2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் புதிய ரக இருசக்கர வாகனங்கள்- விவரங்கள்..!!

2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் புதிய ரக இருசக்கர வாகனங்கள்- விவரங்கள்..!!

By Azhagar

2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று முதல் 14ம் தேதி வரை நடக்கும் இந்த கண்காட்சியில் பல்வேறு நிகழ்வுகளை களத்திலிருந்து நேரடியாக பதிவு செய்து வருகிறது டிரைவ்ஸ்பார்க்.

இந்நிலையில் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் வாடிக்கையாளர்களிடம் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள புதிய ரக இருசக்கர வாகனங்கள் பற்றிய விவரங்களை அறியலாம்.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 ஆர்

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 ஆர்

சமீபத்தில் ஹீரோவின் புதிய எக்ஸ்ட்ரீம் 200 ஆர் பைக் இந்தியாவில் வெளியிடப்பட்டது. எக்ஸ்ட்ரீம் 200 எஸ் கான்செப்ட்டை தழுவி உருவாக்கப்பட்டுள்ள இந்த பைக், 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்படுகிறது.

நேக்கிடு ரக மோட்டார் சைக்கிளான இதில் 200 சிசி திறன் பெற்ற எஞ்சின் உள்ளது. ஏர்-கூல்டு தொழில்நுட்பத்தை பெற்றுள்ள இந்த எஞ்சின் 18.1 பிஎச்பி பவர் மற்றும் 17.2 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

ஹீரோ எக்ஸ்பிளஸ்

ஹீரோ எக்ஸ்பிளஸ்

2017 இஐசிஎம்ஏ மோட்டார் சைக்கிள் கண்காட்சியில் ஹீரோ மோட்டார்கார்ப் நிறுவனம் காட்சிப்படுத்திய பைக் தான் எக்ஸ்பிளஸ்.

எக்ஸ்ட்ரீம் மாடலில் உள்ள அதே 200சிசி எஞ்சின் தான் இந்த பைக்கிலும் உள்ளது. ஆஃப்-ரோடு தேவைக்கான இந்த பைக் 2018 ஆட்டோ எக்ஸ்போவின் முக்கிய வரவாக உள்ளது.

ஹோண்டா ப்ரீமியம் பயணிகள் ரக பைக்

ஹோண்டா ப்ரீமியம் பயணிகள் ரக பைக்

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஹோண்டாவின் புதிய நான்கு இருசக்கர வாகனங்கள் காட்சிக்கு வருவது முன்பே தெரிந்தது. அதில் நான்காவதாக வெளிவரும் இந்த பைக் தான் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

ப்ரீமியம் தர பயணிகள் ரக வாகனம் என்று மட்டும் இந்த நான்காவது பைக்கை பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ள ஹோண்டா, அதில் 125 சிசி எஞ்சின் பொருத்தப்படும் என்று கூறியுள்ளது.

சுஸுகி புர்க்மன் ஸ்ட்ரீட்

சுஸுகி புர்க்மன் ஸ்ட்ரீட்

சர்வதேச நாடுகளில் சுஸுகி விற்பனை செய்து வரும் புர்க்மன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் மிக பிரபலம். 125சிசி, 200சிசி, 250சிசி, 400 சிசி மற்றும் 600சிசி என பல்வேறு எஞ்சின் தேர்வுகளில் இந்த பைக் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவில் வெளிவரும் புர்க்மன் வாகனத்தில் 125சிசி எஞ்சின் தேர்வு இருக்கும் என்று தெரிகிறது. இதே எஞ்சின் தான் சுஸுகி ஏக்சஸ் ஸ்கூட்டரிலும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

யமஹா ஆர்15 வி3.0

யமஹா ஆர்15 வி3.0

கவர்ந்திழுக்கும் அம்சங்களோடு யமஹா தயாரித்திருக்கும் புதிய ஆர்15 வி3.0 மோட்டார் சைக்கிள் 2018 ஆட்டோ எக்ஸ்போவின் ஹைலைட். 155.1 சிசி லிக்விடு-கூல்டு எஞ்சின் பெற்ற இந்த பைக் 19 பிஎச்பி பவரை வழங்கும்.

அறிவிப்பு வெளியான நாள் முதல் இந்திய வாடிக்கையாளர்கள் யமஹா ஆர்15 வி3.0 பைக்கை ஆர்வமுடன் எதிர்நோக்கியுள்ளனர். இதை புரிந்துக்கொண்ட யமஹா நிறுவனமும், இந்த பைக்கிற்கான முன்பதிவு பணிகளை நாடு முழுவதும் தொடங்கியுள்ளது.

யமஹா ஆர்3

யமஹா ஆர்3

2017ம் ஆண்டில் பிஎஸ்4 எஞ்சின் தேர்வு இல்லாத காரணத்தினால் யமஹா ஆர்3 மோட்டார் சைக்கிளின் தயாரிப்பு பணிகளை யமஹா தற்காலிகமாக நிறுத்திவைத்திருந்தது.

