இந்தியன் ஸ்கவுட் பாபர் ஜேக் டேனியல் சிறப்பு எடிசன் பைக் அறிமுகம்..!! வாகன ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

Written By:

அமெரிக்காவின் முதல் மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான இந்தியன் மோட்டார்சைக்கிள், பானகம் தயாரிப்பு நிறுவனமான ஜேக் டேனியல்ஸ் உடன்  இணைந்து கிளாக் வெர்க்ஸ் கஸ்டம் சைக்கிள்ஸ் உடன் கூட்டணி அமைத்து புதிய ஸ்கவுட் பாபர் பைக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியன் மோட்டார்சைக்கிளின் புதிய சிறப்பு எடிசன் அறிமுகம்

குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் வெளிவரும் இந்த பைக், ஜேக் டேனியல்ஸின் தீயடைப்பு படை வாகனத்தின் தாக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியன் மோட்டார்சைக்கிளின் புதிய சிறப்பு எடிசன் அறிமுகம்

தீயனைப்பு வாகனத்தில் இடம்பெற்றிருக்கும் தங்கம் மற்றும் கருப்பு நிற வண்ணங்கள் அப்படியே இந்த பைக்கின் தோற்றத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்தியன் மோட்டார்சைக்கிளின் புதிய சிறப்பு எடிசன் அறிமுகம்

உலகிலேயே பானகம் தயாரிக்கும் நிறுவனங்களில் ஜேக் டேனியல்ஸிடம் மட்டும் தான் தீயனைப்பு வாகனம் உள்ளது. இது முழுவதும் தன்னார்வலர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

இந்தியன் மோட்டார்சைக்கிளின் புதிய சிறப்பு எடிசன் அறிமுகம்

தீ விபத்து போன்ற அவசர காலங்களில் பணியாற்றும் தொழிலார்களின் உழைப்பிற்கு மரியாதை செய்யும் வகையில்

இந்தியன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் ஸ்கவுட் பாபர் ஜேக் டேனியல் எடிசன் பைக்கை தயாரித்துள்ளது.

இந்தியன் மோட்டார்சைக்கிளின் புதிய சிறப்பு எடிசன் அறிமுகம்

இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் சர்வதேச சந்தைக்காக மொத்தம் 177 ஸ்கவுட் பாபர் ஜேக் டேனியல் எடிசன் பைக்குகளை மட்டுமே தயாரிக்கவுள்ளது.

அதில் ஒவ்வொரு பைக்கும் வேறு வேறு எண்களிலும் மற்றும் ஜேக் டேனியல் தீயனைப்பு வாகனங்களின் தீம்களிலும் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் மோட்டார்சைக்கிளின் புதிய சிறப்பு எடிசன் அறிமுகம்

இந்த குறிப்பிட்ட எண்ணிக்கையில் தயாராகும் புதிய பைக் மேட் பிளாக் நிறப்பூச்சில், 24 கேரட் தங்க நிற கிராஃபிக்ஸ் வேலைபாடுகளை டேங் மற்றும் ஃபென்டர்களில் தாங்கி வெளிவருகிறது.

இந்தியன் மோட்டார்சைக்கிளின் புதிய சிறப்பு எடிசன் அறிமுகம்

தீயமைப்பு வாகனம் என்று குறிப்பிடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள இலச்சனையில் தங்க நிற பூச்சுகள் படர்ந்திருக்கும். மேலும் ’Bottles and Throttles Don't Mix’ என்ற குறிப்பிடப்படும் லோகோ முன்பக்க ஃபென்டரில் அமைந்திருக்கும்.

இந்தியன் மோட்டார்சைக்கிளின் புதிய சிறப்பு எடிசன் அறிமுகம்

இதுதவிர ஜேக் டேனியல்ஸ் பூத்தையல் பெற்ற இருக்கை அமைப்பு, கஸ்டம் கொண்ட பிடிமானம், பெக்ஸ் மற்றும் ஸ்விஃப்ட் லெவர்கள் போன்றவை இதில் வழங்கப்படவுள்ளன.

இந்தியன் மோட்டார்சைக்கிளின் புதிய சிறப்பு எடிசன் அறிமுகம்

கூடுதலாக ஸ்வுட் பாபர் ஜேக் டேனியல் எடிசனில் கத்திரிக்கப்பட்ட ஃபென்டர்கள், பார்-என்ட் மிரர், வெண்ட் எக்ஸாஸ்ட் ஷீல்டு, கினாபி டயர்கள் மற்றும் திருத்தமான முகப்பு விளக்கு கேஷிங்.

இந்தியன் மோட்டார்சைக்கிளின் புதிய சிறப்பு எடிசன் அறிமுகம்

மார்ச் 13, 2018 முதல் இந்தியன் மோட்டார் சைக்கிள் டீலர்ஷிப் வழியாக இந்த சிறப்பு எடிசனுக்கான முன்பதிவு பெறப்படுகிறது.

தற்போது அமெரிக்கா மற்றும் கேனடா பகுதிகளுக்கு மட்டும் இந்திய மதிப்பில் ரூ. 11 லட்சம் என இந்த பைக்கிற்கான விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் மோட்டார்சைக்கிளின் புதிய சிறப்பு எடிசன் அறிமுகம்

ஆனால் இந்தியாவில் இந்த பைக் வெளிவருமா என்பது இன்னும் தெரியவில்லை. அதை இதுவரை இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனமும் உறுதிப்படுத்தவில்லை.

2016ம் ஆண்டு வெளியான இந்தியன் ஸ்பிரிங்ஃபீல்டு ஜேக் டேனியல் எடிசன் பைக், வெளியான 8 மணி நேரங்களில் அதற்கான முன்பதிவுகள் மொத்தமாக தீர்ந்தன.

இந்தியன் மோட்டார்சைக்கிளின் புதிய சிறப்பு எடிசன் அறிமுகம்

அதேபோல 2010ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்தியன் சீஃப்டெயின் ஜேக் டேனியல் எடிசன் பைக்குகளின் முன்பதிவு 10 நிமிடங்கள் முடிந்துவிட்டன.

இந்தியன் மோட்டார்சைக்கிளின் புதிய சிறப்பு எடிசன் அறிமுகம்

இந்த டிரெண்டை பார்க்கும் போது, இந்தியன் மோட்டார் சைக்கிளின் புதிய ஸ்கவுட் பாபர் ஜேக் டேனியல் எடிசனுன் பைக்கிற்கும் உலகளவில் பல வாகன ஆர்வலர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

English summary
Read in Tamil: Indian Scout Bobber Jack Daniel's Limited Edition Unveiled: Specs, Features, Images. Click for Details...
Story first published: Friday, March 9, 2018, 15:23 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark