ரூ. 1.49 லட்சம் விலையில் மஹிந்திராவின் மோஜோ யூடி300 பைக் விற்பனைக்கு அறிமுகம்..!!

Written By:

இந்தியாவில் புதிய மோஜோ யூடி300 மோட்டார் சைக்கிள் ரூ. 1.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

மஹிந்திரா மோஜோ யூடி300 பைக் விற்பனைக்கு அறிமுகம்..!!

தற்போது எக்ஸ்.டி300 என்றழைக்கப்படும் உண்மையான மோஜோ பைக்கின் சராம்சங்களை கொண்டு மஹிந்திரா நிறுவனம் புதிய மோஜோ யுடி300 பைக்கை தயாரித்துள்ளது.

மஹிந்திரா மோஜோ யூடி300 பைக் விற்பனைக்கு அறிமுகம்..!!

தோற்றம் மற்றும் வடிவமைப்பில் இந்த புதிய பைக் எக்ஸ்.டி 300 ஸ்டைலிங்கை பெற்றிருந்தாலும், கட்டமைப்பில் அனைவருக்கும் ஏற்ற பல புதிய தயாரிப்புகளை கொண்டுள்ளது.

மஹிந்திரா மோஜோ யூடி300 பைக் விற்பனைக்கு அறிமுகம்..!!

இந்த பைக்கின் பெயரில் குறிப்பிடப்பட்டு இருக்கும் UT என்பதற்கு ‘Universal Touring' என்பது பொருள். அதேபோல XT என்றால் ‘Xtreme Tourer' என மஹிந்திரா விளக்கமளித்துள்ளது.

மஹிந்திரா மோஜோ யூடி300 பைக் விற்பனைக்கு அறிமுகம்..!!

யுடி300 பைக்கில் திராட்டி ட்வின் - எக்ஸாஸ்ட் பைப்புகள் பொருத்தப்படவில்லை. தவிர யூடி300 பைக், எக்ஸ்.டி 300 மாடலை விட குறைந்த எடையில் தயாராகியுள்ளது.

மஹிந்திரா மோஜோ யூடி300 பைக் விற்பனைக்கு அறிமுகம்..!!

எம்.ஆர்.எஃப் டயர்களை பெற்றுள்ள இந்த பைக்கில் பகல்நேர எல்.இ.டி விளக்குகள், எக்ஸ்.டி 300 பைக் போலவே ட்வின்-பாட் முகப்பு விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

மஹிந்திரா மோஜோ யூடி300 பைக் விற்பனைக்கு அறிமுகம்..!!

பைக்கின் முன் மற்றும் பின் சக்கரங்களில் டிஸ்க் பிரேக் அம்சம் வழங்கப்பட்டு இருக்க, ஏபிஎஸ் இதில் இடம்பெறவில்லை என மஹிந்திரா தெரிவித்துள்ளது.

மஹிந்திரா மோஜோ யூடி300 பைக் விற்பனைக்கு அறிமுகம்..!!

டெலஸ்கோபிக் மற்றும் மோனோ ஷாக் அப்ஸபர்கள் ஆகியவை மஹிந்திரா யூடி300 பைக்கின் சஸ்பென்ஷன் தேவையை பூர்த்தி செய்கிறது.

மஹிந்திரா மோஜோ யூடி300 பைக் விற்பனைக்கு அறிமுகம்..!!

295சிசி லிக்விடு கூல்டு 4 வால்வ், சிங்கிள் சிலிண்டர் எஞ்சினை பெற்றுள்ள இந்த பைக் கார்பூரேட்டர் ஃபியூயல் சிஸ்டத்தை பெற்றுள்ளது. இதற்கான செயல்திறன் சார்ந்த தகவல்களில் மஹிந்திரா இன்னும் மௌனம் காக்கிறது.

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Read in Tamil: Mahindra Mojo UT300 Launched In India; Priced At Rs 1.49 Lakh. Click for Details...
Story first published: Monday, March 5, 2018, 18:21 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark