ரூ. 5.33 லட்சம் விலையில் புதிய நீல நிற தோற்றத்தில் கவாஸாகி நின்ஜா 650 பைக் விற்பனைக்கு அறிமுகம்..!!

By Azhagar
Recommended Video - Watch Now!
Indian Army Soldiers Injured In Helicopter Fall - DriveSpark

புதிய நீல நிறத்திலான தோற்ற கொண்ட கவாஸாகி நின்ஜா 650 பைக்கை ரூ. 5.33 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.

புதிய நிறத்தில் புதிய தோற்றத்தில் வெளியான கவாஸாகி நின்ஜா 650

முன்னதாக இதே மாடலில் கருப்பு நிறத்தில் விற்பனையில் இருந்த பைக்கை கவாஸாகி நிறுத்தியுள்ளது. இந்த புதிய நிறத்திலான கவாஸாகி நின்ஜா 650 பைக்கிற்கான புக்கிங் தற்போது தொடங்கியுள்ளது.

புதிய நிறத்தில் புதிய தோற்றத்தில் வெளியான கவாஸாகி நின்ஜா 650

குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இந்த பைக் விற்பனைக்கு வருகிறது. தோற்றப்பொலிவை தவிர கவாஸாகி நின்ஜா 650 பைக்கின் செயல்திறனில் எந்த மாறுபாடும் இல்லை.

புதிய நிறத்தில் புதிய தோற்றத்தில் வெளியான கவாஸாகி நின்ஜா 650

649சிசி பேரலல்-ட்வின் எஞ்சின் பெற்ற கவாஸாகியின் இந்த பீரிமியம் தர மோட்டார் சைக்கிள் அதிகப்பட்சமாக 67.2 பிஎச்பி பவர் மற்றும் 65.72 என்.எம் டார்க் திறனை வழங்கும். இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

புதிய நிறத்தில் புதிய தோற்றத்தில் வெளியான கவாஸாகி நின்ஜா 650

790மிமீ உயரம், 140 மிமீ கிரவுன்டு கிளயரன்ஸை பெற்றுள்ள கவாஸாகி நின்ஜா 650 பைக்கின் எடை 196 கிலோ மற்றும் வீல்பேஸ் 1410 மிமீ. தவிர பல்வேறு டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் மின்சார பயன்பாடு இந்த பைக்கில் உள்ளது.

Trending On Drivespark Tamil:

பிரதமர் மோடிக்காக புதிய ஜம்போ விமானங்களை டெலிவிரி எடுக்க செல்லும் அமைச்சரவை பட்டாளம்!

பின்புற டிஸ்க் பிரேக்குடன் யமஹா எஃப்.இசட்- எஸ் எஃப் 1 பைக் அறிமுகம்..!!

புதிய நிறத்தில் புதிய தோற்றத்தில் வெளியான கவாஸாகி நின்ஜா 650

பைக்கின் முன் சக்கரத்தில் 300 மிமீ பெடஸ் டிஸ்க் பிரேக் உள்ளது அதேபோல பின்புறத்தில் 220 மிமீ டிஸ்க் பிரேக் உள்ளது. இவை இரண்டிலும் ஏபிஎஸ் தொழில்நுட்பம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

புதிய நிறத்தில் புதிய தோற்றத்தில் வெளியான கவாஸாகி நின்ஜா 650

முன்பக்கம் 41 மிமீ டெலஸ்கோபிக் ஃபிரென்ட் ஃபோர்க்ஸ் மற்றும் கிடைமட்டளவிலான பிளா-லிங்க் ஆகியவை கவாஸாகி நின்ஜா 650 பைக்கிற்கான சஸ்பென்ஷன் தேவைகளை பூர்த்தி செய்கின்றன.

புதிய நிறத்தில் புதிய தோற்றத்தில் வெளியான கவாஸாகி நின்ஜா 650

கவாஸாகி நின்ஜா 650 பைக் நீல நிறத்தை தவிர கடந்த 2017ல் ஏபிஎஸ் கே.ஆர்.டி எடிசனில் வெளியிடப்பட்டது. அதற்கு ரூ. 5.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய நிறத்தில் புதிய தோற்றத்தில் வெளியான கவாஸாகி நின்ஜா 650

கவாஸாகி ரேஸிங் குழுவின் பைக் தயாரிப்புகளை பின்பற்றி, அதன் தாக்கத்தில் நின்ஜா 650 ஏபிஎஸ் கே.ஆர்.டி எடிசன் தயாரிக்கப்பட்டு இருப்பது குறிப்பிட்டத்தக்கது.

புதிய நிறத்தில் புதிய தோற்றத்தில் வெளியான கவாஸாகி நின்ஜா 650

இதன் அறிமுக விழாவில் கவாஸாகி இந்தியாவின் செயல் இயக்குநரான யுட்கா யமஷித்தா பேசும் போது, நின்ஜா 650 பைக் இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு அடைந்து வருகிறது.

அதை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள, கவாஸாகி பல்வேறு முயற்சிகளையும் மற்றும் வடிவமைப்பு முறைகளையும் மாற்றி வருவதாக யுட்கா தெரிவித்தார்.

புதிய நிறத்தில் புதிய தோற்றத்தில் வெளியான கவாஸாகி நின்ஜா 650

2018ம் ஆண்டில் கவாஸாகியின் முதல் வெளியீடு நில நிறத்திலான நின்ஜா 650 பைக். இந்த நிறம் பைக்கின் தோற்றத்திற்கு வலிமையான அதே சமயத்தில் ஸ்போர்ட் தரத்தை உயர்த்தி பிடிக்கிறது.

புதிய நிறத்தில் புதிய தோற்றத்தில் வெளியான கவாஸாகி நின்ஜா 650

இந்தியாவில் ஹோண்டா சிபிஆர் 650 எஃப் மற்றும் பென்னலி டிஎன்டி 600ஐ பைக்குகளுக்கு போட்டியாக வலம் வரும் நின்ஜா 650, தொடர்ந்து பைக் ஆர்வலர்கள் கொண்டாடும் மாடலாக உள்ளது.

புதிய நிறத்தில் புதிய தோற்றத்தில் வெளியான கவாஸாகி நின்ஜா 650

பஜாஜ் ஆட்டோ உடனான தனது ஒப்பந்தத்தை முடிக்கொண்ட பின் கவாஸாகி தற்போது இந்தியாவில் டீலர்ஷிப்பை அதிகரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.

புதிய நிறத்தில் புதிய தோற்றத்தில் வெளியான கவாஸாகி நின்ஜா 650

தொடர்ந்து இந்தாண்டில் நடக்கவிருக்கும் 2018 ஆட்டோ எக்ஸ்போவிற்கான நின்ஜா 400, இசட்.எக்ஸ்- 10 ஆர் எஸ்.இ போன்ற மாடல்களை அடுத்தடுத்து களமிறக்குகிறது கவாஸாகி.

Trending On Drivespark Tamil:

இந்தியாவில் முதல்முறையாக விபத்தில் சிக்கிய அப்ரிலியா எஸ்.ஆர் 150 ஸ்கூட்டருக்கு ஏற்பட்ட கதி இதுதான்..

இந்தியாவின் விமானப் போக்குவரத்து பற்றி சுவாரஸ்யங்கள்!

Trending DriveSpark YouTube Videos

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

Tamil
மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Read in Tamil: Kawasaki Ninja 650 Blue Colour Launched In India; Priced At Rs 5.33 Lakh. Click for Details...
Story first published: Saturday, January 13, 2018, 13:19 [IST]
இந்தியாவின் மாபெரும் அரசியல் கருத்துக் கணிப்பு.. நீங்கள் பங்கேற்றீர்களா?
 
X

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more