ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தின் அதிசெயல்திறன் மிக்க மின்சார ஸ்கூட்டர்!

அதிசெயல்திறன் மிக்க புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. ஹீரோ AXHLE-20 ஸ்கூட்டரில் 4kW மின்மோட்டார் பயன்படுத்தப்பட இருக்கிறது.

By Saravana Rajan

அதிசெயல்திறன் மிக்க புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தின் அதிசெயல்திறன் மிக்க மின்சார ஸ்கூட்டர்!

பெட்ரோல் ஸ்கூட்டர்களின் செயல்திறனை ஒப்பிடும்போது மின்சார ஸ்கூட்டர்களின் செயல்திறன் மிக குறைவாக இருக்கிறது. மின்சார ஸ்கூட்டர்களை வாடிக்கையாளர்கள் ஒதுக்குவதற்கு இதுவும் முக்கிய காரணம். இந்த சூழலில், அதிசெயல்திறன் மிக்க புதிய மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருக்கிறது ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம்.

ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தின் அதிசெயல்திறன் மிக்க மின்சார ஸ்கூட்டர்!

AXHLE-20 என்ற குறியீட்டுப் பெயரில் இந்த புதிய மின்சார ஸ்கூட்டர் அழைக்கப்படுகிறது. ஹை-ஸ்பீடு சீரிஸ் என்ற வரிசையில் இந்த அதிசெயல்திறன் மிக்க மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருக்கிறது ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம்.

ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தின் அதிசெயல்திறன் மிக்க மின்சார ஸ்கூட்டர்!

ஏற்கனவே ஹை-ஸ்பீடு வரிசையில் Nyx, Photon மற்றும் Photon 72V ஆகிய மூன்று மாடல்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இதில், நான்காவது மாடலாக AXHLE-20 மின்சார ஸ்கூட்டர் வர இருக்கிறது. ஹை- ஸ்பீடு வரிசையில் இந்த புதிய மின்சார ஸ்கூட்டர் மிகவும் விலை உயர்ந்த மாடலாகவும் நிலைநிறுத்தப்பட இருக்கிறது.

ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தின் அதிசெயல்திறன் மிக்க மின்சார ஸ்கூட்டர்!

புதிய ஹீரோ AXHLE-20 மின்சார ஸ்கூட்டரில் 4kW மின்மோட்டார் பயன்படுத்தப்பட இருக்கிறது. இது அதிகபட்சமாக 8 பிஎச்பி பவரை வழங்கும் வல்லமையை பெற்றிருக்கும். அதிகபட்சமாக 85 கிமீ வேகம் வரை செல்லும். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால்ல 110 கிமீ தூரம் வரை பயணிக்கும்.

ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தின் அதிசெயல்திறன் மிக்க மின்சார ஸ்கூட்டர்!

இந்த ஸ்கூட்டரில் இருக்கும் டிஜிட்டல் இன்ஸ்ரூமெனட் க்ளஸ்ட்டரை புளூடூத் மூலமாக ஸ்மார்ட்போனுடன் இணைத்து பல்வேறு வசதிகளை பெற முடியும். இதற்காக, பிரத்யேக செயலியும் கொடுக்கப்பட இருக்கிறது.

ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தின் அதிசெயல்திறன் மிக்க மின்சார ஸ்கூட்டர்!

அங்க அடையாளங்கள் மறைக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு துவக்கத்தில் இந்த புதிய மாடலை ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த ஸ்கூட்டரில் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டமும் இடம்பெறும். இதனால், அதிக ரேஞ்ச் கொண்டதாக இருக்கும். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 4 மணி நேரம் பிடிக்கும்.

ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தின் அதிசெயல்திறன் மிக்க மின்சார ஸ்கூட்டர்!

அதிக செயல்திறன், சிறப்பான ரேஞ்ச் கொண்டதாக வரும் இந்த புதிய ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் மின்சார ஸ்கூட்டர்களுக்கு அதிக வர்த்தக வாய்ப்பு இருப்பதால், இந்த மாடல் மூலமாக தனது வர்த்தகத்தை வலுவாக மாற்றுவதற்கு ஹீரோ எலக்ட்ரிக் திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
English summary
Hero Electric, the leading electric two-wheeler manufacturer in the country, will be launching a new high-speed e-scooter soon. The new product will focus on both performance and range.
Story first published: Monday, May 21, 2018, 11:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X