புதிய கவாஸாகி நின்ஜா 400 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

Written By:

புதிய கவாஸாகி நின்ஜா 400 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பைக் குறித்த பல முக்கியத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

 புதிய கவாஸாகி நின்ஜா 400 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

கடந்த ஆண்டு டோக்கியோ மோட்டார் கண்காட்சியில் மேம்படுத்தப்பட்ட புதிய கவாஸாகி நின்ஜா 400 பைக் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், அடுத்த சில மாதங்களிலேயே இந்த புதிய மாடலை இந்திய மண்ணில் களமிறக்கி இருக்கிறது கவாஸாகி நிறுவனம்.

புதிய கவாஸாகி நின்ஜா 400 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய கவாஸாகி நின்ஜா 400 பைக்கில் 399சிசி பேரலல் ட்வின் லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 48.3 பிஎச்பி பவரையும், 38 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் ஸ்லிப்பர் க்ளட்ச் வதியும் உள்ளது.

புதிய கவாஸாகி நின்ஜா 400 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய கவாஸாகி நின்ஜா 400 பைக் ஸ்டீல் ட்ரெல்லிஸ் ஃப்ரேமில் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக் 168 கிலோ எடை கொண்டது. நின்ஜா 300 பைக்கைவிட இந்த புதிய மாடடல் 6 கிலோ எடை குறைவானது.

புதிய கவாஸாகி நின்ஜா 400 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய கவாஸாகி நின்ஜா 400 பைக்கின் முன்புற ஹெட்லைட் ஹவுசிங், ஃபேரிங் பேனல்கள் மற்றும் பெட்ரோல் டேங்க் உள்ளிட்டவற்றின் வடிவமைப்பு மிக முரட்டுத்தனமான தோற்றத்தை தருகிறது. இந்த புதிய பைக்கில் புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது.

புதிய கவாஸாகி நின்ஜா 400 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பைக்கில் ட்யூவல் எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் டெயில் லைட்டுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த பைக் பிரத்யேகமான பச்சை மற்றும் கருப்பு வண்ணக் கலவையில் கிடைக்கும்.

புதிய கவாஸாகி நின்ஜா 400 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய கவாஸாகி நின்ஜா 400 பைக்கிற்கு பின்புற இருக்கைக்கான கவுல் அமை்பபு, ஹெல்மெட் லாக் ரேடியேட்டர் ஸ்க்ரீன், டேங்க் பேக் மற்றும் டேக் பேட் ஆகியவை கூடுதல் ஆக்சஸெரீகளாக வழங்கப்படுகின்றன.

புதிய கவாஸாகி நின்ஜா 400 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய கவாஸாகி நின்ஜா 400 பைக் ரூ.4.69 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும். புதிய கவாஸாகி நின்ஜா 400 பைக் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் நின்ஜா 300 பைக்கிற்கு மாற்றாக வரும் என்று கருதப்பட்டது. ஆனால், நின்ஜா 300 பைக்கும் தொடர்ந்து இந்தியாவில் விற்பனை செய்யப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது.

மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Kawasaki Ninja 400 Launched In India. Kawasaki has launched the new fully-faired Ninja 400 in the country with a price tag of Rs 4.69 lakh ex-showroom (Delhi). The Kawasaki Ninja 400 was first showcased at the 2017 EICMA motorcycle show in Italy.
Story first published: Tuesday, April 3, 2018, 12:40 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark