கவாஸாகி நிஞ்ஜா பைக்குகள் திடீர் விலையேற்றம்!

இளைஞர்களை பெரிதும் கவரும் கவாஸாகி நிறுவனம் தனது படைப்புகளான கவாஸாகி நிஞ்ஜா ZX10R மற்றும் ZX10RR ஆகிய சூப்பர் பைக்குகளின் விலைகளை திடீரென உயர்த்தியுள்ளது.

இளைஞர்களை பெரிதும் கவர்ந்த கவாஸாகி நிறுவனம் தனது தயாரிப்புகளான கவாஸாகி நிஞ்ஜா ZX10R மற்றும் ZX10RR சூப்பர் பைக்குகளின் விலையை திடீரென உயர்த்தியுள்ளது. இது பற்றிய தகவல்களை இச்செய்தியில் காண்போம்.

கவாஸாகி நிஞ்ஜா பைக்குகள் திடீர் விலையேற்றம்!

இந்த இருவாகனங்களுமே இந்த ஆண்டின் தொடக்கத்தில் தான் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த இருவாகனத்தின் விலையிலும் தலா 50,000 ரூபாயை உயர்த்தியுள்ளது கவாஸாகி நிறுவனம். ரூ.16.5 லட்சத்திற்கு கவாஸாகி நிஞ்ஜா ZX10R பைக்கும், ரூ.21 லட்சத்தில் கவாஸாகி ZX10RR பைக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

கவாஸாகி நிஞ்ஜா பைக்குகள் திடீர் விலையேற்றம்!

ஜூன் மாதம் வெளியான விலையேற்ற அறிவுப்பு தற்போது நடைமுறைக்கு வரும் என்று அந்நிறுவனம் உறுதிபூண்டுள்ளது. இதர காரணிகளை பொதுவாக காணுகையில் அரசாங்கம் தற்போது மாற்றியமைத்த காப்பீட்டு திட்டங்கள் தான் (THIRD PARTY INSURANCE) முக்கிய பங்கு வகிக்கின்றன.

கவாஸாகி நிஞ்ஜா பைக்குகள் திடீர் விலையேற்றம்!

இதன் தயாரிப்பு முற்றிலும் இந்தியாவில் இந்த ஆண்டு தொடக்கத்திலே ஆரம்பமாயிற்று. இருப்பினும் இது சில மேம்பட்ட உதிரி பாகங்களை ஜப்பான் வாகனத்தை ஒத்து இருப்பதால் அவர்களிடம் இறக்குமதி செய்யும் கட்டாயம் வந்தது.

கவாஸாகி நிஞ்ஜா பைக்குகள் திடீர் விலையேற்றம்!

இந்த இருவாகனத்தின் விலை சற்றே உயர்த்தப்பட்டாலும் இந்தியாவில் தயாராகும் சிறந்த செயல் திறன் கொண்ட இருசக்கர வாகனங்களின் பட்டியலில் இது இன்றும் முதலிடம் பிடித்துள்ளது இளைஞர் மனதில் இதன் இடத்தை பறைசாற்றும் வகையில் உள்ளது.

கவாஸாகி நிஞ்ஜா பைக்குகள் திடீர் விலையேற்றம்!

இந்த இரு வாகனத்தின் செயல் திறன் மற்றும் எஞ்சின் உள்ளிட்ட இதர அமைப்புகள் ஒன்றாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. லிக்யூடு கூல்டு என்ஜின் தொழில்நுட்பத்தில் இயங்கும் இது 998CC கொண்டுள்ளது. இதன் செயல்திறன் 197BHP ஐ எட்டுகிறது. மேலும் இதன் டார்க் 113 . 5 NM என ஆர்ப்பரிக்கும் வகையில் உள்ளது. குயிக் ஷிப்ட்டர் கொண்ட இதன் ஆறு வேககியர் பாக்ஸ் மற்றுமோர் சிறப்பம்சம்.

கவாஸாகி நிஞ்ஜா பைக்குகள் திடீர் விலையேற்றம்!

மேலும் அங்கங்கே சிறுசிறு மாற்றங்கள் ZX10RR வாகனத்தில் காணப்படுகின்றன. இந்த மாற்றங்கள் ஒன்றே இவ்வாகனத்தை பந்தய வாகனம் என்ற வகையில் மேம்படுத்திக்காட்ட ஏதுவாய் அமையும் வண்ணம் உள்ளது. இதில் குறிப்பிட பட வேண்டியவை நன்கு இறுக்கப்பட்ட அலுமினியம் வீல்கள், மாற்றியமைக்கப்பட்ட என்ஜினின் சிலிண்டர் ஹெட், கிரான்க் கேசில் உள்ள மாற்றங்கள் மற்றும்PIRELLI DIABBLO SUPERCORSA SP என்ற சிறப்பு டயர்கள்.

கவாஸாகி நிஞ்ஜா பைக்குகள் திடீர் விலையேற்றம்!

முற்றிலும் மாற்றியமைக்க பட்ட 43MM முன்பக்க போர்க் சஸ்பென்ஷன், மற்றும் மோனோஷாக் பின்பக்க ஒன்றை சஸ்பென்ஷன் அதிக அதிர்வுகளை தாங்கும் திறன் கொண்டுள்ளது . இந்த இரு அதிர்வு தாங்கிகளும் ,சாலைகளின் மேடு பள்ளத்திற்கு ஏற்றால் போல் மாற்றியமைத்து கொள்ளும் காம்ப்ரஸன் டேம்பிங் (COMPRESSION DAMPING) தொழில்நுட்பம் மற்றும் எடைக்கு ஏற்றல் போல் மாற்றியமைத்து கொள்ளும் ( SPRING PRELOAD ADJUSTABILITY) தொழில்நுட்பமும் கொண்டுள்ளது. இதன் பிரேக்கிங் தொழில்நுட்பம் ப்ரெம்போ 330MM இரட்டை டிஸ்க் கொண்டு முன்பக்கமும், 220MM ஒன்றை டிஸ்க் கொண்டு பின்பக்கமும் அமைந்துள்ளது.

கவாஸாகி நிஞ்ஜா பைக்குகள் திடீர் விலையேற்றம்!

மேலும் KAWASAKI ZX10R & ZX10RR வாகனத்தின் முக்கிய பிற சிறப்பம்சங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன. அவை

1. லான்ச் கன்ட்ரோல் வசதி (KLCM)

2. இன்டலிஜென்ட் ஆன்ட்டி லாக்கிங் பிரேக்கிங் சிஸ்டம் (KIBS)

3. ஸ்போர்ட்ஸ் டிராக்ஷன் கன்ட்ரோல் (S-KTRC)

4. எஞ்சின் பிரேக்கிங் சிஸ்டம்

5. குயிக் ஷிஃப்ட் - கியரை குறைக்க கூட இரண்டிற்கும் பயன்படும் (ZX10RR)

6. கார்னர் மேனேஜ்மென்ட் கன்ட்ரோல் (KCMF)

கவாஸாகி நிஞ்ஜா பைக்குகள் திடீர் விலையேற்றம்!

இந்த இரு பைக்குகளின்விற்பனை விலையில் மாற்றம் ஏற்பட்டது அனைவரும் எதிர்பார்த்த ஒன்றுதான். அறிமுக சலுகையாக மட்டுமே இதன் விலை குறைத்து சந்தையில் இறக்கப்பட்டது. விலையேற்றத்திற்கு பின்னும் இதன் விற்பனை சரிவை காணவில்லை என்பது அருமை.

கவாஸாகி நிஞ்ஜா பைக்குகள் திடீர் விலையேற்றம்!

இந்திய சந்தையை பொறுத்த வரை இந்த கவாஸாகி நிஞ்ஜா ZX10R வாகனம் சுசூகி GSX - R1000 , டுகாட்டி பனிகேல் V4 , BMW S1000RR மற்றும் அப்ரிலியா RSV4RF ஆகிய மாடல்களுடன் போட்டி இடுகிறது.

Most Read Articles
மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Kawasaki has increased the prices of their two litre-class offerings, the ZX-10R and the ZX-10RR in India. The 2018 Kawasaki Ninja ZX-10R and the Ninja ZX-10RR were introduced in the country earlier this year. The brand has now increased the prices of both the models at around Rs 50,000.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X