2018 ஹீரோ டான் பைக் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

பிஎஸ்-4 எஞ்சின் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட புதிய ஹீரோ டான் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

Recommended Video

Angry Bull Almost Rammed Into A Car - DriveSpark

கூடுதல் சிறப்பம்சங்களுடன் 2018 ஹீரோ எச்எஃப் டான் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

2018 ஹீரோ டான் பைக் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான பட்ஜெட் விலை மாடல் டான். பிஎஸ்-3 எஞ்சினுடன் விற்பனை செய்யப்பட்டு வந்ததால், கடந்த ஆண்டு மே மாதம் இந்த பைக்கின் விற்பனை நிறுத்தப்பட்டது.

2018 ஹீரோ டான் பைக் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

இந்த சூழலில், சந்தைப் போட்டி அதிகரித்து வருவதை மனதில் கொண்டு இந்த பைக்கிற்கு புதுப்பொலிவு கொடுத்து, பிஎஸ்-4 எஞ்சினுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்.

2018 ஹீரோ டான் பைக் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

புதிய ஹீரோ எச்எஃப் டான் பைக்கில் பாரத் ஸ்டேஜ்-4 மாசு உமிழ்வு தர நிர்ணயத்திற்கு உட்பட்ட 97.2சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8.2 பிஎச்பி பவரையும், 8.05 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. இந்த பைக்கில் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

2018 ஹீரோ டான் பைக் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

இந்த பைக்கில் சிறிய அளவிலான டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த பைக்கின் ஹெட்லைட் பின்பகுதி, ஷாக் அப்சார்பர், ரிம், வால் பகுதி ஆகியவை கருப்பு வண்ணம் பூச்சு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

2018 ஹீரோ டான் பைக் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

இவை மட்டுமல்ல, பழைய மாடலில் க்ரோம் பூச்சுடன் இருந்த புகைப்போக்கி குழாய், சாரி கார்டு உள்ளிட்ட பாகங்கள் கருப்பு வண்ணத்திற்கு மாறி இருக்கிறது. மட்கார்டு, பெட்ரோல் டேங்க், பக்கவாட்டு கவுல்கள் ஆகியவை வேறு வண்ணத்தில் இருக்கிறது. புதிய பாடி டீக்கெல்ஸ் ஸ்டிக்கர்கள் கவர்ச்சியை தருகிறது. மேலும், இது இரட்டை வண்ணக் கலவை போல இருக்கிறது.

2018 ஹீரோ டான் பைக் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

இந்த பைக்கின் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புறத்தில் காயில் ஸ்பிரிங் கொண்ட இரட்டை ஷாக் அப்சார்பர்களும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த பைக்கில் முன்புறத்தில் 130மிமீ விட்டமுடைய டிரம் பிரேக்கும், பின்புறத்தில் 110மிமீ விட்டமுடைய டிரம் பிரேக்கும் பொருத்தப்பட்டு இருக்கிறது.

2018 ஹீரோ டான் பைக் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

இந்த பைக் 105 கிலோ எடை கொண்டது. இந்த பைக்கில் 9.5 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக் சிவப்பு மற்றும் கருப்பு ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.

2018 ஹீரோ டான் பைக் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

புதிய ஹீரோ எச்எஃப் டான் பைக் ரூ.37,400 எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும். ஒடிஷா மாநிலத்தில் மட்டும் இப்போது விற்பனைக்கு கிடைக்கும். அடுத்த ஓரிரு மாதத்தில் நாடுமுழுவதும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும். இந்த பைக் செல்ஃப் ஸ்டார்ட் வசதி இல்லை என்பது ஏமாற்றமான விஷயம்.

Most Read Articles
English summary
India's largest two-wheeler manufacturer Hero MotoCorp has launched the 2018 HF Dawn commuter motorcycle in India. The 2018 Hero HF Dawn is priced at Rs 37,400 ex-showroom (Odisha)
Story first published: Saturday, January 20, 2018, 15:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X