TRENDING ON ONEINDIA
-
கூட்டணி உறுதியானதால் குஷி.. அமித்ஷா இன்று மாலை சென்னை வருகை
-
டூவீலர் உற்பத்தியாளர், டீலர், ஆர்டிஓக்கள் இணைந்து 13 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடம் மெகா மோசடி... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...
-
நடிகையாகும் பிரபல ஹீரோவின் மகள்: பொண்ணு ரொம்பத் தெளிவு
-
இந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கும் கெட்ட நேரம் ஆரம்பிச்சிடுச்சு... கொஞ்சம் கவனமா இருங்க
-
பாகிஸ்தான் இராணுவத்தை தலை பிச்சுக்க விட்ட இந்திய ஹேக்கர்கள்.!
-
தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா? ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா?
-
இந்த ஊர்ல ஒருவரின் சராசரி வருமானமே 3.2 கோடி ரூபாய்.. எந்த ஊர் தெரியுமா..?
-
ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது
கேடிஎம் ட்யூக் 390 பைக்கிற்கு இந்தியாவில் ரீகால் நடவடிக்கை!!
தொழில்நுட்ப குறைபாடுகளை சரிசெய்து தருவதற்காக கேடிஎம் ட்யூக் 390 பைக் இந்தியாவில் திரும்ப அழைக்கப்பட இருக்கின்றன. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
கேடிஎம் ட்யூக் 390 பைக்கில் சில குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவற்றை சரிசெய்து தருவதற்காக திரும்ப அழைக்கும் நடவடிக்கையை சத்தமில்லாமல் மேற்கொண்டுள்ளது கேடிஎம் இந்தியா நிறுவனம்.
மான்சூன் கிட் என்ற பெயரில் சில கூடுதல் ஆக்சஸெரீகளை பொருத்தி தருவதற்கும் கேடிஎம் முடிவு செய்துள்ளது. அதன்படி, இசியூ சாதனம் நீர் மற்றும் தூசிகளால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக புதிய பிராக்கெட் அமைப்பு பொருத்தி தரப்பட இருக்ககிறது.
அதேபோன்று, இருக்கையும், டெயில் லைட் க்ளஸ்ட்டரும் நெருக்கமாக இருப்பதால், பின் இருக்கையில் பயணி அமரும்போது டெயில் லைட் க்ளஸ்ட்டர் கண்ணாடியில் தெறிப்புகள் விழுகின்றன. இதற்கு தீர்வு காணும் விதத்தில், இருக்கை உயரத்தை அதிகரிக்கும் விதமாக புதிய சீட் புஷ்கள் கொடுக்கப்பட இருக்கின்றன.
அதேபோன்று, கேடிஎம் ட்யூக் 390 பைக்கின் ஹெட்லைட்டிலும் குறைபாடு இருப்பதாக பல வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தனர். ஹெட்லைட் அதிர்வு மற்றும் தானாக அணைந்து ஒளிரும் பிரச்னை இருப்பது குறித்த அந்த புகாருக்கு தீர்வு காணு் விதத்தில், சாஃப்ட்வேர் அப்டேட் கொடுக்கப்பட இருக்கிறது.
கடந்த 2017 மற்றும் 2018ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட கேடிஎம் ட்யூக் 390 பைக்குகள் இந்த ரீகால் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு டீலர் வழியாக தனித்தனியாக தகவல் தெரிவிக்கப்பட்டு திரும்ப அழைக்கும் நடவடிக்கையை கேடிஎம் மேற்கொண்டுள்ளது.
கட்டணமில்லலாமல் இந்த குறைகளை நிவர்த்தி செய்து தர கேடிஎம் முடிவு செய்துள்ளது. இதன்மூலமாக, கேடிஎம் ட்யூக் 390 பைக்கில் இதுவரை இருந்த பல பிரச்னைகள் தீர்க்கப்படும் என்று வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.