட்வின் சிலிண்டர் அமைப்புடைய 249சிசி ஆயில்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 28 பிஎச்பி பவரையும், 22 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

 ஹயோசங் ஜிடி250ஆர் பைக்கின் ஏபிஎஸ் மாடல் அறிமுகம்!

ஹயோசங் ஜிடி250ஆர் பைக்கில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷன் முன்புறத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஹைட்ராலிக் மோனோ ஷாக் அப்சார்பர் பின்புறத்தில் இருக்கிறது.

 ஹயோசங் ஜிடி250ஆர் பைக்கின் ஏபிஎஸ் மாடல் அறிமுகம்!

இந்த பைக்கில் முன்புறத்தில் இரண்டு டிஸ்க்குகள் கொண்ட பிரேக் சிஸ்டமும், பின்புறத்தில் ஒரு டிஸ்க் கொண்ட பிரேக் சிஸ்டமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

 ஹயோசங் ஜிடி250ஆர் பைக்கின் ஏபிஎஸ் மாடல் அறிமுகம்!

இந்த பைக்கில் 17 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டு இருக்கிறது. டைட்டானியம் பேக், டைட்டானியம் ரெட் மற்றும் டைட்டானியம் ஒயிட் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.

 ஹயோசங் ஜிடி250ஆர் பைக்கின் ஏபிஎஸ் மாடல் அறிமுகம்!

ஹயோசங் ஜிடி250ஆர் பைக்கின் ஏபிஎஸ் அல்லாத மாடல் ரூ.3 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஏபிஎஸ் மாடல் ரூ.20,000 கூடுதல் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்... #ஹயோசங் #hyosung
English summary
Hyosung GT250R Gets ABS system in India.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark