புதிய கவாஸாகி சூப்பர் பைக்குகளுக்கு ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி!

Written By:

கவாஸாகி சூப்பர் பைக்குகளுக்கு ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கும் அரிய வாய்ப்பு இருக்கிறது. குறிப்பிட்ட பைக் மாடல்களுக்கு இந்த தள்ளுபடி சலுகையை கவாஸாகி டீலர்களில் வழங்கப்படுகிறது.

புதிய கவாஸாகி சூப்பர் பைக்குகளுக்கு ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி!

இறக்குமதி செய்யப்படும் இரு சக்கர வாகனங்களுக்கான வரி 25 சதவீதம் குறைக்கப்பட்டது. இதனால் கிடைக்கும் சேமிப்பை வாடிக்கையாளர்களுக்கு முன்னணி பைக் தயாரிப்பு நிறுவனங்கள் வழங்குவதாக அறிவித்து வருகின்றன.

புதிய கவாஸாகி சூப்பர் பைக்குகளுக்கு ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி!

இந்த வரிசையில் தற்போது கவாஸாகி நிறுவனமும் இணைந்துள்ளது. கவாஸாகி நின்ஜா 300, நின்ஜா 650, இசட்1000 மற்றும் நின்ஜா இசட்எக்ஸ்-10ஆர் ஆகிய பைக் மாடல்களுக்கு ரூ.41,000 முதல் ரூ.4 லட்சம் வரையிலான தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய கவாஸாகி சூப்பர் பைக்குகளுக்கு ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி!

கவாஸாகி நின்ஜா 300 பைக்கிற்கு ரூ.41,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அத்துடன், ரூ.25,000 மதிப்புடைய ரைடிங் ஜாக்கெட் என்ற பாதுகாப்பு உடுப்பையும் வாடிக்கையாளர் பெற முடியும். கவாஸாகி நின்ஜா 300 பைக் ரூ.3.19 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

புதிய கவாஸாகி சூப்பர் பைக்குகளுக்கு ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி!

அடுத்து நின்ஜா 650 பைக்கிற்கு ரூ.11,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. அடுத்து கவாஸாகி இசட்1000 மற்றும் இசட்1000ஆர் சூப்பர் பைக்குகளுக்கு ரூ.3 லட்சம் வரை தள்ளுபடி பெற முடியும்.

புதிய கவாஸாகி சூப்பர் பைக்குகளுக்கு ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி!

அதிகபட்சமாக கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ்-10ஆர் மற்றும் இசட்எக்ஸ்-10ஆர்ஆர் ஆகிய இரு மாடல்களுக்கும் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

புதிய கவாஸாகி சூப்பர் பைக்குகளுக்கு ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி!

இந்த சேமிப்புச் சலுகைகளை தவிர்த்து, நின்ஜா 300 பைக்கை வாங்கும் 5 அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்கள் கத்தாரில் நடைபெறும் வேர்ல்டு சூப்பர் பைக் சாம்பியன்ஷிப் போட்டிகளை காணும் வாய்ப்பையும் பெற முடியும்.

புதிய கவாஸாகி சூப்பர் பைக்குகளுக்கு ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி!

எனினும், இந்த தள்ளுபடி டீலர் மட்டத்தில் வழங்கப்படுவதால், தள்ளுபடியும் அளவு மாறுபடும். எனவே, அருகில் உள்ள கவாஸாகி டீலரை தொடர்பு கொண்டு தள்ளுபடி குறித்து தெரிந்து கொண்டு செல்வது நல்லது.

மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Kawasaki India Offering Discounts Of Up To ₹ 4 Lakh
Story first published: Wednesday, April 11, 2018, 16:15 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark