மஹிந்திரா மோஜோ பைக்கின் குறைவான விலை மாடல் ஷோரூமில் தரிசனம்!

Written By:
Recommended Video - Watch Now!
Under-Aged Rider Begs The Policewomen To Spare Him - DriveSpark

ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் மஹிந்திரா மோஜோ பைக் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில், பஜாஜ் டோமினார் 400 உள்ளிட்ட பைக் மாடல்களால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை போக்கிக் கொள்வதற்காக மஹிந்திரா மோஜோ பைக்கின் குறைவான விலை மாடல் களமிறக்கப்பட இருக்கிறது.

மஹிந்திரா மோஜோ பைக்கின் குறைவான விலை பைக் ஷோரூமில் தரிசனம்!

ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் வாங்க இருப்பவர்கள் மற்றும் பைக் பிரியர்கள் மத்தியில் இந்த புதிய மாடல் ஆவலை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில், இந்த பைக் மஹிந்திரா நிறுவனத்தின் ஷோரூம் ஒன்றில் நிறுத்தி இருந்தபோது எடுக்கப்பட்ட படங்கள் இப்போது வெளியாகி உள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மஹிந்திரா மோஜோ பைக்கின் குறைவான விலை பைக் ஷோரூமில் தரிசனம்!

மஹிந்திரா மோஜோ பைக்கின் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட மாடல் மோஜோ எக்ஸ்டி300 என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், குறைவான விலையில் வரும் புதிய மோஜோ பைக் யுடி300 என்ற பெயரில் வர இருக்கிறது. ஒட்டுமொத்த டிசைனில் மாற்றம் இல்லை.

மஹிந்திரா மோஜோ பைக்கின் குறைவான விலை பைக் ஷோரூமில் தரிசனம்!

விலை உயர்ந்த மோஜோ எக்ஸ்டி300 மாடலில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷன் முன்புறத்தில் இருக்கிறது. புதிய மோஜோ யுடி300 மாடலில் சாதாரணமான டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளுடன் சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா மோஜோ பைக்கின் குறைவான விலை பைக் ஷோரூமில் தரிசனம்!

விலை உயர்ந்த மோஜோ பைக்கில் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், புதிய மோஜோ யுடி300 மாடலில் கார்புரேட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா மோஜோ பைக்கின் குறைவான விலை பைக் ஷோரூமில் தரிசனம்!

புதிய மோஜோ யுடி300 மாடலில் எல்இடி பகல்நேர விளக்குகள் இல்லை. இரண்டு சைலென்சர் அமைப்புக்கு பதிலாக ஒற்றை சைலென்சர் அமைப்பு உள்ளது. பைரெல்லி டயாப்லோ ராஸோ II டயர்களுக்கு பதிலாக எம்ஆர்எஃப் டயர்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

மஹிந்திரா மோஜோ பைக்கின் குறைவான விலை பைக் ஷோரூமில் தரிசனம்!

விலை உயர்ந்த மாடலில் ஃப்ரேமில் தங்க நிற பூச்சு கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், இந்த மாடலில் அந்த தங்க நிற பூச்சு இல்லாமல் கருப்பு நிற பூச்சு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா மோஜோ பைக்கின் குறைவான விலை பைக் ஷோரூமில் தரிசனம்!

புதிய மோஜோ யுடி300 மாடல் நீலம் மற்றும் சிவப்பு என இரண்டு வண்ணங்களில் கிடைக்கும். பின்புற இருக்கையில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால், பின்னால் அமர்பவருக்கு சற்று சவுகரியமான இடவசதி இருக்கும்.

மஹிந்திரா மோஜோ பைக்கின் குறைவான விலை பைக் ஷோரூமில் தரிசனம்!

எஞ்சினிலும் மாற்றம் இல்லை. விலை உயர்ந்த மோஜோ பைக்கில் இருக்கும் அதே 295சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின்தான் இந்த பைக்கிலும் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 27 பிஎச்பி பவரையும், 30 என்எம் டார்க் திறனையும் வழங்கும். கார்ப்புரேட்டர் மாடலில் பவர் வெளிப்படுத்தும் திறனில் சிறிய மாறுதல் இருக்கலாம்.

மஹிந்திரா மோஜோ பைக்கின் குறைவான விலை பைக் ஷோரூமில் தரிசனம்!

புதிய மஹிந்திரா மோஜோ யுடி300 மாடல் டீலர்ஷிப்புகளுக்கு வரத் துவங்கி விட்டது. விரைவில் விற்பனைக்கு வந்துவிடும் என்று தெரிகிறது. இந்த புதிய மாடல் ரூ.1.4 லட்சம் முதல் ரூ.1.5 லட்சம் இடையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

Spy Images Source: Bikers Guide-India

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Low-Cost Mahindra Mojo UT300 Spotted At Dealership — To Rival Bajaj Dominar 400

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark