கேடிஎம் ஆர்சி 390 பைக்கின் ரேஸ் வெர்ஷன்... விலை ரூ.15 லட்சம்?

Written By:

கேடிஎம் பைக்குகளுக்கு உலக அளவில் இருக்கும் வரவேற்பு அறிந்ததே. மிரட்டலான டிசைனுடன் அதி செயல்திறன் மிக்க கேடிஎம் பைக் மாடல்களுக்கு ரசிகர்கள் எண்ணிக்கை பலமாகவே இருக்கிறது.

கேடிஎம் ஆர்சி 390 பைக்கின் ரேஸ் வெர்ஷன்... விலை ரூ.15 லட்சம்?

இந்த நிலையில், ரேஸ் டிராக்குகளை ஒரு கை பார்க்கும் விதத்தில், கேடிஎம் ஆர்சி 390 பைக்கிற்கான விசேஷ கிட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மிக பிரத்யேகமான இந்த ஆக்சஸெரீகள் கொண்ட பேக்கேஜ் விலைதான் மயக்கம் போட வைக்கிறது.

கேடிஎம் ஆர்சி 390 பைக்கின் ரேஸ் வெர்ஷன்... விலை ரூ.15 லட்சம்?

எஸ்எஸ்பி300 ரேஸ் கிட் என்ற பெயரில் இந்த விசேஷ ஆக்சஸெரீகள் பேக்கேஜ் வெளியிடப்பட்டு இருக்கிறது. மொத்தமாக 500 பைக்குகளுக்கான ரேஸ் கிட்டுகள் மட்டுமே உலக அளவில் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

கேடிஎம் ஆர்சி 390 பைக்கின் ரேஸ் வெர்ஷன்... விலை ரூ.15 லட்சம்?

இந்த ரேஸ் கிட்டில் 230 விசேஷ உதிரிபாகங்கள் இடம்பெற்று உள்ளன. சூப்பர்ஸ்போர்ட் 300 பந்தயத்தில் கேடிஎம் ஆர்சி 390 பைக்கை பயன்படுத்துவதற்கான வாய்ப்பை இந்த ரேஸ் கிட்டை பொருத்துவதன் மூலமாக பெற முடியும்.

கேடிஎம் ஆர்சி 390 பைக்கின் ரேஸ் வெர்ஷன்... விலை ரூ.15 லட்சம்?

இந்த ரேஸ் கிட்டில் பிரத்யேக இசியூ சாதனம், எஸ்டிம் ஸ்லிப்பர் க்ளட்ச், அக்ரபோவிக் எஸ்எஸ்பி300 எவோ02 என்ற விசேஷ புகைப்போக்கி அமைப்பு, ஸ்பேர் வீல், விசேஷ குளிர்விப்பு முறை மற்றும் இலகுவான உதிரிபாகங்கள் ஆகியவை கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

கேடிஎம் ஆர்சி 390 பைக்கின் ரேஸ் வெர்ஷன்... விலை ரூ.15 லட்சம்?

இந்த விசேஷ உதிரிபாகங்கள் அடங்கிய ரேஸ் கிட் கேடிஎம் ஆர்சி390 பைக்கில் பொருத்திக் கொள்ளலாம். இதன் மூலமாக, ரேஸ் டிராக்கில் பந்தய பைக்கை போல பயன்படுத்த முடியும். ஐரோப்பிய வாடிக்ககையாளர்கள் இந்த ரேஸ் கிட்டை வாங்கி பொருத்திக் கொள்ளலாம்.

கேடிஎம் ஆர்சி 390 பைக்கின் ரேஸ் வெர்ஷன்... விலை ரூ.15 லட்சம்?

இந்த பிரத்யேக ரேஸ் கிட் மஹாராஷ்டிர மாநிலம், புனே அருகில் சகன் தொழிற்பேட்டையில் உள்ள பஜாஜ் ஆட்டோ ஆலையில்தான் தயாரிக்கப்பட்டு ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கேடிஎம் ஆர்சி 390 பைக்கின் ரேஸ் வெர்ஷன்... விலை ரூ.15 லட்சம்?

ஐரோப்பாவில் மட்டுமே கேடிஎம் ஆர்சி 390 'ஆர்' பைக் மாடல் ஹோமோலாகேஷன் செய்யப்பட்டு இருப்பதால், அங்குள்ள வாடிக்கையாளர்கள் மட்டுமே இந்த விசேஷ ஆக்சஸெரீ கிட்டை வாங்கி பொருத்த முடியும் என்பது நமக்கு ஏமாற்றம் தரும் விஷயம்.

கேடிஎம் ஆர்சி 390 பைக்கின் ரேஸ் வெர்ஷன்... விலை ரூ.15 லட்சம்?

தற்போதைக்கு இந்தியாவில் இந்த விசேஷ கிட்டை வாங்கி பொருத்த இயலாத நிலை உள்ளது. ஐரோப்பாவில் கேடிஎம் ஆர்சி390 ஆர் பைக் 8,500 யூரோ விலையிலும், ரேஸ் கிட் 11,000 யூரோ விலையிலும் கிடைக்கும். இந்திய மதிப்பில் ரூ.15.4 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்... #கேடிஎம் #ktm
English summary
KTM Introduces Special Race Kit For RC390 R Bike.
Story first published: Wednesday, January 31, 2018, 10:23 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark