கே.டி.எம் பைக் விபத்தில் சிக்குவதை தவிர்க்க புதிய கருவி...

இந்தியாவில் இளைஞர்களை கவர்ந்த கே.டி.எம். பைக்கில் பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்க க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற ஒரு புதிய கருவியை அந்நிறுவன ஊழியர்கள் தயாரித்துள்ளனர்.

By Balasubramanian

இந்தியாவில் இளைஞர்களை கவர்ந்த கே.டி.எம். பைக்கில் பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்க க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற ஒரு புதிய கருவியை அந்நிறுவன ஊழியர்கள் தயாரித்துள்ளனர். தற்போது சோதனை கட்டத்தில் உள்ள இந்த கருவி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

கே.டி.எம் பைக் விபத்தில் சிக்குவதை தவிர்க்க புதிய கருவி...

ஆஸ்திரிய டூவிலர் நிறுவனமான கே.டி.எம் பைக் நிறுவனம் இந்தியாவில் தனது விற்பனையை துவங்க்கியதில் இருந்து இந்திய இளைஞர்களின் மனதை கொள்ளையடித்து விட்டது. பல்சர் அப்பாச்சி என்று தங்கள் மனதை கொடுத்தவர்கள் எல்லாம் அங்கிருந்து தங்கள் மனதை பிடுங்கி கே.டி.எம் பைக்கிடம் கொடுத்து விட்டனர்.

கே.டி.எம் பைக் விபத்தில் சிக்குவதை தவிர்க்க புதிய கருவி...

இந்த பைக்கின் லுக், ஸ்பீடு, சத்தம் என எல்லாம் இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டது. பெருநகரங்களில் பல இளைஞர்கள் இந்த பைக்கில் ரோட்டில் பறப்பதை நாம் அடிக்கடி பார்க்கலாம். ஆனால் அது ஆபத்தான பயணம் தான். இந்த பைக்கின் பிக்கப் மற்றும் வேகம் இளைஞர்களின் மனதை மயக்கி விட்டது.

கே.டி.எம் பைக் விபத்தில் சிக்குவதை தவிர்க்க புதிய கருவி...

ஆனால் இந்த பைக் விபத்தில் சிக்கினால் பெரும் சேதத்தை சந்திக்கிறது. ராயல் என்பீல்டு பைக்கும் இதே ரக பைக் தான் என்றாலும் அந்த பைக் முழுவதும் மெட்டலால் ஆனது. அதனால் அந்த பைக் விபத்தை சந்தித்தால் ஆகும் சேதாரத்தைவிட கே.டி.எம். பைக் அதிக சேதராமாகும். ஏன் என்றால் கே.டி.எம் பைக் பிளாஸ்டிக் பைபரால் ஆனது.

கே.டி.எம் பைக் விபத்தில் சிக்குவதை தவிர்க்க புதிய கருவி...

தற்போது கே.டி.எம் பைக்கில் உள்ள பெரும் குறையே இது தான் என்பதால் அந்நிறுவனம் இதற்கு சிறந்த தீர்வை கண்டாக வேண்டிய சூழ்நிலை உள்ளது. பைக்கில் மெட்டலை அதிகம் செய்தால் பைக்கின் பிக்கப் மற்றும் வேகம் குறையும். பைக் அதிகமாக விற்பனையாக மூல காரணமே இது இரண்டும் தான்.

கே.டி.எம் பைக் விபத்தில் சிக்குவதை தவிர்க்க புதிய கருவி...

சூழ்நிலை இவ்வாறு இருக்க கே.டி.எம். நிறுவனத்தின் ஆய்வு மற்றும் மேம்பாட்டு துறை தற்போது பைக்கில் சென்சாருடன் கூடிய க்ரூஸ் கண்ட்ரோலை பொருத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பைக் விபத்தில் சிக்குவதை தவிர்க்க முடிவு செய்துள்ளது.

கே.டி.எம் பைக் விபத்தில் சிக்குவதை தவிர்க்க புதிய கருவி...

அதாவது இதுவரை கே.டி.எம். பைக் விபத்தில் சிக்கிய சம்பவங்களை பார்க்கும் போது பைக் வேகமாக சென்று பிரேக் பிடிக்கும் போது ஸ்கிட் ஏற்பட்டு கீழே விழுந்தோ மற்ற வாகனங்களின் மீது மோதியோ விபத்திற்குள்ளாவது தான் அதிகம்.

கே.டி.எம் பைக் விபத்தில் சிக்குவதை தவிர்க்க புதிய கருவி...

அதனால் பைக்கின் முன்புறமும் பின்புறமும் சென்றார் போன்ற கருவியை அந்நிறுவனம் பொருத்தவுள்ளது. இந்த கருவி பைக் 30கி.மீ. வேகத்திற்கும் அதிகமாக செல்லும் போது அக்டிவேட் ஆகிவிடும். தொடர்ந்து பைக்கிற்கு முன்புறம் குறுக்கே ஏதேனும் பொருள் வந்தால் அந்த சென்சார் மிக வேகமாக செயல்பட்டு பைக்கின் வேகத்தை கட்டுப்படுத்தி தேவைப்பட்டால் பிரேக்கையும் கட்டுப்படுத்தி பைக்கை கண்ட்ரோலுக்கு கொண்டு வந்துவிடும்.

கே.டி.எம் பைக் விபத்தில் சிக்குவதை தவிர்க்க புதிய கருவி...

அந்த நேரங்களில் பைக்கில் இருப்பவர் என்னதான் முயற்சி செய்தாலும் அக்ஸிலேட்டரை திருகினாலும் பைக் அதற்கு செயல்படாது. தற்போது பைக் செல்லும் வேகத்தை பொருத்து இந்த பைக் 2 நொடியில் எவ்வளவு தூரம் செல்லும் என்பதை கணக்கிட்டு அந்த பகுதியை மட்டும் சென்சார் எடுத்து கொள்ளும்.

கே.டி.எம் பைக் விபத்தில் சிக்குவதை தவிர்க்க புதிய கருவி...

அதாவது நீங்கள் வேகமாக செல்லும் போது அதிக தூரத்திலும் மெதுவாக செல்லும் போது குறைந்த தூரத்தையும் சென்சார் செய்து அதற்கு ஏற்றார் போல் இந்த கருவி செயல்படும். இந்த கருவி பைக்கில் பொருத்தப்பட்ட பின்பு எவ்வளவு தூரம் சென்சார் செய்ய வேண்டும் என்பதை நாமே செலக்சட் செய்யும் படி இருக்கும்.

கே.டி.எம் பைக் விபத்தில் சிக்குவதை தவிர்க்க புதிய கருவி...

இதேபோல் பைக்கின் பின்புறம் உள்ள சென்சார் பகுதிக்குள் ஏதேனும் வாகனம் வந்தால் பைக்கின் சைடு கண்ணாடியில் 3 சிவப்பு விளக்குகள் எரியும். மேலும் பைக்கின் கிளஸ்டர் பகுதியில் உள்ள டச் ஸ்கிரீனில் இது குறித்த எச்சரிக்கை வரும்.

கே.டி.எம் பைக் விபத்தில் சிக்குவதை தவிர்க்க புதிய கருவி...

இந்த தொழிற்நுட்பம் தற்போது சோதனை கட்டத்தில் தான் உள்ளது எனவும் இது வெற்றி பெற்றால் , 2020ம் ஆண்டு தயாரிக்கப்படும் கே.டி.எம். பைக்குகள் இந்த தொழிற்நுட்பத்துடன் தயாரிக்கப்படும் எனவும் அந்நிறுவனத்தின் ஆய்வு மற்றும் மேம்பாட்டுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

கே.டி.எம் பைக் விபத்தில் சிக்குவதை தவிர்க்க புதிய கருவி...

தொடர்ந்து உயர்ரக பைக்குகளில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் வந்துவிட்டது. இதே போன்று சென்சார் வைத்து பைக்கை கட்டுப்படுத்தும் கருவியை இதற்கு முன்னர் டுகாட்டி நிறுவனம் செய்தது. இந்த முயற்சி இன்னும் சோதனை கட்டத்தில்தான் உள்ளது. தற்போது கே.டி.எம். பைக்கிற்கும் இந்த கருவியை பொருத்த நினைப்பது பைக் உள்ள பாதுகாப்பு அம்சங்களுக்கான முக்கியத்துவத்தை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #கேடிஎம் #ktm
English summary
KTM Testing Sensor-Based Safety Technology — To Provide Rider Assistance Functions.Read in Tamil
Story first published: Saturday, May 12, 2018, 18:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X