ஆர்ப்பரிக்கும் ஸ்டைலில் இரண்டு புதிய இந்தியன் பைக்குகள் அறிமுகம்

அமெரிக்காவை சேர்ந்த இந்தியன் நிறுவனம் இதுவரை க்ரூஸர் ரக மாடல் தயாரிப்பில் புகழ்பெற்றது. இந்த நிலையில், தனது FTR 1200 S மற்றும் FTR 1200 S Race Replica என்ற ஸ்ட்ரீட் ஃபைட்டர் ரகத்திலான இரண்டு புதிய மா

ஆர்ப்பரிக்கும் டிசைனில் இரண்டு புதிய பைக் மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம். விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

ஆர்ப்பரிக்கும் ஸ்டைலில் இரண்டு புதிய இந்தியன் பைக்குகள் அறிமுகம்

அமெரிக்காவை சேர்ந்த இந்தியன் நிறுவனம் இதுவரை க்ரூஸர் ரக மாடல் தயாரிப்பில் புகழ்பெற்றது. இந்த நிலையில், தனது FTR 1200 S மற்றும் FTR 1200 S Race Replica என்ற ஸ்ட்ரீட் ஃபைட்டர் ரகத்திலான இரண்டு புதிய மாடல்களையும் முதல்முறையாக கொண்டு வந்துள்ளது.

ஆர்ப்பரிக்கும் ஸ்டைலில் இரண்டு புதிய இந்தியன் பைக்குகள் அறிமுகம்

2016ம் ஆண்டு அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்ட ஃப்ளாட் டிராக் ரேஸ் பைக்குகளின் டிசைன் தாத்பரியத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட FTR 750 ஸ்கவுட் ரே்ஸ என்ற பைக்கின் டிசைன் தாத்பரியங்களுடன், இந்தியன் நிறுவனத்தின் FTR 1200 எஸ் மற்றும் FTR 1200 எஸ் ரேஸ் ரெப்லிக்கா ஆகிய இரண்டு மாடல்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஆர்ப்பரிக்கும் ஸ்டைலில் இரண்டு புதிய இந்தியன் பைக்குகள் அறிமுகம்

இந்தியன் எஃப்டிஆர் 1200 எஸ் பைக்கில் கருப்பு வண்ண ஃப்ரேமும், ரேஸ் ரெப்லிக்கா மாடலில் சிவப்பு வண்ண ட்ரெல்லிஸ் ஃப்ரேமும் பயன்படுத்தப்பட்டு இருப்பதுதான் இரு மாடல்களுக்கு இடையிலான முக்கிய வித்தியாசம்.

ஆர்ப்பரிக்கும் ஸ்டைலில் இரண்டு புதிய இந்தியன் பைக்குகள் அறிமுகம்

இந்த பைக்குகளில் 1,203சிசி வி- ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 120 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியுடன் கூடிய 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

ஆர்ப்பரிக்கும் ஸ்டைலில் இரண்டு புதிய இந்தியன் பைக்குகள் அறிமுகம்

இரண்டு பைக்குகளிலுமே 4.3 அங்குல எல்சிடி தொடுதிரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டுள்ளது. புளூடூத் மூலமான இணைப்பு மற்றும் யுஎஸ்பி குயிக் சார்ஜர் வசதியும் உள்ளன.

ஆர்ப்பரிக்கும் ஸ்டைலில் இரண்டு புதிய இந்தியன் பைக்குகள் அறிமுகம்

இந்த பைக்குகளில் வண்டியின் நகர்வு மற்றும் இயக்கத்தை துல்லியமாக கண்காணித்து கட்டுப்படுத்தும் ஐஎம்யூ சாதனம், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், பாஷ் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் சிஸ்டம், டிரைவிங் மோடுகள், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை பெற்றிருக்கிறது.

ஆர்ப்பரிக்கும் ஸ்டைலில் இரண்டு புதிய இந்தியன் பைக்குகள் அறிமுகம்

இந்தியன் FTR 1200 பைக்குகளில் முன்புறத்தில் 120/70 R19 அளவிலும், பின்புறத்தில் 150/80 R18 அளவுடைய டன்லப் DT3-R ரேடியல் டயர்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக்குகளில் முன்புறத்தில் 43 மிமீ இன்வர்டெட் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் பிக்கிபேக் ஐஎஃப்பி சஸ்பென்ஷனும் பொருத்தப்பட்டுள்ளன.

ஆர்ப்பரிக்கும் ஸ்டைலில் இரண்டு புதிய இந்தியன் பைக்குகள் அறிமுகம்

இரண்டு மாடல்களின் முன்சக்கரத்தில் 320 மிமீ டியூவல் டிஸ்க் பிரேக்குகளும், பின்புறத்தில் 265 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தை அணைத்து வைக்கும் வசதியும் உண்டு.

ஆர்ப்பரிக்கும் ஸ்டைலில் இரண்டு புதிய இந்தியன் பைக்குகள் அறிமுகம்

புதிய இந்தியன் FTR 1200 S பைக் ரூ.14.99 லட்சத்திலும், FTR 1200 S Race Replica பைக் ரூ.15.49 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும். ரூ.2 லட்சம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். அடுத்த ஆண்டு ஏப்ரலில் டெலிவிரி கொடுக்கப்படும். இந்த இரண்டு புதிய பைக் மாடல்களும் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட இருக்கின்றன.

Most Read Articles
English summary
Indian Motorcycles has launched their FTR 1200 S and FTR 1200 S Race Replica in India. Both motorcycles come with a price tag of Rs 14.99 lakh and Rs 15.49 lakh, respectively. Bookings for the new FTR 1200 has begun in India for an amount of Rs 2 lakh, with deliveries scheduled to begin from April 2019.
Story first published: Tuesday, December 11, 2018, 12:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X