மஹிந்திரா-பியாஜொயோ கூட்டணியில் உருவாகும் ப்ரீமியம் ஸ்கூட்டர் இப்போதைக்கு விற்பனை இல்லை..!!

Written By:

பியாஜியோ பெயரில் புதிய ஸ்கூட்டரை இந்தியாவில் வெளியிட இருந்த மஹிந்திரா நிறுவனம், அந்த முடிவை தற்போதைக்கு தள்ளிவைத்துள்ளது.

இத்தாலியை சேர்ந்த பியாஜியோ நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவிற்கு ஏற்ற ஒரு ப்ரீமியம் தர ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வர மஹிந்திரா முடிவு செய்திருந்தது.

மஹிந்திரா - பியாஜியோ ஸ்கூட்டர் வெளிவருவதில் தாமதம்..!!

2017ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை ப்ரீமியம் தர பியாஜியோ ஸ்கூட்டரின் விற்பனையை இந்தியாவில் மஹிந்திரா நிர்வகிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

மஹிந்திரா - பியாஜியோ ஸ்கூட்டர் வெளிவருவதில் தாமதம்..!!

ஆனால் தற்போது இந்த ஸ்கூட்டரை வெளியிடும் முடிவை தள்ளிவைத்துள்ளதாக மஹிந்திரா கூறியுள்ளது. இதை அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பவன் கோயென்கா உறுதிப்படுத்தியுள்ளார்.

மஹிந்திரா - பியாஜியோ ஸ்கூட்டர் வெளிவருவதில் தாமதம்..!!

மணிகன்ட்ரோல் செய்தித்தளத்திடம் பேசிய அவர், இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற விலையை மஹிந்திரா-பியாஜியோ கூட்டணி ஸ்கூட்டருக்கு நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மஹிந்திரா - பியாஜியோ ஸ்கூட்டர் வெளிவருவதில் தாமதம்..!!

ப்ரீமியம் தர ஸ்கூட்டருக்காக இந்தியா வாடிக்கையாளர்கள் மனநிலையை எவ்வாறு உள்ளது என இந்தியா வாடிக்கையாளர்கள் மத்தியில் மஹிந்திரா நிறுவனம் 2014ல் ஒரு சர்வே மேற்கொண்டது.

மஹிந்திரா - பியாஜியோ ஸ்கூட்டர் வெளிவருவதில் தாமதம்..!!

அதன்படி மொத்தம் மூன்று புதிய பியாஜியோ ஸ்கூட்டர்களை இந்தியாவில் வெளியிட மஹிந்திரா தயாராக இருந்தது. கடந்த மாதங்களாக இந்தியாவில் பிரபலமாகி வரும் 125சிசி ஸ்கூட்டர் செக்மென்டில் தான் இந்த புதிய ஸ்கூட்டர்களும் வெளிவர இருந்தன. ஆனால் தற்போது இந்த முடிவில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

மஹிந்திரா - பியாஜியோ ஸ்கூட்டர் வெளிவருவதில் தாமதம்..!!

ஹோண்டா நிறுவனம் கடந்தாண்டு முடிவில் வெளியிட்ட கிராஸியா 125 ஸ்கூட்டர் நல்ல விற்பனை திறனை பெற்று வருகிறது. அதேபோல ஆட்டோ எக்ஸ்போ 2018ல் வெளியான டிவிஎஸ் என்டார்க் ஸ்கூட்டரும் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

மஹிந்திரா - பியாஜியோ ஸ்கூட்டர் வெளிவருவதில் தாமதம்..!!

தொடர்ந்து 2018 ஆட்டோ எக்ஸ்போவில் சுஸுகி வெளியிட்ட புர்க்மன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

மஹிந்திரா - பியாஜியோ ஸ்கூட்டர் வெளிவருவதில் தாமதம்..!!

இந்தியாவில் பிரபலமாகி வரும் 125சிசி ஸ்கூட்டர் செக்மென்ட்டில் மஹிந்திரா நிறுவனம் கால்பதிக்க தீவிரமாக தயாராகி வருகிறது.

இதற்கிடையில் அரசின் பிஎஸ் 6 எஞ்சின் கொண்ட வாகன விற்பனையும் மஹிந்திராவை சிந்திக்க வைத்துள்ளது.

மஹிந்திரா - பியாஜியோ ஸ்கூட்டர் வெளிவருவதில் தாமதம்..!!

2020ம் ஆண்டு முதல் பிஎஸ் 6 எஞ்சின் கொண்ட வாகனங்கள் மட்டுமே விற்கப்படும் என்பதால், அதற்கான விலை நிர்ணயம் பற்றிய தகவல்களும் பெரிய ஆவலை தூண்டியுள்ளன.

மஹிந்திரா - பியாஜியோ ஸ்கூட்டர் வெளிவருவதில் தாமதம்..!!

மீண்டும் தீர சிறப்பாக ஆலோசித்து தனது ப்ரீமியம் தர ஸ்கூட்டர் விற்பனையை அறிமுகம் செய்யும் முடிவில் மஹிந்திரா நல்ல முடிவையே எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Read in Tamil: Mahindra-Peugeot Scooter Launch Plan Put On Hold Find Out Why. Read in Tamil...
Story first published: Monday, March 5, 2018, 15:18 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark