TRENDING ON ONEINDIA
-
டெல்லி உட்பட வட மாநிலங்களை குலுக்கிய நில அதிர்வு.. மக்கள் பீதி
-
டோல்கேட் விஷயத்தில் மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்... லோக்சபா தேர்தல் நெருங்குவதால் மெகா திட்டம்...
-
Yogi Babu:அடம்பிடிக்கும் வடிவேலு: இம்சை அரசன் ஆகும் யோகி பாபு?
-
லெஸ்பியன், கே போன்றோருக்கு எப்படிப்பட்ட பாலியல் ரீதியான பிரச்சினைகள் உண்டாகும்?
-
சென்னை பெரியமேடு லாட்ஜ் படுக்கை அறையில் இரகசிய கேமராகள்.! உஷார் மக்களே
-
முக்கிய வீரர் யார்? கோலியா? தோனியா? முகமது கைஃப் யாரை சொன்னார் தெரியுமா?
-
பாக் பொருளாதாரத்துக்கு நரம்படி கொடுத்த இந்தியா..? Most Favored Nation ஸ்டேட்டஸால் என்ன ஆகும்..?
-
புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா? அடக் கடவுளே!
மஹிந்திரா ஜென்ஸி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் சோதனை ஓட்டம்!!
மஹிந்திரா ஜென்ஸி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.
மஹிந்திரா ஜென்ஸி ஸ்கூட்டர் அமெரிக்க மார்க்கெட்டிற்காக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நகர்ப்புற பயன்பாட்டு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்ட இந்த ஸ்கூட்டர் இந்தியர்கள் மத்தியிலும் ஆவலை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், முதல்முறையாக மஹிந்திரா ஜென்ஸி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் புனே நகர் அருகே சோதனை ஓட்டம் செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட ஸ்பை படம் வெளியாகி இருக்கிறது. நகர்ப்புறத்தில் எளிமையாக ஓட்டும் அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
மஹிந்திரா ஜென்ஸி ஸ்கூட்டர் அலுமினியம் மோனோகாக் சேஸி கட்டமைப்பில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஜிபிஎஸ் டிராக்கர் மற்றும் வண்ண திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் வெவ்வேறு நிலைகளில் செல்வதற்கான ரைடிங் மோடு உள்ளிட்ட முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.
உயர்த்தப்பட்ட அமைப்புடைய ஹேண்டில்பாரும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் அகலமான இருக்கை அமைப்பையும் பெற்றிருக்கிறது. இருக்கைக்கு பின்னால் பொருட்கள் வைப்பதற்கான பெட்டி கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்கூட்டரில் 2 பிஎச்பி பவரையும், 100 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதிலுள்ள 2kWh திறன் கொண்ட லித்தியம் அயான் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 50 கிமீ தூரம் வரை பயணிக்கலாம்.
வேகம், ஓட்டுனரின் எடையை பொறுத்து ரேஞ்ச் மாறுபடலாம். அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் மஹிந்திரா ஜென்ஸி ஸ்கூட்டர் மணிக்கு 48 கிமீ வேகம் வரை செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.
மஹிந்திரா ஜென்ஸி ஸ்கூட்டரில் முன்புறத்தில் பெரிய சக்கரங்களும், பின்புறத்தில் சற்று தடிமனான சிறிய சக்கரமும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.
நகர்ப்புறத்தில் பெண்கள் ஷாப்பிங் செல்வதற்கு ஏதுவாகவும், வியாபார நிறுவனங்கள், ஓட்டல்கள் டெலிவிரி கொடுப்பதற்கான வசதிகளை மனதில் வைத்து இந்த ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
மின்சார கார் தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ள மஹிந்திரா தற்போது மின்சார இருசக்கர வாகனங்கள் மீதும் தனது கவனத்தை செலுத்துவது இந்த ஸ்பை படம் மூலமாக தெரிய வருகிறது.
Spy Image Source:Performance Factory/Facebook