கேடிஎம் ட்யூக் 200 பைக்கிற்கு பட்ஜெட் விலையில் விசேஷ பாடி கிட் அறிமுகம்!

Written By:

கேடிஎம் ட்யூக் 200 பைக் இந்திய இளைஞர்களின் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற பைக் மாடல். கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய மாடலில் எதிர்பார்த்த அளவு மாற்றங்கள் இல்லை என்பது பலருக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

கேடிஎம் ட்யூக் 200 பைக்கிற்கு பட்ஜெட் விலையில் விசேஷ பாடி கிட் அறிமுகம்!

இந்த நிலையில், கேடிஎம் ட்யூக் 200 பைக்கை குறைவான தொகையில் கஸ்டமைஸ் செய்து கொள்வதற்கான விசேஷ ஆக்சஸெரீகளை புனேயை சேர்ந்த ஆட்டோலாக் டிசைன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. விசேஷ பாடி பேனல்கள் மற்றும் சில கூடுதல் ஆக்சஸெரீகள் மூலமாக கேடிஎம் ட்யூக் 200 பைக்கின் தோற்றத்தை வசீகரமாக மாற்றுவதற்கு இது உதவும்.

கேடிஎம் ட்யூக் 200 பைக்கிற்கு பட்ஜெட் விலையில் விசேஷ பாடி கிட் அறிமுகம்!

இந்த விசேஷ ஆக்சஸெரீகள் கொண்ட கஸ்டமைஸ் கிட்டிற்கு ஸ்ட்ரீட் எக்ஸ்2 என்ற பெயரில் வெளியிட்டு இருக்கிறது ஆட்டோலாக் டிசைன் நிறுவனம். இந்த விசேஷ ஆக்சஸெரீகளை சுயமாகவே பைக் உரிமையாளர் பொருத்திக் கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருப்பது சிறப்பு.

கேடிஎம் ட்யூக் 200 பைக்கிற்கு பட்ஜெட் விலையில் விசேஷ பாடி கிட் அறிமுகம்!

வெறும் 20 நிமிடங்களில் இந்த ஆக்சஸெரீகளை பொருத்தி உங்களது கேடிஎம் ட்யூக் 200 பைக்கை தனித்துவமாக மாற்ற முடியும் என்கிறது ஆட்டோலாக் டிசைன் நிறுவனம். கேடிஎம் ட்யூக் 390 பைக்கிற்கு இணையான தோற்றத்தை பெறும் வகையில் இந்த விசேஷ பாடி பேனல்கள் மற்றும் ஆக்சஸெரீகள் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன.

கேடிஎம் ட்யூக் 200 பைக்கிற்கு பட்ஜெட் விலையில் விசேஷ பாடி கிட் அறிமுகம்!

பெட்ரோல் டேங்குடன் இணைத்துக் கொள்ளகூடிய புதிய பாடி பேனல்கள், எஞ்சினை மூடுவதற்கான பெல்லி பேன், ரேடியேட்டர் கவர் என இந்த கஸ்டமைஸ் கிட்டில் பல தனித்துவமான ஆக்சஸெரீகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, சீட் கவுல், டயர் ஹக்கர் உள்ளிட்ட ஆக்சஸெரீகளும் இந்த பேக்கேஜில் இடம்பெற்று இருக்கிறது.

கேடிஎம் ட்யூக் 200 பைக்கிற்கு பட்ஜெட் விலையில் விசேஷ பாடி கிட் அறிமுகம்!

பைக்கின் வண்ணத்திற்கு தக்கவாறு இந்த பாடி பேனல்கள் வண்ணம் தீட்டப்பட்டு இருக்கின்றன. தேவைப்படும்போது எளிதாக கழற்றி வைக்க முடியும் என்பதால், வாரண்டி பிரச்னை இருக்காது என்று ஆட்டோலாக் டிசைன் நிறுவனம் தெரிவிக்கிறது.

கேடிஎம் ட்யூக் 200 பைக்கிற்கு பட்ஜெட் விலையில் விசேஷ பாடி கிட் அறிமுகம்!

கேடிஎம் ட்யூக் 200 பைக்கிற்கான விசேஷ கஸ்டமைஸ் பேக் தவிர்த்து, கேடிஎம் ட்யூக் 250 பைக்கிற்கு கேடிஎம் ட்யூக் 390 பைக் போன்ற வடிவத்திலான ஹெட்லைட் ஹவுசிங்கையும் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக ஆட்டோலாக் டிசைன் நிறுவனம் தெரிவிக்கிறது. ஆனால், எல்இடி விளக்குகள் இருக்காது.

கேடிஎம் ட்யூக் 200 பைக்கிற்கு பட்ஜெட் விலையில் விசேஷ பாடி கிட் அறிமுகம்!

இந்த கஸ்டமைஸ் கிட்டை பெற விரும்பும் வாடிக்கையாளர்களின் வீட்டு முகவரிக்கே இந்த கஸ்டமைஸ் கிட்டை அனுப்புவதாகவும் ஆட்டோலாக் டிசைன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கஸ்டமைஸ் கிட்டிற்கு ரூ.12,946 விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும்... #கேடிஎம் #ktm
English summary
Austrian motorcycle maker KTM launched the all-new Duke 390 in India in 2017. The company also introduced the new 250 Duke in the country. But the Duke 200 was left untouched and in its 2017 avatar featured the same design. The Indian buyers were disappointed by the fact that the most affordable KTM does not get any changes.
Story first published: Saturday, March 3, 2018, 12:28 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark