இந்தியாவின் முதல் ஹைபிரிட் ஸ்கூட்டர் லாஞ்ச் எப்போது? அரசின் மானியம் கிடைக்குமா?

இந்தியாவின் முதல் ஹைபிரிட் ஸ்கூட்டரான டிவிஎஸ் ஐக்யூப் விரைவில் லான்ச் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் உள்ள வசதிகள், மானியம் கிடைக்குமா? என்பது போன்ற தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

By Arun

இந்தியாவின் முதல் ஹைபிரிட் ஸ்கூட்டரான டிவிஎஸ் ஐக்யூப் விரைவில் லான்ச் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் உள்ள வசதிகள், மானியம் கிடைக்குமா? என்பது போன்ற தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

இந்தியாவின் முதல் ஹைபிரிட் ஸ்கூட்டர் லான்ச் ஆவது எப்போது? மத்திய அரசின் மானியம் கிடைக்குமா?

இந்தியாவின் முன்னணி டூவீலர் தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ், கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில், ஹைபிரிட் ஸ்கூட்டர் ஒன்றை காட்சிக்கு வைத்திருந்தது. இந்த ஹைபிரிட் ஸ்கூட்டரை விரைவில் லான்ச் செய்ய, டிவிஎஸ் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் முதல் ஹைபிரிட் ஸ்கூட்டர் லான்ச் ஆவது எப்போது? மத்திய அரசின் மானியம் கிடைக்குமா?

டிவிஎஸ் நிறுவனம், இந்த ஹைபிரிட் ஸ்கூட்டருக்கு ஐக்யூப் என பெயரிட்டுள்ளது. இந்தியாவின் முதல் ஹைபிரிட் ஸ்கூட்டர் என்ற பெருமையை ஐக்யூப் பெறுகிறது. லான்ச் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிவிஎஸ் இன்னும் வெளியிடவில்லை. எனினும் இந்தாண்டு இறுதிக்குள் ஐக்யூப் ஹைபிரிட் ஸ்கூட்டர் லான்ச் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் முதல் ஹைபிரிட் ஸ்கூட்டர் லான்ச் ஆவது எப்போது? மத்திய அரசின் மானியம் கிடைக்குமா?

ஐக்யூப் ஹைபிரிட் ஸ்கூட்டரில், 110 சிசி பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். 2 வீல் டிரைவ் கொண்ட ஸ்கூட்டராக தயாரிக்கப்படும் ஐக்யூப்பின் முன்பக்க சக்கரத்தில் மோட்டார் ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். எனவே பின்பக்க சக்கரத்திற்கு இன்ஜினும், முன்பக்க சக்கரத்திற்கு மோட்டாரும் பவர் அளித்து, ஸ்கூட்டரை இயக்கும்.

இந்தியாவின் முதல் ஹைபிரிட் ஸ்கூட்டர் லான்ச் ஆவது எப்போது? மத்திய அரசின் மானியம் கிடைக்குமா?

போக்குவரத்து நெரிசல் மிகுந்த, ஊர்ந்து செல்லக்கூடிய இடங்களில் எல்லாம், முன்பக்க மோட்டார் மூலமாக மட்டுமே, ஸ்கூட்டர் இயங்கும். அதாவது மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்திற்கு உட்பட்டு பயணிக்கும் சமயங்களில் எல்லாம், ஸ்கூட்டரை இயக்கும் பொறுப்பை மோட்டார் எடுத்து கொள்ளும். அந்த நேரத்தில் எரிபொருள் தேவைப்படாது.

இந்தியாவின் முதல் ஹைபிரிட் ஸ்கூட்டர் லான்ச் ஆவது எப்போது? மத்திய அரசின் மானியம் கிடைக்குமா?

மோட்டாரின் இத்தகைய செயல்பாடுகளால், தேவையில்லாமல் பெட்ரோல் வீணாவது தடுக்கப்படும். அதேபோல் சிக்னலுக்காக காத்திருக்கும் நேரங்களிலும், ஐடிலிங்கில் இருக்கும் சமயங்களிலும், மோட்டார் மட்டுமே இயங்கும். இந்த செயல்களுக்காக அதிகப்படியான பவரையும் பேட்டரியில் இருந்து, மோட்டார் எடுத்துக்கொள்ளாது.

இந்தியாவின் முதல் ஹைபிரிட் ஸ்கூட்டர் லான்ச் ஆவது எப்போது? மத்திய அரசின் மானியம் கிடைக்குமா?

150 Wh, 500 Wh என 2 பேட்டரி ஆப்ஷன்களுடன், ஐக்யூப் ஹைபிரிட் ஸ்கூட்டர் லான்ச் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2010ம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில், எந்த டிசைனுடன் இந்த உலகுக்கு ஐக்யூப் காட்டப்பட்டதோ, அதே டிசைனுடன்தான் லான்ச் ஆகும் என தெரிகிறது.

இந்தியாவின் முதல் ஹைபிரிட் ஸ்கூட்டர் லான்ச் ஆவது எப்போது? மத்திய அரசின் மானியம் கிடைக்குமா?

எனினும் தற்போது உள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு கலர் மற்றும் கிராபிக்ஸ் ஆகியவற்றில் டிவிஎஸ் நிறுவனம் சில மாற்றங்களை செய்தாலும் செய்யும். பொதுமக்கள் மத்தியில் இந்த ஸ்கூட்டர் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் முதல் ஹைபிரிட் ஸ்கூட்டர் லான்ச் ஆவது எப்போது? மத்திய அரசின் மானியம் கிடைக்குமா?

இதனிடையே சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத ஹைபிரிட் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களை பிரபலப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஹைபிரிட் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு குறிப்பிட்ட அளவு தொகையை, மத்திய அரசு மானியமாக வழங்கி வருகிறது.

இந்தியாவின் முதல் ஹைபிரிட் ஸ்கூட்டர் லான்ச் ஆவது எப்போது? மத்திய அரசின் மானியம் கிடைக்குமா?

இதற்காக FAME-இந்தியா என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. கடந்த 2015ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மானிய அமைப்பு முறை பல முறை நீட்டிக்கப்பட்டு கொண்டே வந்துள்ளது.

இந்தியாவின் முதல் ஹைபிரிட் ஸ்கூட்டர் லான்ச் ஆவது எப்போது? மத்திய அரசின் மானியம் கிடைக்குமா?

ஆனால் தற்போது உள்ள மானிய அமைப்பு முறை, வரும் செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைகிறது.

எனவே தற்போதுள்ள மானிய அமைப்பின் பலனை பெற வேண்டுமானால், டிவிஎஸ் நிறுவனம் மிக விரைவாக ஐக்யூப் ஹைபிரிட் ஸ்கூட்டரை லான்ச் செய்ய வேண்டியுள்ளது.

இந்தியாவின் முதல் ஹைபிரிட் ஸ்கூட்டர் லான்ச் ஆவது எப்போது? மத்திய அரசின் மானியம் கிடைக்குமா?

அதே நேரத்தில், புதிய அப்டேட் செய்யப்பட்ட FAME-இந்தியா திட்டத்தை செயல்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. தற்போதுள்ள மானிய அமைப்பு முறையை காட்டிலும், அப்டேட் செய்யப்பட்ட FAME-இந்தியா திட்டத்தினால் மேலும் பல பலன்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
India’s first hybrid scooter, TVS iQube to be launched soon. read in tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X