தற்போது யமஹா இந்த பைக்கை மேம்படுத்தி 2018 ஆர்3 வெர்ஷனாக பிஎஸ்4 தேர்வுடன் விரைவில் வெளியிடுகிறது. 321சிசி பேரலல்-ட்வின் எஞ்சின் கொண்ட இந்த பைக் 41 பிஎச்பி பவர் மற்றும் 29.6 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர்

பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர்

பிஎம்டபுள்யூ மோட்டாராட் நிறுவனம், மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் நேக்கிடு ரக ஜி 310 ஆர் மோட்டார் சைக்கிளை இந்தாண்டு ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடுகிறது. 313சிசி எஞ்சின் திறன் பெற்ற இந்த பைக் 33 பிஎச்பி பவர் மற்றும் 28 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

ஜி 310 ஆர் பைக்கை தொடர்ந்து இதே நிகழ்வில் ஜி 310 ஜிஸ் மற்றும் அட்வென்ச்சர் ரக பைக்குகளில் பெரிய தயாரிப்பாக பார்க்கப்படும் எஃப் 750 ஜிஎஸ் மற்றும் எஃப் 850 ஜிஎஸ் ஆகிய பைக்குகளையும் பிஎம்டபுள்யூ மோட்டாராட் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்துகிறது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்.டி.ஆர் 160

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்.டி.ஆர் 160

டிவிஎஸ் மோட்டார் கம்பெனி என்றாலே நம் பலருக்கும் நினைவில் வரும் முதல் மாடல் அப்பாச்சி தான். இதன் புதிய தலைமுறை மாடலான அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகிறது.

வடிவமைப்பில் இந்த பைக் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது விற்பனையில் உள்ள அப்பாச்சி பைக்கின் அதே 160சிசி எஞ்சின் தான் புதிய ஆர்டிஆர் மாடலிலும் இடம்பெற்றுள்ளது.

அப்ரிலியா எஸ்.ஆர் 125

அப்ரிலியா எஸ்.ஆர் 125

ஸ்போர்டி திறன் பெற்ற அப்ரிலியா எஸ்.ஆர் 125 ஸ்கூட்டர் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகிறது. 125சிசி திறன் பெற்ற இந்த ஸ்கூட்டர் இந்தியாவில் பல பியாஜியோ விற்பனையகங்களில் தென்பட்டது.

அப்ரிலியா எஸ்.ஆர் 150 ஸ்கூட்டரின் அதே வடிவமைப்பு அம்சங்கள் தான் இந்த புதிய ஸ்கூட்டரிலும் பின்பற்றப்பட்டுள்ளன. வெஸ்பா விஎக்ஸ்எல்/ எஸ்எக்ஸ்எல் ஸ்கூட்டரில் உள்ள 125சிசி எஞின் தான் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

யுஎம்

யுஎம்

மின்சார திறன் பெற்ற இந்தியாவின் முதல் க்ரூஸர் ரக மோட்டார் சைக்கிள் மாடலை 2018 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடுகிறது யுஎம் மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம்.

ரெனகேட் தார் என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த பைக்கில் 30 கிலோ வால்ட் மின்சார மோட்டார் உள்ளது. இது அதிகப்பட்சமாக 50 பிஎச்பி பவர் தரும்.

எம் பிளக்ஸ் மாடல் 1

எம் பிளக்ஸ் மாடல் 1

பெங்களூரை சேர்ந்த தொடக்க நிலை நிறுவனமான எம்பிளக்ஸ் மோட்டார்ஸ், மின்சார திறன் பெற்ற இந்தியாவின் முதல் சூப்பர்பைக்கை 2018 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடுகிறது.

மாடல் 1 என்ற பெயரில் வெளிவரும் இந்த பைக் மணிக்கு 200 கி.மீ வேகத்தில் செல்லும். சாதாரணமாக இதுபோன்ற வேகம் 600சிசி-650சிசி வரை திறன் பெற்ற எஞ்சின் மூலமே கிடைக்கும்.

ஏர்-கூல்டு ஏசி இன்டக்‌ஷன் கொண்ட இந்த மாடல் 1 பைக்கின் எஞ்சின் 67 பிஎச்பி பவர் மற்றும் 84 என்.எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

2018 ஆட்டோ எக்ஸ்போவில் வெளிவரும் முக்கிய இருசக்கர வாகனங்கள்

இருசக்கர வாகன செக்மென்டை பொறுத்தவரை அசரடிக்கும் திறனிலும், கவர்ந்திழுக்கும் அம்சங்களிலும் பல்வேறு மாடல்கள் 2018 ஆட்டோ எக்ஸ்போவை அலங்கரிக்கவுள்ளன.

இந்த நிகழ்வில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர், யமஹா ஆர்15 வி3.0, ஹோண்டாவின் புதிய பயணிகள் ரக பை மற்றும் சுஸுகியின் புர்க்மன் ஸ்கூட்டர் ஆகியவை முக்கிய ஹைலைட்டுகளாக இருக்கும்.

Most Read Articles
English summary
Read in Tamil: Auto Expo 2018 Most-Expected Bike And Scooter Launches And Unveils. Click for Details....
Story first published: Wednesday, February 7, 2018, 8:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X