புதிய கவாஸாகி நின்ஜா எச்2 எஸ்எக்ஸ் சூப்பர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

Written By:

கவாஸாகி நின்ஜா எச்2 எஸ்எக்ஸ் மற்றும் எச்2 எஸ்இ சூப்பர் பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த இரண்டு மாடல்களின் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

 புதிய கவாஸாகி நின்ஜா எச்2 சூப்பர் பைக்கின் புதிய மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்!

உலகின் அதிசக்திவாய்ந்த சூப்பர் பைக் மாடல்களில் ஒன்று கவாஸாகி நின்ஜா எச்2. இந்த பைக் ஏற்கனவே இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிட்டது. இந்த நிலையில், நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற சிறப்பம்சங்கள் கொண்ட நின்ஜா எச்2 பைக்கின் விசேஷ மாடல் ஆட்டோ எக்ஸ்போ மூலமாக இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

 புதிய கவாஸாகி நின்ஜா எச்2 சூப்பர் பைக்கின் புதிய மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்!

கவாஸாகி நின்ஜா எச்2 எஸ்எக்ஸ் மற்றும் நின்ஜா எச்2 எஸ்எக்ஸ் எஸ்இ என்ற இரண்டுவிதமான மாடல்களில் இந்த விசேஷ சூப்பர் பைக் விற்பனைக்கு வந்துள்ளது.

 புதிய கவாஸாகி நின்ஜா எச்2 சூப்பர் பைக்கின் புதிய மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்!

கவாஸாகி நின்ஜா எச்2 எஸ்எக்ஸ் பைக்கில் ஸ்போர்ட்ஸ் டூரர் ரகத்திற்கு தக்கவாறு ஏராளமான ஆக்சஸெரீகள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. இந்த பைக்கில் எல்க்ட்ரானிக் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது நீண்ட தூர பயணங்களுக்கு மிகச் சிறப்பான வசதியாக இருக்கும்.

 புதிய கவாஸாகி நின்ஜா எச்2 சூப்பர் பைக்கின் புதிய மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்!

தவிர, பைக் புறப்படும்போது அதீத பிக்கப் காரணமாக, பின் சக்கரம் வழுக்குவதை தவிர்க்கும் லான்ச் கன்ட்ரோல், அதிக தரைப்பிடிப்புடன் செல்வதற்கு உதவும் டிராக்ஷன் கன்ட்ரோல், குயிக் ஷிஃப்ட் வசதி வளைவுகளில் செல்லும்போது வண்டியின் நிலைத்தன்மை குலைவதை தவிர்க்கும் கார்னரிங் மேனேஜ்மென்ட் சிஸ்டம் ஆகியவை விசேஷ தொழில்நுட்ப அம்சங்கள்.

Recommended Video - Watch Now!
New Maruti Swift Launch: Price; Mileage; Specifications; Features; Changes
 புதிய கவாஸாகி நின்ஜா எச்2 சூப்பர் பைக்கின் புதிய மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய கவாஸாகி நின்ஜா எச்2 எஸ்எக்ஸ் பைக்கில் புதிய எல்சிடி டிஜிட்டல் திரையும், எச்2 எஸ்எக்ஸ் எஸ்இ மாடலில் டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதுதவிர, நீண்ட தூர பயணங்களின்போது பொருட்களை எடுத்துச் செல்வதற்கான பேக்குகள் மற்றும் கேரியர் உள்ளிட்ட விசேஷ வசதிகளும் உள்ளன.

 புதிய கவாஸாகி நின்ஜா எச்2 சூப்பர் பைக்கின் புதிய மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பைக்கில் 4 சிலிண்டர்கள் கொண்ட சக்திவாய்ந்த 998சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 199 பிஎச்பி பவரையும், 136 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த பைக் குறைவான வேகத்தில் செல்லும்போதும் எளிதாக கையாளும் விதத்தில் இதன் எஞ்சின் மேப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன.

புதிய கவாஸாகி நின்ஜா எச்2 எஸ்எக்ஸ் மாடல் ரூ.21.80 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், எச்2 எஸ்எக்ஸ் எஸ்இ மாடல் ரூ.26.80 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும். இந்த புதிய கவாஸாகி நின்ஜா எச்2 எஸ்எக்ஸ் பைக் இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

English summary
Kawasaki Ninja H2 SX and H2 SX SE launched in India at Auto Expo 2018. The Kawasaki Ninja H2 SX is priced at Rs 21.80 lakh, and the H2 SX SE carries a price tag of Rs 26.80 lakh. Both prices are ex-showroom (India).
Story first published: Thursday, February 8, 2018, 20:30 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark